முட்யல

 உதிரா  இலைகள்....
or 
முட்யல ...





(c) குஷியான காலத்தையே 

      ரிஷி மூலமாய் கொண்டவன் நான்....

பள்ளி காலத்தின்  ஒவ்வொரு  இளம்  நிமிடமும் கரைவதை 

             கவலையோடு கடந்தவன் நான்...

டைரியில் சேமிப்பதற்கென்றே  சேட்டைகளை செவ்வனே சிலாகித்து செய்தவன் நான்...


 சிறு டைரிக்குள்  அடங்கும் சிறுத்தையா எனது சேட்டைகள் ....?

யானை கூண்டை  யாசிக்கும் யாப்பிலக்கணம் அது...  யப்பே  ....!

காதல், ருசியான  கத்தரிக்காய் ....அதை

        கால் கிலோ வாங்கி குழம்போ கூட்டோ வைத்து தின்று விட்டு ...
               எதார்த்தம் எனும் எட்டி காயை முகர்ந்து பார்க்க பழகியிருக்க வேண்டும் ....இல்லை       எந்தாய்   தகப்பன் கற்று கொடுத்திருக்க வேண்டும்.
...இல்லையா ? பள்ளிக்கூடமாவது சொல்லி கொடுத்திருக்க வேண்டும்...
கருமம் ...
நாம் கற்றதெல்லாம் கல்வியா...?
காறித்தான் துப்ப வேண்டும்....

அறியாமை ...

ஒரு தலைமுறையையே அறிவற்ற ஆமை யாக்கி 
ஆழ் கிணற்றில் போட்டு  பாழடித்து விட்டது.

அட்டு பிகரோடு கெமிஸ்ட்ரி ஒர்கவுட் ஆகவே 

     சட்டை கிழித்து திரிந்த நமக்கு
அட்டாமிக் கெமிஸ்ட்ரி  ஆர்கானிக் கெமிஸ்ட்ரி எல்லாம் 
ஆனை  நிழலை ஆராய முற்பட்ட எறும்பு கதை தான் ....!

30 வயது வரை  வாழ்வின் மகத்தான லட்சியம் 'கல்யாணம்' என்று ஆனது.....

இதற்கு பெயர் ஒழுக்கம் என்றும்  ஓம்ப பட்டது  ?? 

'மாப்புள ...குனிஞ்ச தல நிமிர மாட்டாராம்ல ..' குசு குசுத்த பெண்களிடம் ...கத்த தோன்றியது ..'அட அடுப்பங்கரை அசடுகளா ...அவன் குனிஞ்சு இருந்தான் சரி ...எத பாத்துட்டு இருந்தான் தெரியுமா...? ' வென்று...



32 வயதில் ....ஆண்மை அதன் சறுக்கு மர விளையாட்டை தொடங்கும் வயதில்....

குமட்டில் குத்தி குமரி பக்கத்தில் என்னை குத்த வைத்தது கூறுகெட்ட சமூகம்....
பதர்த்து போன திரியை பத்த வைக்க முயற்சி  பல செய்தது....

மணப்பந்தலை 10 சுற்று சுற்றிவிட்டு ...'என்னங்கடா...  கல்யாணம் பண்ணி வைக்க சொன்னா ....மாரத்தான் ஓட விடுறீங்க ' - பாவம் 36 வயதில் மாப்பிள்ளை யான  மூட்டுவலி செந்தில் அலுத்து கொண்டான்.


16 வயதில் பெண்ணை  முழுதாக  'பார்த்து ' முடித்து 32 வயதில் வாழ்க்கையின் பெரும் பகுதியை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து விட்ட வெள்ளைக்காரன் எங்கே....?


32 வயதில் பெண் பார்க்க கூட்டி போய் ....'பேசுங்க தம்பி' எனும் பேத்தனமான 

என் சமூகம் எங்கே...?
வல்லரசு எப்புடியாடா ஆவும் இந்தியா ...?

மாப்பிள்ளையிடம்  "பெண்  பிடிச்சிருக்கா  ?"

'ஐயோ பையனுக்கு பொண்ண பிடிக்கணுமே'....
                                எல்லாம் 2002 காலம்.

இப்போ கல்யாணம் என்னும் 'வரம்' பையனுக்கு அமைய வேண்டும் ....


1.மதம் ஒத்து போக வேண்டும் -

2.ஜாதி - பின்னே 3.உள்-ஜாதி ஒத்து போக வேண்டும் -
கவுண்டருக்கு கவுண்டர் கவுண்ட்டர் ஆவாதாம் ...அதனினும் உட்பிரிவு வேட்டுவ கவுண்டர் தான் வேணுமாம்...!  
செட்டியாருக்கு செட்டியார்  மட்டும் செட் ஆவாதாம்  4ம் வீடு 4ம் வீட்டோடு சேராதாம் ....மீறி இதெல்லாம் அமைந்தாலும்  ....
அடுத்து அறிவு கெட்ட அப்பன் (ஆல் டாடீஸ் ...மன்னிச்சூ ...) ஜாதகம் பொருந்தனும் ...அதுவும் 10க்கு 8 பொருந்தனும் ....
..நான் கணக்கிலே கூட 10க்கு 6 வாங்குனதில்லே ...

எல்லாம் பொருந்தி வந்ததும் பொண்ணு தன்னோட  கண்டிஷன்ஸ்  போடும் பாரு  ....அப்பப்பப்பா ...அத்த கேட்டா  அமெரிக்காவே வடகொரியாகிட்டே unconditional சரண்டர் ஆயிடும் .....

மாப்பிள்ளை
6 அடி உயரம் -
6  இலக்கத்தில் சம்பளம் -
6  மாதத்தில் அமெரிக்கா போகும் உத்தியோகம் -
- ஆனால் அது
6 மாசமா தான் கிச்சன் சுத்தி பார்க்க பழகி இருக்கும் -
6 மாசத்து முன்னே ஒரு 'முண்டா பனிய'னை கழட்டி விட்டிருக்கும் .
6 மாதத்தில் பிறந்த ஆப்பிரிக்க யானை போல் இருக்கும் -(உபயம் : ஒரு நண்பனின்  கோபம் )
இதுவே இப்புடி என்றால் ...
கொஞ்சம் மூக்கு எடுப்பாய்  இருக்கும் 'மாலா'
எல்லாம் போடும் ஆட்டம் சொல்லி மாளா-து . 


'அழகிகளின்  அட்டகாசம்' - என்று   ஜெய் சங்கர் படமே எடுக்கலாம் .

மாலா ..இப்போ மாஷா -வாம் - மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்ச உடனே பேர ஸ்டைலா (?) மாத்திக்கிட்டாங்க . 

உண்மை தாங்க ...!
நானே அந்த பேர கேட்டுத்தான் கொஞ்சம் மெர்சல் ஆயி பொண்ண பாக்க வெறியானேன் . 
அதன் போட்டோ பாத்த பின்னே கிள்ளி விட்ட தீவாளி 'திரி'யானேன் .
அது போட்ட கண்டிஷன்ஸ் கேட்டு திராட்சை எட்டா 'நரி'யானேன் .


மாப்பிள்ளைக்கு அம்மா இல்லாட்டா அப்பா ஒருத்தர் தான் இருக்கணும் . ரெண்டு பேர சமாளிக்க முடியாதாம்.

- அப்போ குந்தி தேவியை தான் தேடணும்.

அக்கா தங்கச்சி ஒன்னு வேணா இருக்கலாம் ...ஆனா அதுவும் புகுந்த வீட்ல இருக்கணும்...இவுங்க புகுர்ற வீட்ல இருக்க கூடாது ....


'மாப்பிள்ளைக்கு சமைக்க தெரிஞ்சிருக்கனும் ....எனக்கு தெரியுமான்னு திமிரா கேள்வி கேக்க கூடாது'.


'நான் வேலைய ரிசைன் பண்ணுனா ஏன்னு கேக்க  படாது ....


'பிள்ளை குட்டி பிறந்த பின்னாடி நான் வேலைக்கு போனா தடுக்க கூடாது 

'  பிள்ளைய யாரு பாப்பா ? 
         ஆபீஸ் முடிஞ்சுட்டு 'அது' (husband) சும்மாதானே இருக்கும்.அது பாத்துக்கும் .

மாசம் ரெண்டு வாட்டி பொறந்த வீட்டுக்கு போவேன் ...பிளைட்-ல  தான் போவேன்.

 அப்புறம்.....'ம்ம் ..யோசிச்சு சொல்றேன் ...இப்பவே எல்லா கண்டிஷனையும் சொல்ல சொல்லி அதிகாரம் பண்ண கூடாது ...சொல்லிட்டேன் ஆமா...'

இந்த முறை- எல்லாம் முடிந்து -  கடைசியா பொண்ணு போட்டோவை காட்டுவானுங்க பாருங்க ....

அடடா...அடடடா .....என்ன ஒரு அலகு ....!
போனவாட்டி போட்டோ காட்டுன உடனே ரிஜெக்ட் பண்ணிட்டேனாம் .
என்ன ஒரு லாஜிக் ...என்ன ஒரு அறிவு....மார்க் சக்கர் பெர்க் எல்லாம் சின்ன பயல் தான் போங்க ...!!

ஒவ்வொரு கல்யாண ஆல்பமும்  இவ்வோளோ தடைகளை தாண்டி தான் டெவெலப் ஆகுது ...

இதுல காதல் கல்யாணம் மட்டுமே ...சுலபமான விஷயம்....!சந்தோஷ மான விஷயமும் கூட....
ஆனா அதுல அந்த பொண்ணு கிட்ட மாட்டிகிட்டு மொத்த மாப்பிள்ள வீடும் முழிக்கும் முழி இருக்கே....
கல்யாண செலவு ... 'போட முட்யாத்' ...!!!
உங்களுக்கு பிடிச்ச கலர் புடவை ...'எடுக்க முட்யாத்' ..!!
'மருமகளே...ஹனிமூனுக்கு எதுக்கு இவ்ளோ செலவு ...' கேக்க முட்யாத் ..!!

மார்க்கெட் போன தயாரிப்பாளர் vs டாப் ஹீரோயின்  இடையிலான உரையாடலே தான்...


எல்லாம் தலையில் கைவெச்சு உக்கார....இந்த தண்டம் கருமாந்திரம்  சொக்கிபோய்   இளிச்சுகிட்டே  சொல்லும் .....

" முடியாதுங்குறத ...எவ்ளோ ஸ்டைலா சொல்றா பாரு ...அதுல தாண்டா மச்சி நான் மயங்குனேன் ...."

ஏழரை  உன் தலையிலே உக்காந்துகிட்டு 'நான் போக முட்யாத் ..ன்னு சொல்லுது

-உனக்கு அது புரியல.....

உன் மண்டையில பாறையை தூக்கி போட்டாக்கூட நீ மயங்கிருவே மச்சான் ...போடட்டா ?


அதுக்கு எதுவுமே காதுல விழுகாது . அத மாத்த 'முட்யாத் '. சனியன் சாக்கடைக்குள் விழுவதை யாரும் தடுக்க 'முட்யாத்'.


எல்லாம் முடிஞ்சு ...நாளை காலையிலே கல்யாணம் எனும்போது 'பொண்ண காணோமாம்..!! ' - தலையை தொங்க போட்டு நிக்கும் பெண்ணின் தகப்பன் பின்னிருந்து ஒரு அசரீரி - வரும் பாருங்க .... awesome ...awesome ...


'பொண்ணு ஓடி போச்சு' - இது பப்ளிக் வெர்ஸன் .


'பொண்ணு ஓடி போச்சு ' - சரியான டைட்டில் இல்ல..? ஏன் யாரும் ட்ரை பண்ணல ?


அடுத்த வருஷமே ...அடுத்த அட்டெம்ப்ட் .....

 பொண்ணு போட்டோ ,,,ஜாதகம் ...ஜாதி...பிடிச்சிருக்கு ...பிடிக்கல....டௌரி ...இது எந்த சீனும் வராது....ஸ்ட்ரைட்டா மாப்பிள்ளை மணபந்தல்ல ....
டௌரியா ...அப்புடீன்னா? கௌரியோட ஒண்ணுவிட்ட தங்கச்சியா ..?- ம்பான் ...
லைட்டா பிரெஞ்சு பேர்டு வச்சு அட்டென்சன்ல உக்காந்துருப்பாரு....அப்போவே புரிஞ்சுக்கலாம் .....
"மாப்பிள...  செகண்ட் அட்டெம்ப்ட் ...!!! " 

'ம்ச்  ...ஏன் மாப்ள உன் பெர்சனாலிட்டிக்கு ஒரு பென்ஸ் காரு ..கீரு ..?  மெதுவா பத்தவைக்கும் 37 வயது, Eligible but Eliminated  எபிநேசர் மூஞ்சியில் கண்ணாலே எச்சில் துப்பி ...தூ ...ஓடிப்போ நாயே ...


தாலி கட்டி முடிச்சிட்டு ...மாப்பிள்ளையோட கண்ணு 'கடைசி  ரோ -குழந்தை வச்சிருக்க ஆண்ட்டி-ய ' ஏக்கமா பாத்து ஒரு பெருமூச்சு விடும் பாரு  ....அதுவும் பதிலுக்கு கண்ணீரை கண்ட்ரோல் பண்ண 'முட்யாம ' குனிஞ்சுக்கும் பாரு 

             ....ப்பா...போங்கடா நீங்களும் உங்க ஆட்டோகிராப்பும் ...

முட்யலடாஆஆ ...!!!!!




மரம் முழுவதும் உதிரா  இலைகள்....

    மனம்  முழுவதும் உதிரா இச்சைகள் ... (c)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்