எவன் செத்தா எனக்கென்ன -என்னவளின் கன்ன குழியென்ன

  சராசரி இந்திய டீனேஜ் டேமேஜ் - எவன் செத்தா எனக்கென்ன - ......என்னவளின் கன்ன குழியென்ன 

டீனேஜ் கோளாறில் நோட்டு நோட்டாய் காதல் கவிதை எழுதி குவித்தவன் (தான்)நான் (னும் )...!
கொல்லும் கொலுசு  ...
அள்ளும்  அழகிய நெய்ல்  பாலிஷ் பூசிய நகங்கள்...
சிலிர்க்க வைக்கும் ஜிமிக்கி கம்மல் ....

அத்தனையும் மனதிலே ஓடவிட்டு ...7ஜி ஹீரோ போல ...பித்து பிடித்து திரிந்த ...திரியும்...திரிய போகும் ...பல லட்சம் ஹார்மோன் பலிக்கடாக்களில் நானும் ஒருவன்  தான் ....

ஆற்று மணலை தைரியமாய் திருடி விற்று ... அதை தடுக்க  
ஆற்றாமை யால் ஆற்றாமை (ஆற்று ஆமை) போல் போராடும் பொதுமக்களை லத்தி சார்ஜ் பண்ணும் அரசாங்கம்.... என் கண்ணுக்கு தெரிய வில்லை ....
அவளின் மொபைலுக்கு சார்ஜ் போட நாயாய் அலைந்து கொண்டிருந்தேன் 
I am youth and dynamic 19.

அரசு மருத்துவமனைகளில் ஏழை குழந்தைகளின் சாவு...'இன்றென்ன...ஓ புதன்கிழமையா ?' என்ற ரீதியில் கையாளப்பட ...

மருத்துவருக்கு பதில் 8 வது கூட படிக்காத ஆயா  மருத்துவம் பார்க்க ...

அவசர கேஸானாலும் 'பாக்க முடியாது ...!!! நாங்க எல்லாம் இப்போ வேலை நிறுத்தம் '.  மருத்துவர்களுக்கு அதிக சம்பளம் குடு...வேலை நிறுத்தம் பண்ணினா வேலையிலுருந்து நிப்பாட்டு ...அதைவிட்டு நீ பாட்டுக்கு வேலை நிறுத்தத்தை வேடிக்கை பாத்தா? ...ஊரே ஊளையிடுது ...

இது எது பத்தியும் எனக்கு கவலை இல்ல ....
அவளின் அந்த கடை கண் பார்வை ....அது தான் என் பருவ குளிருக்கு போர்வை ....அது போதும் எனக்கு .
I am romantic and I am 19.

நாள் முழுவதும் வெய்யிலில் நாயாய் நடந்து ...வீடு வீடாய்  சோப் விற்று ....உழைப்புக்கேற்ற  வருமானம் கிடைக்காமல் வாழ்க்கையே விரக்தியாய் போய் கொண்டிருக்கும் ...என் வயதொத்த 'வசந்த'( மில்லா) குமார் -போட்டு கொள்ள சரியான செருப்பில்லாமல் திரிய ...நான் என்னவளின் ஹை ஹீல்ஸ் ஷூ கலர்-க்கு மேட்சான கலரில் நைக் ஷூ கிடைக்காத கோவத்தில் நான் .....
I am a Macho...!

தன் வீட்டு அடுப்பு எரிகிறதோ இல்லையோ ....ஊர் நெருப்பை அணைக்க சிவந்த கண்களுடன் சிவப்பு கொடியுடன் போராடும் கம்யூனிஸ்ட் தோழர்களை ஒரு நக்கலாக பார்த்துவிட்டு சிவப்பு சுடிதாருக்கு என்ன கலர் ஹாண்ட் பேக் போட்டு வருவாளோ நம்மாளு- ஆக பெரிய கவலையில் நான்  .....
I am particular about Colors ..!


காசு செல்லாதுன்னு அங்க இருந்து  'அது ' ஆரம்பிச்சு வச்ச கொடுமை ....சுடுகாட்டுக்கு போகாம ATM  வாசலில் இங்க இது நிக்குது ...பாவம் அது ...முக்கி முனகி நிக்குது  ...எப்புடியும் 80 இருக்கும் ...!
அத போய் இடிச்சு தள்ளிவிட்டு ....
"ஒரு 20 ரூபீஸ்க்கு சேஞ்சு கிடைக்குமா ப்ளீஸ் ....' ன்னு நீ கேட்ட அந்த நொடி ....

 வந்துச்சு பாரு கோவம் ...எனக்கு ...அந்த டீ மோனிடைசேஷன் மேல...
படவா ரேஸ்கேல் .....என் செல்லத்தை அலைய விட்டியே ...இப்புடி ??!!

20 ரூபீஸ்க்கும் டீ மோனிடைசேஷன் க்கும் "என்ன மச்சி சம்பந்தம்ன்னு?" கேட்ட அந்த படவா சம்பந்தம் மேல தான் எனக்கு பயங்கர கோவம் .....Becoz...நானு டீனேஜு ...!!

டிவி யில் .....

இலங்கை ராணுவம் சுட்டு மீனவர்கள் படுகொலையை  ....
நிலத்தடி நீர் கானல் நீராய் ...பக்கத்துக்கு வீட்டு மாமா ஆபிசுக்கு அரைநாள் லீவு போட்டு விட்டு தண்ணி புடிக்க போனாரு....அப்போதான் கொஞ்சம் சுருக்குன்னு எதோ தோணிச்சு .....
பட் ..அவளோட புது ஸுரிதார் selfie msg ...டூமீல் ன்னு வந்து விழுந்துச்சு பாரு ....ஐஸ் வாட்டர் தல வழியா கொட்டுனா மாரி ....அப்புறம் நோ திங்கிங் அபௌட் வாட்டர் ....ஆர் எனி அதர் மேட்டர் ...! I am coooool boy...u know..??


'அடில' வாட்டரே இல்ல ....ஆனாலும்  அரசு சொல்கிறது ...'அரசே மணல் குவாரி திறக்கும்' என்று  .... தவிச்சா ஒரு கைப்புடி மணலை எடுத்து வாயில அதக்கி கிட்டா போச்சு ...

திவாலான பாங்குகள் பொதுமக்கள் பணத்தை வைத்து தனது கடனை தீர்த்து கொள்ளலாம் .....
SBI வங்கி  5000 ரூபாய் கூட வைத்து கொள்ள முடியாத ஏழைகளின் பணத்தை  பைன் என்ற கேவலமான நடைமுறை மூலம் சுருட்டியதை ....

புட்டு புட்டு வைத்து ....கழுதையாய் கம்யூனிஸ்ட்கள் கதறி கொண்டிருக்க ...

மொபைலை வெட்கத்துடன் பார்த்து ...உதடு குவித்து ...உம்மா குடுத்து கொண்டிருந்தேன் .....

இந்த யுபிஎஸ் ஓபிஎஸ் மேடி ...இதல்லாத்தையும் விட ...இந்த ஹார்மோன் தான்  மச்சி  பெரிய வில்லன் ...!! 

Carelessness should be a criminal offence (c)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்