முட்யல
உதிரா இலைகள்.... or முட்யல ... (c) குஷியான காலத்தையே ரிஷி மூலமாய் கொண்டவன் நான்.... பள்ளி காலத்தின் ஒவ்வொரு இளம் நிமிடமும் கரைவதை கவலையோடு கடந்தவன் நான்... டைரியில் சேமிப்பதற்கென்றே சேட்டைகளை செவ்வனே சிலாகித்து செய்தவன் நான்... சிறு டைரிக்குள் அடங்கும் சிறுத்தையா எனது சேட்டைகள் ....? யானை கூண்டை யாசிக்கும் யாப்பிலக்கணம் அது... யப்பே ....! காதல், ருசியான கத்தரிக்காய் ....அதை கால் கிலோ வாங்கி குழம்போ கூட்டோ வைத்து தின்று விட்டு ... எதார்த்தம் எனும் எட்டி காயை முகர்ந்து பார்க்க பழகியிருக்க வேண்டும் ....இல்லை எந்தாய் தகப்பன் கற்று கொடுத்திருக்க வேண்டும். ...இல்லையா ? பள்ளிக்கூடமாவது சொல்லி கொடுத்திருக்க வேண்டும்... கருமம் ... நாம் கற்றதெல்லாம் கல்வியா...? காறித்தான் துப்ப வேண்டும்.... ...