இடுகைகள்

மார்ச், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

'சிவ'காமி அத்தை..!!

சிவகாமி அத்தை....!! version 1. Publ ished on 04-03-2010   Version 2.0 20-dec-2015 "செவாமி....அடியே கிழட்டு சிறுக்கி....தெனமும் ஒரு குழுதாடி ( மாடு தண்ணீர் அருந்தும் தொட்டி ) திங்கரீல்ல? சரியா விளக்க மாட்ட...? முறன்ஜோறு (முறம் நிறைய சோறு..) தின்றதுகளுக்கு புத்தி இருக்காது-ங்குறது சரியாதான் இருக்கு...." சகட்டு மேனிக்கு சவட்டி எடுக்கும் பெரியம்மாவின் முறைவாசலுக்கு "இல்லம்மா...நான் நல்லாத்தான் விளக்குனேன்....." என்று மெதுவாக தனக்கு மட்டுமே கேட்கும்   குரல் ஒன்று கொல்லை புரத்தின் ஒரு ஓரத்தில் இருந்து வரும். செவாமி ...சிவாமி...செவகாமி...என்றல்லாம் அழைக்கபடும் சிவகாமி எனும் மூதாட்டியின் குரல். பாட்டி வயது என்றாலும் ... நாங்க அத்த-ன்னு தான் கூப்பிடுவோம் . அத்(தை)த  எங்களுக்கு எப்படி சொந்தம் என்பது...யாருக்குமே தெரியாத ஒரு புதிர்....! ..திடீரென்று...ஒரு நாள் ஞானோதயம் வந்து....அப்பாவிடம் கேட்டால் ஒரு சின்ன புன்னகை மட்டுமே பதில்....வற்புறுத்தினால்....ஒரு நீ..ண்ட உறவுமுறை வெளியே வரும். (இன்போசிஸ் Interview question puzzle  மாறி .... ) 'அதாவது ரா ...எங்க தாத்தாவும் ...