கேட்டால் ஒன்றுமில்லை என்கிறாய் ..!
கேட்டால் ...ஒன்றுமில்லை என்கிறாய் .. ! இருவருக்கும் இடையில் இருப்பதை- இருக்கும் 'அதை' - பேசி தீர்த்துவிட முடியுமா...? ஆற்றை அல்லையில் அள்ளி விட முடியுமா..? எப்போது பேசினாலும் 1.45 மணி நேரம்... சும்மா 10 நிமிஷம் ..brief call என்று ஆரம்பித்து 45 நிமிசத்துக்கு குறையாமல்... பேசி விடுகிறாய்... இருவருக்கும் இடையில் இருப்பதை- இருக்கும் அதை - பேசித்தான் தீர்த்துவிட முடியுமா...? கடலை கையில் அள்ளி கொண்டு விட முடியுமா...? ஆனாலும் ... கேட்டால்... உனக்கும் எனக்கும் இடையில் ஒன்றுமில்லை என்கிறாய் ! எல்லா காதல் பைத்தியங்களிலும் - ஆண் பைத்தியம் பேசும்...பெண் பைத்தியம் விழுந்து விழுந்து சிரிக்கும்... முன்பு ஒரு முறை எனக்கு பைத்தியம் பிடித்த போதும் அப்படிதான் நடந்தது . ஆனால் இம்முறை உன்னிடம் அது உல்டா ... விழுந்து சிரிக்க வைக்கிறாய் ... கேட்டால் ... ஒன்றுமில்லை என்கிறாய் ..! உன்னுடைய எல்லா ரகசியங்களையும் ரகசியமாய் பகிர்ந்து கொள்கிறாய் ... சிலிர்க்க வைக்கிறாய் ... கேட்டால் ஒன்றுமில்லை என்கிறாய் ..! "சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா ...இன்...