இடுகைகள்

ஏப்ரல், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மல்லி....தேவதைகளின் பூவிது...!!

சிறு வயது முதலே....மல்லிப்பூ பிடிக்கும்.... மல்லிபூவேய்.....!!! தெருக்களில் எதிரொலிக்கும் அவன் அடித்தொண்டை குரல்...!! அம்மா கூப்பிட சொன்னவுடன்....ஓடிபோய் வாசலில் நின்று கொண்டு ... 'ஏய்...மல்லிபூவேய்'.....என்று அதே அடித்தொண்டையில் கிண்டல் தொனிக்க கத்துவதும் பிடிக்கும்...!!! அரும்பு மீசை அரும்பும் போதே....அரும்பும் மல்லி மீது ஆசை...!! என்னவளின் தலைமேல் ஒய்யாரமாக உட்கார்ந்துகொண்டு போகையில் ......என்னை பார்த்து கேலி செய்வது போல் ஒரு மாயை...!! கருவி கொள்வேன் எனக்குள் ....இருடி இரு....ஒரு நாள் நானும்...!!! காதலிக்கும் போது....கீழே உதிரும் அவளின் .....ஒற்றை மல்லியை..திருட்டுத்தனமாய்.....பாட புத்தகத்தில் பாடம் பண்ணி வைத்தது மனப்பாடமாய் இன்றும்... மாற்றான் தோட்டத்து மல்லி ஆனபின்னும் தலை குனிந்து மௌனித்து விட்டு சென்றாள்.... தலை நிறைய மல்லியுடனும் கண் நிறைய கண்ணீருடனும்...... முதலை கண்ணீரை முதன் முதலாய் நேரில் பார்க்கின்றேன்....... அப்போதும் மல்லி என்னை பார்த்தது.....இப்போது கொஞ்சம் அனுதாபத்துடன்......!! முதன்முதலாய் தோன்றியது.....மல்லி தேவ அடியாளின் பூவோவென்று.....!! காலம் க

மல்லி...தேவ அடியாளின் பூவிது...!!

மழலையாக இருந்த போது.... மழலையையும் ‘மண்’ணையும்.... விரும்பினேன்....!! மம்மி தலை மல்லிகையை மட்டும் அதிகமாக விரும்பினேன்...!! பெரியவளாக ஆன போது ...பெரியவளை சற்று கம்மியாக விரும்பினேன்....!! சில வரைமுறைகளினால்.... மல்லிகையை மட்டும் அதிகமாக விரும்பினேன்.....! பெரியவளாக ஆன பின்....மல்லிகையில் மயங்கினேன்....!! பூத்து குலுங்கும் பருவத்தில்...மல்லிகையுடன் முயங்கினேன் ....!! பிறகு...'அது' ஆனது......அதுதான்... அந்த கண்றாவிக்கு மறுபெயர்....'கல்யாணம்'...!! அப்போதும் மல்லியுடன் மணகோலத்தையும் ..... மணவாளனுடனான மனக்கோலத்தையும் விரும்பினேன்...!! மல்லிகையை மட்டும் அதிகமாக விரும்பினேன்.....! ஆனால் இப்போது தான் புரிகிறது....மல்லிகை....ஒரு தேவ...க்களின் பூவென்று...!! இப்படியும் ஒரு அர்த்தம் உண்டா......முதன் முறையாய்....வெறுத்தேன் அந்த மல்லிகையை...!! இன்று பேருந்தின் ஜன்னல் கம்பிகளில் சிந்திக்கிடந்த என் கண்ணீர் திவளைகளுடன் விளையாடி விட்டு ...நிமிர்கையில் ... கவனித்தேன்... ஒருவன் மல்லிபூ வாங்கி செல்வதை......அவன் வீட்டில் இன்று ஒரு தேவ....காத்து கொண்டிருக்காள் போல......எண்ண