4 வயசு பாப்பா , Mr.எடம் ,Mr.மோடம்

நாம் என் இப்புடி இருக்கோம் ?

ஒரு குட்டி கதை . தெரிஞ்ச கதைதான்.
ஒரு கிராமத்தான் தன் 4 வயசு  குட்டி பொண்ண கை பிடிச்சு திருவிழாக்கு கூட்டி போறாரு . சரியான கூட்டம்.
அவருக்கு அங்க நடக்குற வேடிக்கை விநோதங்கள் ரொம்ப பிடிச்சு போச்சு .
கைதட்டி ரசிக்கிறார். அதிலும் கரகாட்ட கனகா ஆட்டத்துல ரொம்ப இன்வோல்வ் ஆயி போயிட்டாரு .
ஆனா அவரோட நாலு வயசு பொண்ணு ஒரே அழுகை .'அப்பா வீட்டுக்கு போலாம்பா ...னு .' இவருக்கு ஒரே கோவம் . 'சனியனே ...எவ்ளோ வேடிக்கை விநோதங்கள் உன்ன சுத்தி...அத பாக்காம வீடு வீடு ன்னுட்டு ...' அப்புடின்னு கத்துறாரு .
பக்கத்துல நின்னு இத வேடிக்கை பாத்த பெரியவர் 'யோவ் ...குழந்தை உன் தொடை உயரத்துக்கு கீழ , கூட்டத்துல இருட்டுக்குள்ள நடையா நடந்து தவிக்குது . நீ பாட்டுக்கு ஆட்டம் பாட்டம்னு ரசிச்சிட்டு திரியுறியே ....உன் குழந்தையை நெனச்சு பாத்தியா ? அப்புடின்னு சொல்லிட்டு
 உடனே குழந்தையை தன் தோள்ல தூக்கி உக்கார வச்சார்  பாருங்க . அது அழுகைய நிப்பாட்டிட்டு கைதட்டி ரசிச்சு சிரிக்க ஆரம்பிச்சிடுச்சு.
அப்புறந்தான் அந்த புத்தி கெட்ட பயலுக்கு புரிஞ்சுச்சு .

அந்த கிராமத்தான் யாரு தெரியுமா ....நம்மள மாறி சாப்ட்வேர் என்ஜினீர்ஸ் , ஸ்கூல் காலேஜ்  டீச்சர்ஸ் , IT  கட்டுற  எல்லாரும் தான் .

அந்த குட்டி பொண்ணு யாரு தெரியுமா....ADMK க்கும் DMK க்கும்  500 ரூவாய வாங்கிட்டு ஓட்டு  போடுற Below Povery Line ஜனங்க .

அந்த கிராமத்தான் மாறி தான் நாம நல்ல சாப்பாடு , நல்ல ட்ரெஸ் , நல்ல சுகமான வாழ்க்கை குள்ள இருந்துகிட்டு  Mr .எடப்பாடியையும்  மோடியையும் திட்டி தீத்துட்டு காசுக்கு ஓட்டு போடுற Below Poverty லைன் மக்கள திட்டி தீத்துட்டு Biriyani + Ice cream + Inox Ac Mall-la ஒரு மக்கள் துயர சார்ட்டர்ட்  flight ல வந்து தொடைக்கிற  ஹீரோ படத்தை பாத்துட்டு ,AC ரூம்ல தூங்கி போயிடுறோம்..
மறுநாள் டூ வீலெர் , கார் ல ஆபிஸ் . அவோலோதான் நம்ம சொசைட்டி கான்சியஸ்னஸ் .
அந்த பெரியவர் யாரு தெரியுமா ? எலெக்ஷன் டைம் ல 2000 ரூபாய் குடுக்குற  நம்ம எடப்பாடியும்  மோடியும் தான் .
அப்புறம் எப்புடி நம்ம வாழ்க்கை தரம் உயரும்.

மொதல்ல அந்த 4 வயசு பாப்பாக்கு என்ன சொன்னா புரியும் ...எப்புடி  புரியவைக்கலாம்னு யோசிங்க.

இப்போ பாருங்க  ரபேல் ஊழல், பாஜக மீதான அதிருப்தி , எல்லாம் ஓரங்கட்டப்பட்டு ...
யப்பே  ..300 terrorists பே ....ஒரே அடிப்பே ...பழிக்கு பலிப்பே .....
நீ பாத்த ?
ஆமாப்பே ...பாத்தென்பே ....300 terrorists  பே  -ன்றானுங்கோ .

எல்லா ஊழலும் மறந்து எடப்பாடி மகராசன் 2000 ரூவா ...குடுக்குறாரு...

ஏய் ...ஸ்டாலின் நீ குடுப்பியா? 

அப்புடிங்குது இந்த கூட்டம். இதுக்கட்ட  போயி.....


1980ஸ் சினிமாக்கள்ல வரமாரி...ஹீரோயின கதற கதற rape பண்ணிட்டு , பஞ்சாயத்துல நான் இவளை கட்டிக்கிறேன்னு சொன்ன உடனே ...அவுங்க ரெண்டு பேருக்கும் அங்க ஒரு டூயட் சாங்  வைக்கிறோம் -ங்குற மாரி ஒரு மானங்கெட்ட பொழப்பு தான் .

இந்த நாடும் நாட்டு  மக்களும் நாசமாய் போகட்டும் - ன்னு  இன்னாமா  அனுபவிச்சு சொல்லிருக்கான் அந்த ஆளு ...!



- வயிற்றெரிச்சல் பிரசன்னா ;-)





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்