மொக்கையா ஒரு bird கவிதை....Know about few birds atleast
இன்று எனது வாட்ஸப் தோட்டத்திற்கு என்ன ஆயிற்று ...? குயில்களின் குக்கூவை காணவில்லை .... கரையும் காகத்தையொத்த கரண்டிவாயனை யும் காணவில்லை.... குறும்பு கொண்டலாத்தி -யாக காட்டிக்கொள்ளும் குண்டுக் கரிச்சானை யும் காணவில்லை .... அரசியல் சண்டையிடும் அரிவாள் மூக்கனை யும் அண்டரண்டப்பறவை யையும் காணவில்லை ஆமா போடும் அக்கா குருவி யையும் காணவில்லை கிளி என்று காட்டிக்கொள்ளும் கோரை உள்ளான் னையும் காணவில்லை ...! செண்பக -த்தையும் கொடிக்கால் வாலாட்டி -யையும் காணவில்லை அடைமழைக்கு அடங்கி கிடக்கும் அனைத்தும் .... ஞாயிற்றின் ஞாயிற்று ஒளிக்கற்றை சுருக்கென உள்வாங்கி சுறுசுறுப்பாக கூவ வாழ்த்துகள் !! (Don't compare the features of the Birds with you...just for rhythm its used....)