4 வயசு பாப்பா , Mr.எடம் ,Mr.மோடம்
நாம் என் இப்புடி இருக்கோம் ? ஒரு குட்டி கதை . தெரிஞ்ச கதைதான். ஒரு கிராமத்தான் தன் 4 வயசு குட்டி பொண்ண கை பிடிச்சு திருவிழாக்கு கூட்டி போறாரு . சரியான கூட்டம். அவருக்கு அங்க நடக்குற வேடிக்கை விநோதங்கள் ரொம்ப பிடிச்சு போச்சு . கைதட்டி ரசிக்கிறார். அதிலும் கரகாட்ட கனகா ஆட்டத்துல ரொம்ப இன்வோல்வ் ஆயி போயிட்டாரு . ஆனா அவரோட நாலு வயசு பொண்ணு ஒரே அழுகை .'அப்பா வீட்டுக்கு போலாம்பா ...னு .' இவருக்கு ஒரே கோவம் . 'சனியனே ...எவ்ளோ வேடிக்கை விநோதங்கள் உன்ன சுத்தி...அத பாக்காம வீடு வீடு ன்னுட்டு ...' அப்புடின்னு கத்துறாரு . பக்கத்துல நின்னு இத வேடிக்கை பாத்த பெரியவர் 'யோவ் ...குழந்தை உன் தொடை உயரத்துக்கு கீழ , கூட்டத்துல இருட்டுக்குள்ள நடையா நடந்து தவிக்குது . நீ பாட்டுக்கு ஆட்டம் பாட்டம்னு ரசிச்சிட்டு திரியுறியே ....உன் குழந்தையை நெனச்சு பாத்தியா ? அப்புடின்னு சொல்லிட்டு உடனே குழந்தையை தன் தோள்ல தூக்கி உக்கார வச்சார் பாருங்க . அது அழுகைய நிப்பாட்டிட்டு கைதட்டி ரசிச்சு சிரிக்க ஆரம்பிச்சிடுச்சு. அப்புறந்தான் அந்த புத்தி கெட்ட பயலுக்கு புரிஞ்சுச்சு . அந்த கிராமத்தான்...