சுட சுட மழையில ஒரு ட்ரிப்

சீரடி - ஷிர்டி - சாய் பாபா -நமக ..!!

கீழ் வீட்டு பொண்ணு ...பொண்ணா அது...அந்த கத்து  கத்துது ...அதுவும் ஹிந்தி-ல .
இத்தனைக்கும் அது மதுரை பொண்ணு . வடநாட்டுக்கு போய் ஹிந்தில அவ்வளோ கேட்ட வார்த்தை கத்துக்கினு வந்து , இங்க வச்சு திட்டுது .

எனக்கு ஓரளவு புரியும் பட் கெட்ட வார்த்தை அதுவும் கலீஜ்  வார்த்தை தெரியாது. பாழாப்போன ஹிந்தி-ய  திணிக்காம விட்டதுக்கு நன்றி ஆண்டவனே...!
ஒரு வகையில எனக்கு பெருமை . நம்மூரு பொண்ணு ...ஹேய்..ஹேய் .. ...வடநாட்டுக்காரன  ஹிந்தில லெஃப்ட் ரைட்  வாங்குனா ?..ஹேய்..ஹேய் .. இருக்காதா பின்னே...ஹேய்..ஹேய் ...

ஜாதி மதம் இனம் கடந்து எல்லா ஆம்பளைங்களும்  எவ்ளோ வீரனா இருந்தாலும் அமைதியா இருக்குற நேரம் பொஞ்சாதிங்க சாமியாடுற நேரம் தானே பாஸ்.

புருஷனா  work பண்றவர  (அவரு தான் அந்த வடநாட்டு வேங்கை ) போட்டு பொளந்து கட்டும் . கத்துற கத்துல கண்டிப்பா அவரு ஜென் நிலை அடைஞ்சுருப்பாரு . நானே சாட்சி. நானும் சாட்சி .

அவரு சிரிக்குறத பாத்தா நம்ம டெபுட்டி சிரிக்குறா மாறியே இருக்கும். யாரோ பின் புரத்துல கொக்கி மாட்டிவிட்டா மாறி...(கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது கமலுக்கு பண்ணினா மாதிரி ) வராத வாய வலுக்கட்டாயமா வளைக்க வேண்டியது ...புன்னகையாமாம் ..!



வீட்டுல ஒரே சண்டை... பின்னே சொல்லாம கொள்ளாம சென்னை-ல போய்  நம்ம அருண் நடத்தும் தமிழ்ஸ்டுடியோ  டைரக்டர் workshop கலந்துக்கிட்டா...?

நம்ம தல மிஷ்கின் நடத்துற workshop வேற ...விட்ர முடியுமா ...முதல் ஆளா புக் பண்ணிட்டேன். அங்க போன அப்புறமா தான் தெரிஞ்சது ...என்ன மாறி 200 பேரு புக் பண்ணிருக்கானுங்க ன்னு . அதுல பாதி பேரு ...லஞ்ச்-க்கு பிரியாணி இலவசம் ன்னு போட்டதுக்கு கண்ண விரிச்சி புருவத்தை தூக்குன பயலுக. எல்லாம் நம்ம பயகதேன் . மதுரை , தேனி  மாவட்டம் ...எத்தனை பாலாவோ...பாரதிராஜாவோ , வைரமுத்துவோ, இளையராஜாவோ ...?!!

அதுவும் அந்த பிரியாணிக்கு வரும்போதே கொஞ்சம் வறுவலும்,குருமாவும் டிபன் ல பேக் பண்ணி கொண்டு வந்துச்சு பாரு ஒரு 100kg தாஜ்மஹால் .
என்னா பிளானிங் ...என்னா ரசனை... ?

எதோ கிராமத்து Touring Talkies மாறி நெருக்கி புடிச்சு 100 பேரு உக்காருற ஹால்ல 200 பேரு ...அதுவும் தரையில சம்மணங்கால் போட்டு உக்காந்தா ...கொஞ்சமாச்சும் இரக்கம் வேணாமா பாஸ்.? 100kg  தாஜ்மஹால் உக்காந்தாலும் எழுந்தாலும் திருவிழா தான். பின்னாடி இருந்து ஒரே சத்தம் .
'பாஸ் ...ஒரு ஜேசிபி இருந்தா கொண்டுவந்து தூக்கி விடுங்க பாஸ் ' ன்னு .

பட் மிஷ்கின் பாத்த உடனே எல்லாம் மறந்து பறந்து போச்சு. வண்டான்டா தலைவன் ன்னு . நைட் 10 மணிக்கு ஆரம்பிச்சு விடிய விடிய ...5 மணிவரைக்கும் ...முதல் 3 மணிநேரம் மனுஷன் உக்காரவே இல்ல...தண்ணியும் குடிக்கல.

கண்ணுல குலெர்ஸ்  போட்டுக்கிட்டு சேருல உக்காந்துகிட்டு கால் மேல கால் போட்டுக்கிட்டு அப்பப்போ மினெரல் வாட்டர் , காபி , செவென்  அப்  குடிச்சிட்டு ஸ்டைலா பேசுவாருன்னு பாத்தா ....

நின்னுக்கிட்டே மனுஷன் பேசுறான்யா ....நம்ம குழந்தைகளுக்கு எவ்ளோ நல்லது சொல்லி குடுத்தாலும் கேக்காதுங்க .But நீங்க எப்படி behave பண்றீங்களோ அத அப்டியே காப்பி பண்ணுங்க ...
அவரு சொன்ன விஷயம் கொஞ்சம் தான் பாதிச்சது...பட் இவ்வளவு வசதி பேர் வந்த பின்னாடியும் இவ்வோளோ ஹார்ட் ஒர்க் ...? ஒரு வேல VICE VERSA-வோ ?

நீ இதுக்கு சரிப்பட்டு வரமாட்ட ...நான் எங்க டாடி வீட்டுக்கே போறேன்...'
சரி எப்போவும் போல கால நேரம் பாக்காம காலைல காலு காலு னு    கத்தும் கழுத ...ன்னு விட்டா ...பேக்கர்ஸ் அண்ட் மூவெர்ஸ்க்கு கால் பண்ணி
கால் மணி நேரத்துல வாங்க-ன்றா ..!
ஏம்மா கால் மணி நேரத்துல வர்றதுக்கு நான் என்ன 'கால் பாய்-யாமா ?' ன்னு கேட்டான் போல...போன டங்குனு வச்சிட்டு கெளம்பிட்டா ...கால் மணி நேரத்துல...!

அப்புறம் சாயங்காலமா சமாதானமாயிடும் கழுத ன்னு  விட்டுட்டேன்.
ரெண்டு நாள் நல்லா போச்சு...
மூணாவது நாள் எனக்கு ஒரு sms ...' புளிச்சாதம் பண்ணித்தரவா ன்னு ?
 என்ன திடீர்னு...ன்னு  போனை பாத்துட்டே ஈன்னு பல்ல காட்டிட்டு
நின்னா...அடுத்த sms . எனக்கு மூஞ்சி மூஞ்சூராட்டம் ஆயிடுச்சி.
"...கொண்டு போய்  கீத்துக்கு குடுத்துட்டு வாயேன் "-ன்னு

அட பிக்காளி பய மவளே...போட்டு குடுத்துட்டியா...நல்லா வழுச்சு சாப்பிட்டு ...ஏப்பம் விட்டுட்டு ..என் பொண்டாட்டிக்கு போன் பண்ணி ...பாரு உன் புருஷன் எனக்கு புளி சாதம் குடுத்தான் ...செம டேஸ்டு ...எனக்கும் கொஞ்சம் சொல்லித்தாயேன்-ன்னு
...ஜாடைக்கு நமீதா மாறி வேற இருப்பா ..அந்த பீஹாரி பண்ணு ....மூஞ்சி என்னமோ... நம்ம வினிதா மாறிதான்  இருக்கும். அதான் அக்கப்போருக்கு ஆணி வேர் .
செம டேஸ்டு ...எனக்கும் கொஞ்சம் சொல்லித்தாயேன்-ன்னு சொன்னாளே ...விநயமில்லாம சொன்னாளா ...இல்ல விவகாரமா சொன்னாளா தெரியல நம்ம டெபுட்டி மாறி . 'என் தம்பி -க்கு விமானம் குடுத்து உதவிய பாதுகாப்பு அமைச்சருக்கு மனமார்ந்த நன்றிகள் ன்னு ' - பாவம் இன்னி வரைக்கும் அந்தம்மா கன்பூயுஸ் ஆயிட்டே இருக்காம். இவரு விநயமில்லாம சொன்னாரா  ...இல்ல விவகாரமா  சொன்னாரா-ன்னு ??


உடனே தாலிய கழட்டி எறிஞ்சுட்டாப்ல  ...அடிப்பாவி ன்னு கொதிச்சு ஒரு அறை/ரை  குடுத்துறலாமா ன்னு நெஞ்சுல இருந்து யோசிச்சு...பின்னால மூலைல இருந்து யோசிச்சு...தங்கம் விலை கிடு கிடுன்னு ஏறுதே ....நாம வேற ரொம்ப நாளா ஒரு நல்ல கேமரா வாங்க காசு இல்லாம நமக்குள்ள தூங்கிட்டு இருக்க Steve Mc  curry -ய எழுப்பாம இருக்கோமே ...ம்ம்..எழுப்பிரலாமா ...?  தாலி கொடிய பாத்த காஞ்சுபோன குடிகாரனாட்டம் மனசு தள்ளாடிருச்சு .

அப்புறம் அந்த கீழ் வீட்டு பொண்ணு தான் சாய் பாபா கோயிலுக்கு போய்ட்டு தான் வாங்களேன்-ன்னுச்சு . ரொம்ப நல்ல பொண்ணு . எல்லா புருஷனுக்கும் அடுத்த பொண்ணு நல்ல பொண்ணு . எல்லா பொஞ்சாதிகளுக்கும் அதே .

சரி ஷீர்டி எதோ பெங்களூரு-ல இருந்து பக்கமா இருக்கும் போலன்னு நெனச்சா ...புனே போய்  போணுமாம்.
அப்புறம் அதுக்கு ஒரு டிஸ்கஷன் .
அஹமது நகர் போனா 160 km தான் .
இல்ல நேரா ஷீர்டி ஏர்போர்ட் போயிரலாம் .


ஒரு tourist consultancy ய ஆன்லைன்ல புடுச்சி கேட்டா அது தலைக்கு 13k கேட்டது . பெங்களூரு ஏர்போர்ட் முதல் பெங்களூர் ஏர்போர்ட் வரை- ன்னு .
நான் வீடு முதல் வீடு வரை வச்சிக்கலாமான்னு கேட்டேன் .
செல்லாது ...செல்லாது ...ன்னு  கத்திருச்சி .
ஏன்னா எங்க ஏர்போர்ட் 55 km கேப் புடிச்சா 1400 + return 1400 = 2800 ரூ கோவிந்தா .
அது குர்காவ்ன்-ல உக்காந்துட்டு எனக்கு மும்பை போறதுக்கு பேரம்பேசுது .

ஷீர்டி-பிளைட் ரொம்ப கஷ்டம் - எப்போவுமே  பிளைட்-ful . பயங்கர காஸ்டலி வேற ..15K தலைக்கு .
மும்பை தான் சீப் .
மும்பை ல இருந்து 1900 மட்டுமே  தலைக்கு . சூப்...பர்-ல . போனப்புறம் தான் தெரிஞ்சுது என்ன பர் -ன்னு...

"மும்பைல பயங்கர பேமஸ்  சித்த்தீ விநாயகர் கோவில் போலாம் " - பெரிய   குஷியோட சொன்னா  பாக்கணும் ...
என் பொண்டாட்டி படிச்சவ ...மாதிரி..
"என் பொண்டாட்டி லூசு"- செம டைட்டில் பிளாஷ் ஆச்சு .உடனே ரெஜிஸ்டர் பண்ணனும் .
தெருமுக்குல இருக்குற விநாயகர் கோயிலே போறதில்லையாமா ...பிலைட்  புக் பண்ணி விநாயகர் கோவில்....உன்ன எல்லாம் பெத்தாய்ங்களா ...?
-"என்னங்க ..பெத்தாய்ங்க ..?'"
அய்யயோ சத்தமா பேசிட்டனா ....?

 .........அப்புறம்  ஜூஹூ .பீச் போலாம்  னா .  எனக்கு ஒரு ஹிந்தி மூவி-ல  டூ பீஸ் போட்டு   ஸ்லோ மோஷன்-ஓடி வர்ற நடிகை பிளாஷ் ஆச்சா ...உடனே மண்டைய ஆட்டிட்டேன். கல்யாணத்துல ஆரம்பிச்சு ஆம்பளைங்க செய்யுற தப்பு இந்த மாறிதான் கன்டினியூ  ஆயிட்டே இருக்கு .
எதையோ நெனச்சு எதையோ ஓகே பண்ணிர வேண்டியது .
பொண்ணு போட்டோ பாத்த உடனே மண்டைய ஆட்டிற வேண்டியது ...தான் பாத்த தமிழ் மூவி -ல தல நெறைய பூவெச்சு தல குனிஞ்சு பட்டு புடவைல பணிவா தரைல உக்காரா மாறி...
அது என்னனா ... ஒரே வருசத்துல ஜெகன்மோகினி மாதிரி   அடுப்புக்குள்ள காலவிட்டு உக்காந்துருக்கும் .


ஒரு வழியா இன்னொரு கன்சல்டண்சி ல ஓகே பண்ணியாச்சு.
எல்லா கன்சல்டன்சியும் பொண்ணுங்கள தான் ஏஜென்டா போடுறானுங்க .
கில்லாடி பசங்க.
அந்த பொண்ணுக்கு நான் போட்ட மெயில்-ல ...அய்யா சாமி...எல்லாம்  இருக்குப்பா ..ஆள விடு ன்னு ஆயிடுச்சு.

1. எங்க இருந்து எங்க போறோம்...எப்போ போறோம்...எப்படி போறோம்..?
2. என்ன கார் ...சேடனா ...ஹேச் பேக்கா ...?
கடைசி நேரத்துல மழைன்னு கேள்விப்பட்டதும் - SUV எவ்ளோ வரும்...? - என் wife  முறைக்க ..."சரி விட்று" ...
3. கார் ல பென்ட்ரைவ் போர்ட் இருக்கா ..? என்னாது ..இல்லியா ...அய்யோ மோசம் போயிட்டேனே சாமி -ன்னு சாமி ஆடவும் ...சரி ட்ரை பண்ணலாம் சார் ..ன்னு சொன்னா . நோ ட்ரை - இருக்கணும் . ரெண்டுநாளா எங்க பேமிலி சாங்ஸ் சூஸ் பண்ணிட்டு இருக்கோம் . I DON'T WANT ANY LAST MOMENT SURPRISE ன்னு  சவுண்ட்  விட்டுட்டு பூண்டு கறிவேப்பிலை போட்ட பொரி சாப்பிட போயிட்டேன்
4.  டிரைவர் background செக் பண்ணேளா ? -
-பண்ணியாச்சு சார் ?
-அப்போ அந்த ரிப்போர்ட அனுப்ப முடியுமா ? - நோ ரெஸ்பான்ஸ்
என் wife - "இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல "
...அவளையும் சிசி ல வைக்க சொல்லி உத்தரவு.

Go-Air தான் போகவும் வரவும்...என்னது கோ ஏரா ...ன்னு நான் முகத்தை சுளிக்கவும் ...
"ஆமா இவரு பெரிய மல்லையா மச்சினன் ...விஸ்தாரா- பிஸ்னஸ் கிளாஸ் - ல தான் போவாரு..."-
 -இல்ல ..சாப்பாடு  சூப்பராம் ....அதான் .
" எல்லாம் போற வழியில ஆந்திர மெஸ்-ல பாத்துக்கலாம்."
அடிப்பாவி...!

5.47 க்கு பிளைட் . என்னமோ சொன்ன நேரத்துக்கு எடுத்துர்ரா மாறி. accuracy  வேற .
6 மணிக்கு தான் எடுத்தானுங்க .
 1 மணிக்கே எந்துரிச்சு குளிச்சிட்டு கிளம்பியாச்சு . எவளோ நாளாச்சு...இந்த மாறி அர்த்த ராத்திரில குளிச்சி ?.
ஏர்போர்ட்க்கு 2 மணிநேரம் ஆகும் .
குட்டி கள அப்புடியே தூங்குற நேரத்துல தூக்கி கார் ல போட்டு  போற பிளான் .
நாங்க பண்ற அழிச்சாட்டியத்த கேட்டு ...(பாத்ரூம்ல கொஞ்சம் பாடுவேன்.)என் மூன்றரை வயசு கவின் பாத்ரூம் கதவை தட்டி மழலை மொழியில் ..'டாடி...பாடாதீங்க ' டிஸ்டர்ப் ஆ இருக்குல்ல ...நான் தூங்கவேணாமா.?
கோவமா கத்துறான்.  வர வர ரொம்ப பேசுது நானெல்லாம் 3.5 வயசுல பால் குடி மறக்கல ...

அவன் எழுந்துட்டு ...'ஏய் நர்த்து...மணி 2 ஆச்சு ..பிளைட்  போயிரும் ..சீக்கிரம் எந்திரி -ன்றான் அவன் அக்காவ....அவனோட வாய்க்கு இந்த 7.5 வயது நர்த்தனா  தான் காரணம் . அது வாய் எல்லாம் அடிச்சு முடிச்சு இப்போ எல்லாம் ஆக்சன் தான். 'டாடி ...'அப்புடின்னு சொல்லி கட்டில் மேல கிடக்குற
துண்டை பாத்தா ..நாம எடுத்து காய போடணும்னு அர்த்தம்.
அது நான் தொடச்ச துண்டு ...!
அதே அவுங்க யூஸ்  பண்ண துண்டுனா ....ப்ளீஸ் டூடு ! ன்னு ஒரு சவுண்ட் வரும் .டாட் ...டாடு...இப்போ டூடு .!

ஏர்போர்ட் -கு இன்னும் 10 kms ...இருக்கும்போது டிரைவர் பிரிட்ஜ்ல இருந்து இடப்புறமா இறங்கி அதுக்கு அடியிலே  மறுபடியும் வந்த திசையிலே போய் மறுபடியும் இடப்புறமா கட்  பண்ணி ஸ்ட்ராயிட்டா போக ஆரம்பிச்சான்.
அதாவது டிஸ்லெக்சியா வந்த குழந்தை போடுற P  ஷேப்புலே ...
 டர் ஆயிடுச்சி ..எப்போவுமே இந்த மாதிரி லாங் போகும் போது ஒரு பெரிய சைஸ் ஸ்க்ரூ டிரைவர் வச்சிருப்பேன். இப்போ ஏர்போர்ட் செக்கிங் இருக்குமே ...சோ ஒரு சின்ன பென்சில் சீவுற கத்தி -பேப்பர் கட்டர் -மட்டும் போட்டு ...அந்த பேக் -க என் கையிலே வச்சிக்கிட்டேன்.
அதுக்கு முன்ன ஒரு தரம் பெரிய பிட்சுவா எடுத்துட்டு போயி அந்த பைய கார் டிக்கி ல போட்டுட்டேன்....அப்போவும் இப்படித்தான் கார் வழக்கமான ரூட் ல இருந்து விலகி வேற ரூட்ல போன உடனே கத்திய தேடுனா...பே-ன்னு முழிச்சிட்டு ...அப்புறமா மெயின் ரோடு வந்து கனெக்ட் ஆன பின்னாடி நிம்மதி பெருமூச்சு விட்டேன்.

இப்போவே அத எடுத்து கையிலே வச்சிக்கலாமா ?
நானும் இந்த டிரைவர் ராஸ்கல் கிட்ட ..ஏன் இந்த பக்கமா போற...யூசுவல் ரோடு ல போக வேண்டியது தான -ன்னு ... எனக்கு தெரிஞ்ச கன்னடத்துல கேட்டா... நக்கலாவே பதில் சொல்லிட்டு வர்றான் . "இல்ல சார் இங்கிட்டு போனா டோல் பிளாசா தாண்டி ஷார்ட்டா போயிடலாம்..." இந்த ரோடு டெவெலப் ஆயிட்டு இருக்கு ...அது இதுன்றான் ...டேய் என் வயித்துல எதோ ஒன்னு டெவெலப் ஆவுதேடா ரேஸ்கெல் ...ன்னு நெனச்சிட்டு பின்னாடி திரும்பி பாத்தா என் wife பிரீஸ் ஆயி போயி உக்காந்துருக்கா ....அந்த ரணகளத்துலயும்  என் wife  பயப்படுறத பாத்து எனக்கு ஒரு சின்ன சந்தோஷம் .
இவன் வேற....கார  ஸ்டார்ட் பண்ணதுல இருந்து ஹூட கலைக்கவே இல்ல  பெரிய கில்லி விஜய்ன்னு நெனப்பு .
அவனை சொல்லியும் தப்பு இல்ல பெங்களூரு வெதெர் அப்படி .
இதே நம்மூருன்னா 'டிரைவர் தம்பி ...கொஞ்சம் அந்த முக்காட எடுத்துட்டு ஓட்டுங்கன்னு சொல்லி இருப்பேன் .
அவன் பக்கத்துல நான் ...பேச்சு குடுத்துட்டே  வர்றேன். வேணும்னா டீ  சாப்டுக்கோடா ன்னு  சொன்னேன் ...கார் எடுக்கும்போதே.

இந்த மாதிரி நேரத்துல அவனுங்களே வேணாம்னாலும் வம்படியா ஒரு காபி  கடையில நிப்பாட்டி "சூடா" ஒரு  காபி வாங்கி குடுத்தாதான் எனக்கு "ஆறும்".
oxymoron.

இதுக்குதான் ஓலா கார் புக் பண்ணியிருக்கணும். நெகடிவ் பீட்பேக் குடுக்கலாம். நான் ஒரு பிரைவேட் கேப் புக் பண்ணி இருந்தேன் . ஓலா -1400 இதுல 1100 ரூ .

நம்மூரு டிரைவர்-ருங்க எல்லாம் உஷாரு முன்ன கூடியே சொல்லிருவங்க. டெவெலப்ட் டிரைவர்ஸ் .
இதுங்க பூரம் இப்போ தான் ....டெவெலபிங் டிரைவர்ஸ் . ஒன்னும் பண்ண முடியாது.

ஒரு வழியா என் பையன்...டாடி அங்க பாருங்க பிளைட் ன்னு காது சவ்வு கிழியிறா மாறி  ஒரு கூச்சல் போட்டான் பாருங்க ...அப்போதான் எனக்குள்ள நடமாடிட்டு இருந்த புலிய கட்டி போட்டேன் . அப்பாடா அப்போ இவன் நிஜமாவே ஷார்ட் கட்ல கூட்டி  வந்துருக்கான்... கட்டேல போறவன்.

ஒரு வழியா அஞ்சே முக்கால் பிளைட் க்கு 3 மணிக்கெல்லாம் வந்துட்டோம்.
வயித்துல தவள கத்த அடடா ஒரு புளிச்சோறு கட்டிட்டு வந்துருக்கலாமேய்யா ன்னு சின்ன கவலை ஒரு ஓரமா .

ஏர்போர்ட் ல இட்லி வேல கேட்டா கடையையும் சேத்து விலை சொல்லுவானே . 3
இட்லி 350ரூ .
ஒரு மசாலா தோசை 450 ரூ .
சரின்னு சான்விச் போயிட்டோம்.
அங்க சான்விச்சை கட் பண்ணி குடுடான்னா ...சாரி சார் கத்தி நாட் அல்லோட்...ன்றான் ...டேய் அப்போ காய் கறியெல்லாம் எப்பிடிடா வெட்டுவீங்கன்னு கேட்டா எல்லாமே மெஷின் தானாம்.
நல்லா வருவீங்கடா..!

அப்புறம் அவன் கடையிலே ஒரு சில்வர் ஸ்கேல் மாதிரி ஒரு ஆயுதத்தை கண்டுபிடிச்சு குடுத்து ...இதை வச்சு வெட்டி குடுன்னு வீம்பு பண்ணி வெட்டி வாங்கிட்டு வந்துட்டேன். அவன் நான் எதோ புதுசா ஒரு மெஷின் கண்டுபுடிச்சு குடுத்தா மாதிரி ஒரு லுககு விட்டான்....

இப்போன்னு பாத்து என் wife - தூரத்துல ஈட்டிங் டேபிள்-ல உக்காந்துருக்கா ...!

நாம்மாளு கவின் தான் இப்போ பாயிண்ட் ஆப்  அட்ராக்ஷன் . இந்த மூலைல .இருந்து அந்த மூலைக்கு  ஓடுறான்....பிடிக்க ட்ரை பண்ணி... சாப்பிட்ட சான்விச் பூராம் போச்சு . மறுபடியும் பசிக்குது.
பிளைட்  அனௌன்ஸ் மென்ட் கேட்டு ...அப்பாடாண்னு திரும்புனா நம்மாள காணோம்....

......வரும்....
















 .















கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்