எவன் செத்தா எனக்கென்ன -என்னவளின் கன்ன குழியென்ன
சராசரி இந்திய டீனேஜ் டேமேஜ் - எவன் செத்தா எனக்கென்ன - ......என்னவளின் கன்ன குழியென்ன டீனேஜ் கோளாறில் நோட்டு நோட்டாய் காதல் கவிதை எழுதி குவித்தவன் (தான்)நான் (னும் )...! கொல்லும் கொலுசு ... அள்ளும் அழகிய நெய்ல் பாலிஷ் பூசிய நகங்கள்... சிலிர்க்க வைக்கும் ஜிமிக்கி கம்மல் .... அத்தனையும் மனதிலே ஓடவிட்டு ...7ஜி ஹீரோ போல ...பித்து பிடித்து திரிந்த ...திரியும்...திரிய போகும் ...பல லட்சம் ஹார்மோன் பலிக்கடாக்களில் நானும் ஒருவன் தான் .... ஆற்று மணலை தைரியமாய் திருடி விற்று ... அதை தடுக்க ஆற்றாமை யால் ஆற்றாமை (ஆற்று ஆமை) போல் போராடும் பொதுமக்களை லத்தி சார்ஜ் பண்ணும் அரசாங்கம்.... என் கண்ணுக்கு தெரிய வில்லை .... அவளின் மொபைலுக்கு சார்ஜ் போட நாயாய் அலைந்து கொண்டிருந்தேன் I am youth and dynamic 19. அரசு மருத்துவமனைகளில் ஏழை குழந்தைகளின் சாவு...'இன்றென்ன...ஓ புதன்கிழமையா ?' என்ற ரீதியில் கையாளப்பட ... மருத்துவருக்கு பதில் 8 வது கூட படிக்காத ஆயா மருத்துவம் பார்க்க ... அவசர கேஸானாலும் 'பாக்க ...