மல்லி...தேவ அடியாளின் பூவிது...!!

மழலையாக இருந்த போது.... மழலையையும் ‘மண்’ணையும்.... விரும்பினேன்....!!
மம்மி தலை மல்லிகையை மட்டும் அதிகமாக விரும்பினேன்...!!

பெரியவளாக ஆன போது ...பெரியவளை சற்று கம்மியாக விரும்பினேன்....!!
சில வரைமுறைகளினால்....
மல்லிகையை மட்டும் அதிகமாக விரும்பினேன்.....!

பெரியவளாக ஆன பின்....மல்லிகையில் மயங்கினேன்....!!

பூத்து குலுங்கும் பருவத்தில்...மல்லிகையுடன் முயங்கினேன் ....!!


பிறகு...'அது' ஆனது......அதுதான்... அந்த கண்றாவிக்கு மறுபெயர்....'கல்யாணம்'...!!

அப்போதும் மல்லியுடன் மணகோலத்தையும் .....
மணவாளனுடனான மனக்கோலத்தையும் விரும்பினேன்...!!

மல்லிகையை மட்டும் அதிகமாக விரும்பினேன்.....!

ஆனால் இப்போது தான் புரிகிறது....மல்லிகை....ஒரு தேவ...க்களின் பூவென்று...!!
இப்படியும் ஒரு அர்த்தம் உண்டா......முதன் முறையாய்....வெறுத்தேன் அந்த மல்லிகையை...!!

இன்று பேருந்தின் ஜன்னல் கம்பிகளில் சிந்திக்கிடந்த என் கண்ணீர் திவளைகளுடன் விளையாடி விட்டு ...நிமிர்கையில் ...
கவனித்தேன்...
ஒருவன் மல்லிபூ வாங்கி செல்வதை......அவன் வீட்டில் இன்று ஒரு
தேவ....காத்து கொண்டிருக்காள் போல......எண்ணி எனக்குள்ளே சிரித்து கொண்டேன்....!!

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்