இடுகைகள்

நான் கல்லு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Naan Kadavul + நான் கல்லு

சமீபத்தில் நுகர்ந்த இந்த கஞ்சா போதை இன்னும் தெளியவில்லை எனக்கு . நம்மை சுற்றி நடக்கும் இந்த கண்றாவிகளை நாம் கண்டுகொள்ளாமல் இருப்பது எருமை தன் மேல் மொய்க்கும் ஈக்களை காகங்களை கண்டு கொள்ளாமல் இருப்பதை ஞாபகம் படுத்தியது . அந்த கை கால் இல்லாத சாமீ எப்படி தன் கண் முன்னே நடக்கும் அநியாயங்களை கண்டு கொள்ளாமல் பொருமி வாய் மூடி இருக்காரோ அது போலே தான் நாமும். சோனியாவும் ஜெயலலிதாவும் கருணாநிதி யும் எப்படி இலங்கை பிரச்சனையில் சாதித்து காட்டி கொண்டு இருக்கிறார்களோ ....அது போல . எதுவும் நம் கையில் இல்லை , படித்த வசதியான அப்பா அம்மா விற்கு பிறந்தது எப்படி நம் கையில் இல்லையோ அது போல பிச்சைக்காரன் ஆவதும் நம் கையில் இல்லை என்னும் உண்மை சுரீர் என்றது . கற் கடவுளும் காலத்தே கல்லாதவரை கட்டு படுத்த கண்டு பிடிக்க பட்டதொரு கருவி தான்னென்பது கருத்தானது .