துப்பறிவாளன் - ஒரு துப்பு துலங்குதல் - Drill down analysis of Thupparivaalan

thupparivaalan க்கான பட முடிவு


Drill down analysis of Thupparivaalan:

If anyone contradict , please feel free to point me out.

1. The boy puttting out his pocket money as 'coins'? nowadays do kids are getting coins as pocket money ??. That too he belongs to a rich family staying in a beach house.


இப்போயெல்லாம் யாருங்க , முக்கியமா பணக்கார பசங்க சில்லறை காசு பாக்கெட் மணி வாங்குறா....அது கிரெடிட் கார்டு டெபிட் கார்டு , மினிமம் 100 ரஸ். கொறைஞ்சு எது வச்சுருக்கு. என் பிரண்ட் பையன் அமேசான் ல அவனே ஆர்டர் பண்ணிக்கிறான் . 7 வயசு .ஒரு வாட்டி அப்புடிதான் அவன் கட்டுக்கடங்காத காளையா மாறி...98000 க்கு ஆர்டர் பண்ணிட்டான்.  sms  confirmation  மெசேஜ் பாத்துட்டு பதறி அடிச்சு வீட்டுக்கு கால் பண்ணா ...என்னடா ஆர்டர் பண்ணுனனா ...சர்ப்ரைஸ் ...அதான் வீட்டுக்கு வருமே அப்போ பாத்துக்கோ....அட பாவி மகனே...ன்னு ரெண்டு டோஸ் விட்ட பிறகு சொல்றான் ...பார்க்ல விளையாடுற ஜம்போ சைஸ் ஸ்லைடு , ரோலர் எல்லாம் ஆர்டர் பண்ணிட்டு அவன் பிரண்டுகிட்ட 'மச்சி... (....2வது படிக்குது ) ..நாளைக்கு என் வீட்டுல ஒரு பார்க்கே ரெடி பண்ணிட்டேன் ...உன் ஆள் விஷாலினிய கூட்டிகினு வந்துரு ..!! ) ....எப்பூடி?

2. On seeing heroine, how he is guessing that her Uncle is drunken, iron man, she is not having parents, blah..blah...Sherlock holmes always gives substantiation for his analytics.

ஹீரோயின பாத்த உடனே எப்புடி அவள் அங்கிள் ஒரு குடிகாரன் , iron (இரும்பு மனிதன் ?  ;-)  ) மேன் , அவளுக்கு அம்மா அப்பா இல்ல ... ....எப்புடி இப்புடி.....??.
அவ போட்ருக்க டிரஸ் அவளோடது இல்ல  ....ஏண்ணே  ??
(டெயிலர் கொஞ்சம் லூசா தச்சுருக்கலாம் இல்ல அவ கவலையில ஒடுங்கி போயிருக்கலாம்)...

 ஷெர்லாக் ஹோம்ஸ் கூட  இப்புடித்தான் சொல்வாரு...பட் தான் எப்புடி இந்த முடிவுக்கு  வந்தேன்னு  அட்டகாசமா clarify பண்ணுவாரு...(அதுல கூட கொஞ்சம் ஓட்டை கண்டுபிடிக்கலாம் ...பட் கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் கண்டு பிடிக்கணும் ).

மிஸ்கின் படத்துல லாஜிக் சொல்லனுமா இல்லியா ...? ஏன்னா இது  மிஷ்கினோட படம்.

நமக்கென்ன பயம்னா ...இவரு இப்புடி ஆரம்பிச்சு விட்டு போக....ரெண்டு குரூப் ஊருக்குள்ள திரியுறானுங்க ....மூளையை கழட்டி முச்சந்தியில் சூடம் ஏத்தி பொட்டுனு போட்டுபுட்டு  வெறும் தலையோட தெரியுற கோஷ்டிங்க ....
அவனுகளும் இப்புடி ஆரம்பிச்சிட்டா நாடு தாங்குமா..?  வில்லன் தன்ன எங்க தூக்கிட்டு போறான்னே தெரியாம கண்ணை கட்டி கைய கட்டி தூக்கி போய் இறக்கி விட்டா.....திடீர்னு மாஸ் bgm மோட அவரை சரவுண்ட் பண்ணி இந்த பன்னி பஞ்ச் பேசிட்டு ஹெலிகாப்டர்ல  -அது எங்க இருந்து வந்துச்சோ....ஏறி ஸ்டைலா டாடா காட்டிட்டே போகும் ....!!
வர்ற கோவத்துக்கு ...டைரக்டர் சட்டையை புடிச்சு...'ஏண்டா நாயே ...படம் பாக்குறவன எல்லாம் பன்னிக்கு பிரசவம் பாக்குற பன்னாடைனு நெனச்சிட்டியாடான்னு ....கேக்கலாம்னு .... நெனச்சு திரும்பி பாத்தா.... ...சுத்தி இருக்க அத்தனையும் விசில் பறக்க கைதட்டி கத்தி குமிக்கும் பாருங்க....ஒரு மிரட்சியோட பணிவா பம்மி வாய பொத்திகிட்டு தியேட்டரை விட்டு ஒரே ஓட்டம் ...!

3. பாக்யராஜ் எதுக்கு இந்த படத்துக்கு ? குத்தப்பட்டு சாவுறதுக்கா....? அதுக்கு நீங்க பாக்யராஜை மெயின் வில்லனா போட்ருந்தா ....(ஆக்சனுக்கு அடியாள் போட்டுக்கலாம் ) படம் பட்டைய கிளப்பி இருக்காது ?
 அப்புறம் அந்த ....Lightning - sound and light speed ...பதட்டத்துல மாத்தி சொல்லிருக்கலாம் இல்லியா.?  Weak அனாலிசிஸ். சத்தம் முதல்ல கேட்டதா ரெண்டாவதா....எப்புடி ஞாபகம் இருக்கும் ?
Although it was kept to brief about Kanian's knowledge...

4. பைக் சேஸிங் முடிவுல வில்லன் ஹராகிரி - வயிற்றை கிழித்து இறத்தல் ...logically not  possible . வேணும்னா குத்தி பாருங்க ...கத்தி வயித்துக்குள்ள இறங்குன உடனே உடம்பு நம்ம கண்ட்ரோல்ல இருக்காது ....கோடு போல் கிழித்தல் சாத்தியமில்லை. அது என்ன கேக்கா ? ஜப்பான் சாமுராய்   பெரிய கத்திவச்சு கொஞ்சம் பெருசா கோடு  போட்டு கொள்வான். That's it.

5.  வில்லன் வீடு கண்டு பிடிச்ச பிறகு ...கிரெடிட் கார்டு வழியா ...
எல்லா போலீசும் வீட்டுக்குள் நுழையும்போது ...ஒரு போலீஸ் மதில் மேல் ஏறி குதிப்பது... கெக்கே...பிக்கே  ..
(நமக்குத்தான் கிரெடிட் கார்டு குடுக்க மாட்டானுங்க இந்த பாங்கு காரனுவோ .....கொலைகார பொம்பளைக்கெல்லாம் கிரெடிட் கார்டு குடுப்பானுவோ ..அப்புடிங்கறதும் மிஸ்கின் குறியீடு ...??)


முக்கியமான  திருப்புமுனை  இடங்கள் படமாக்க படவில்லை....வாயாலேயே வடை சுடப்படுகிறது ....as if in  ஓநாயும் ஆட்டுக்குட்டியும்...!
இதுக்கே 2 மணி 40 நிமிஷம் ஆயிடுச்சு...இனி பிளாஷ்பேக்கும் காட்டினா...?
அப்போ தேவை இல்லாத சீன் எடுத்துடலாம்..! எது தேவை இல்லாத சீன்...? அதை மிஸ்கின் தான் முடிவு பண்ணனும்...! 2.40 போனதே தெரியல ...இசை முக்கிய காரணம்.

படத்தை 2வது தடவை பாத்துறாதீங்க....அதுதான் என்னை இந்த ப்ளோக் எழுத வச்சதே....!
2வது தடவை பாத்தீங்கன்னா மிஸ்கின் டார்லிங் நம்மள மியூசிக் வெச்சே எவ்ளோ ஏமாத்தி இருக்குன்னு தெரிஞ்சிரும் ...பல்லியை காட்னாகூட பயங்ங்ங்ர bgm  இருக்குறது ...2வது தடவை பாத்தா கண்டு பிடிச்சுருவீங்க....எதுக்கு இது தேவை இல்லாம....உச்சா போறதுக்கெல்லாம் உசுப்பேத்துற BGM

6. வில்லன் கமலேஷை ஹோட்டலுக்கு தேடி வரும்போது , விஷாலுக்கு   எதோ பொறி தட்ட ஆண்ட்ரியாவ பிடிக்க கமலேஷ் ரூமுக்குள்ள போறதுவரைக்கும் ஓகே.....பட் எதிர் பக்க ரூம்ல (கொலையான தாத்தா பாட்டி ரூம் ) கரெக்ட்டா தேடிப்போய் பாக்குறதெல்லாம் கொஞ்சம் ஓவர்...எப்புடி அவருக்கு அவ்வளவு குய்க்க்கா தெரிஞ்சுது..?

7. கடை ஸீன் :  அவரு துப்பறிவாளர் ...எமோஷன் எல்லாம் எட்டடி தூரத்துல வச்சிக்கிறவர். அவரு எப்புடி எதிரி கிட்ட முட்டாள் தனமா சரணடைவார்  ??
இதே தப்புதான் முகமூடி-யிலயும் பண்ணுனார் நம்ம செல்லாகுட்டி.
ஆரம்பத்துல இருந்து சூப்பர் டூப்பர் ஹீரோவா இருக்கவர் ...தேவையான நேரத்துல ..மக்கள் எல்லாம் நகம் கடிச்சிட்டு ...எதோ பண்ண போறார் நம்ம ஹீரோ...பட்டய கிளப்ப போறார்னு ...எதிர் பாக்கும்போது ....பொசுக்குன்னு கைய தூக்கிட்டு சரணடையர ஸீன தயவு செய்து வைக்காதீங்க மிஸ்கின் .
தியேட்டர்ல அங்கங்க 'உஸ் ...அப்பான்னு ' மக்கள் வெளிப்படையா கடுப்பாகுறாங்க ...!

8. சரி அவரு தான் கேனத்தனமான சரண்டர் ஆவுறார்னா....நம்மாளு ...நம்ம ..டெரிபிக்கான ...பயங்கரமான ...கொடூர வில்லன் ...அவரை கொல்லாம ...கொச்சை கயித்த எடுத்து விறகு கட்டு கட்டுறா மாறி கட்டி போட்டுட்டு வசனம் பேச ஆரம்பிச்சுடுறார்..ஆரம்பத்துல இருந்து புல்லட் train மாறி பாஞ்ச படம் ..பொசுக்குன்னு லோக்கல் டவுன் பஸ்ஸா மாறி ...லொடக் பொடக்குனு போக ஆரம்பிச்சுடுது ...
எதையும் பிளா....ன் பண்ணி பண்ணனும் ...! இல்லேன்னா இப்புடிதான் கிளைமாக்ஸ் நம்ம மூஞ்சில 'லொச்சக் ...மொச்சக் ...பச்சக்குனு ' அடிச்சுப்புடும்.

9. (1) வில்லன் ஏன் நூடுல்ஸ் சமைக்கணும்  ? அருமையான ஸீன் .முதல்ல
          எனக்கும் புரியல.கடுப்பா இருந்துச்சு ...பட் cute if you know why this scene is ? mail            me for answer:  prasannavirggo@gmail.com


  (2)ஹீரோயின் சாக கிடக்க பதறி போய் ஹாஸ்பிடல் ஏன் தூக்கி போகல ...?  
      அதுவும் நல்ல லாஜிக்...ஹராகிரி . அங்க லைட்டிங் சரியா இல்ல ..குடல்    வெளியேறி கிடந்தது போல் காட்ட நினைத்து முடியவில்லை போல...சென்சார் ??

   (3)ராம்பிரசாத்-க்கு  எதுக்கு fake கடத்தல் கால் வந்துச்சு ? - குட் லாஜிக் -           அப்போதான் அவரு  .....need answer ? mail me.

10 . அப்புறம் அந்த முட்டைகள  உடைச்சு தோசை சட்டில ஊத்துற சீன் . அதுவும் மொக்கை . வித்தியாசமா யோசிச்சது ஓகே....பட் கொஞ்சம் லாஜிக்கலா  பண்ணி இருக்கலாம் . Do you have any explanation for that myskin like Noodles scene ? if so, i will be happy.


11. எல்லாத்துக்கும் மேல Casting selection -NOT UPTO THE MARK. First Vishal cannot be accepted as a detective. இந்தியன் , உயிரே படம் பாத்தீங்கன்னா தெரியும் . EXCELLENT performance by BOTH.   அனலிடிகள் திங்கிங் பண்றதுக்கு ஒரு சீனியர் fellow தேவை பாஸ். விஷால் producer . ஓகே . பட் அவரு இதுக்கு சரிப்பட்டு வரமாட்டார் .

12. எப்போ பாரு ஹீரோயின பாத்து எரிஞ்சு விழுறது ...முதல் ரெண்டு தடவை ஓகே. மூணாவது தடவை கடுப்பாயிருது ...It converts your hardcore cinema into a Drama  Myskin.

13. வில்லன் தன்னோட டீடெயில்ஸ் தெரிஞ்சா ஷாக் ஆவுறது ஓகே. பட் tired  ஆயி நொந்து போறதெல்லாம் why  ? அவரு நெனச்சா ஒரே போடு போட்ரலாம் . வீடு மாத்தி தப்பிச்சுரலாம்.

14. வெளிய கொலை பண்ணிட்டு யாராவது வீட்டுக்கு தூக்கிட்டு வருவாங்களா ? நான்  தூக்கிட்டு வருவேன்னு சொல்ற அறிவு ஜீவன்கள் எல்லாம்  முட்டி போடுங்க . We  are talking about professional killers. அங்கேயே  பொதைச்சிட்டோ ,இரும்பை கட்டி கடல்ல இறக்கிட்டோ தானே வரணும் ....(என்னா கொலவெறி ..)
ஞாபகம்...! கொல்வது  பீச்சில்..! அதுவும் நடு நிசியில் ...பின் எதற்கு டெட் பாடிய வீட்டுக்கு தூக்கிட்டு வருவானேன் ...©தண்ணியடிச்ச தங்கவேலு bottle-ல தூக்கி  பொண்டாட்டி ஹாண்ட் பேக்ல  ஒளிச்சு வச்சானாம் ...! ©  😉😉  அந்த கதையால்ல இருக்கு ..!

15. பிரசன்னா - எவ்வோளோ பிரில்லியண்ட் ஆக்டர் . நாணயம் ....அஞ்சாதே ...etc etc ..அவர போய் அல்லக்கைய்யா போட்டு ...
மற்றும் பாக்யராஜ்,சிம்ரன்,ஆண்ட்ரியா எல்லாத்தையும் அண்டர் யூஸ் பண்ணி ....வேற வழி இல்ல ...இதுக்கே 2 மணி 40 நிமிஷம் ......பட் இருந்தாலும் முயற்சி பண்ணி இருக்கலாம்.

16. while getting tortured  by police ...with blood on his body...will a police officer will tell about a dog ...'a dog came and bite devil'..? Could have muted the voice over there when the dog arrives...right ? audience could understand.

ரத்தம் சொட்ட அடி  வாங்கி நிற்கும் போலீஸ் ஆதி ...'அப்போ திடீர்னு ஒரு நாய்    குறுக்க வந்து டெவில் கைய கடிச்சிச்சு '.....இது ஒரு detail -னு சொல்லுவாங்களா ...?
சரி..திட்டாதீங்க பாஸ்....கதைக்காக -ன்னு வச்சிக்கலாம்.

17.  No logic in analyzing the lady - the first client - who came for her missing husband..
Just for a build-up, like vijay movie build up, it helps to boost up hero's analytical skill. But there is no strong justifiable analytical ability disclosed.
முதல் பெண் கிளைன்ட் ...அவருகிட்ட கணியனோட லாஜிக்கல் ரீசனிங் மெச்ச தகுந்ததா இருந்திருக்கலாம் . தெளிவான விளக்கம் கொடுப்பதற்கு பதில் வேண்டுமென்றே வேக வேகமாக எடுக்கப்பட்டு விட்டது.

18. 'மனோ ..உன்ன நாலு பேரு பாலோ பண்றாங்க ....' - எப்புடி கரெக்டா 4 பேரு ..?
ஏன் ஒருத்தர் 2 பேரு ...பண்ண கூடாதா ?

19. அந்த பைட் ஸீன் அப்போ 'நடந்தது ...நடக்க போறது...'  எதுக்கு அது ?
ஒரு Plot-a reveal பண்ணும்போது போட்டா ஓகே. சண்டை நடக்கும்போதே எதுக்கு ?

20. AC Paul கொலையை CCTV ல பாக்கணும் - தியேட்டருக்கு போய் கேளுங்க . அதைவிட்டுட்டு போன உடனே அவனை அறையறதுல என்ன லாஜிக் ? அவன் ஏதாவது மறுத்து பேசினானா...? 'யாரு சார் நீங்க ...என்னை ஆர்டர் பண்றீங்க-ன்றான் ...நியாயமான கேள்விதான...?

21. During the china restaurant fight scene, Prasanna is getting out just like that .  Practically speaking, professional killers won't/shouldn't allow him (or anyone with Vishal) outside. We can say that Vishal is the target. But in reality they won't allow anyone outside of the restaurant. If the scene made like that, it would be classic.

கணியனுடன் வரும் எவரையும் அந்த சைனீஸ்  ( உண்மையில் வியட்நாமிஸ் ) அடியாட்கள் வெளியில் விட்டிருக்க கூடாதுதானே ?? மனோவை -பிரசன்னாவை  எப்படி வெளியே விட்டனர் ?



படம்பூரா BGM  ஏமாத்து ....ஏதோ நடக்க போறா மாறியே ....ரெண்டாவது தடவை ..மூணாவது தடவை பாத்துறாதீங்க....கண்டுபிடிச்சுடுவீங்க ...!

ஏன்னா படம் தெளிவா புரிய ஆரம்பிச்சுடும் .

மிஸ்கின் fans may not like this blog. Still you can rethink about my points and let me know your feed back.


லாஸ்ட் பட் நாட் தி  லீஸ்ட் ....நம்மாளு எப்புடி படம் எடுத்தாலும் முதல் நாள் முதல் ஷோ or  செகண்ட் ஷோ நான் பாப்பண்டா அப்புடின்னு ஒரு கோஷ்டி அலையுது ....அவனுங்கள யெல்லாம் ....
சரி விட்ரலாம் .....
அந்த கோஷ்டியோட தலையே நானாதான் இருப்பேன் ...ஹீ.ஹீ...!!

http://cinema.vikatan.com/tamil-cinema/news/102809-what-is-the-indication-behind-the-milkmaid-in-mysskins-thupparivaalan.html?artfrm=read_please
- இதெல்லாம் மெய்யாலுமா மிஸ்கின்  ? என்னமோ போங்கோ....!!

https://www.amazon.com/Mans-Search-Meaning-Viktor-Frankl/dp/080701429X
Man's Search for Meaning- Book


https://www.youtube.com/watch?v=zg8CqVKwW28
On The Sets Of Thupparivaalan with Mysskin | Baradwaj Rangan - Part 1

https://www.youtube.com/watch?v=JO99XeqnOeA - Part 2


https://www.youtube.com/watch?v=THWUxz0vBKA
5 More Parts of Thupparivalan?- Director Mysskin Reveals! |

https://www.youtube.com/watch?v=fAkGGfq_p-o
I never watched Vishal's films ever - Mysskin | Thupparivaalan






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்