கேட்டால் ஒன்றுமில்லை என்கிறாய் ..!

 

கேட்டால் ...ஒன்றுமில்லை என்கிறாய் ..!

 

இருவருக்கும் இடையில் இருப்பதை- இருக்கும் 'அதை' - பேசி தீர்த்துவிட முடியுமா...?

ஆற்றை அல்லையில் அள்ளி விட முடியுமா..?


எப்போது பேசினாலும் 1.45 மணி நேரம்...

சும்மா 10 நிமிஷம் ..brief call  என்று ஆரம்பித்து 45 நிமிசத்துக்கு குறையாமல்...

பேசி விடுகிறாய்...

 இருவருக்கும் இடையில் இருப்பதை- இருக்கும் அதை - பேசித்தான்  தீர்த்துவிட முடியுமா...?

கடலை கையில் அள்ளி கொண்டு விட முடியுமா...?

ஆனாலும் ...கேட்டால்...

 உனக்கும் எனக்கும் இடையில் ஒன்றுமில்லை என்கிறாய் !

 

 

எல்லா காதல் பைத்தியங்களிலும் - 

ஆண் பைத்தியம் பேசும்...பெண் பைத்தியம் விழுந்து விழுந்து சிரிக்கும்...

முன்பு ஒரு முறை எனக்கு பைத்தியம் பிடித்த போதும் அப்படிதான் நடந்தது .

ஆனால் இம்முறை உன்னிடம் அது உல்டா ...

விழுந்து சிரிக்க வைக்கிறாய் ...

கேட்டால் ...

ஒன்றுமில்லை என்கிறாய் ..!

 

 

உன்னுடைய எல்லா ரகசியங்களையும் ரகசியமாய் பகிர்ந்து கொள்கிறாய் ...

சிலிர்க்க வைக்கிறாய் ...கேட்டால் ஒன்றுமில்லை என்கிறாய் ..!

"சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா ...இன்னும் இருக்கா " மம்முட்டி யாய் நான் ....பானு ப்ரியாவாய் நீ ...விடிய விடிய விரிகிறது ...

விடிந்த பின்  கேட்டால்...

 ஒன்றுமில்லை என்கிறாய் ..!

 

 

 என்னை வெறுப்பேற்றி  சிரிக்கிறாய் ...பொறாமை கொள்ள செய்து ரசிக்கிறாய் ...

கேட்டால்...

 ஒன்றுமில்லை என்கிறாய் ..! 

எப்போதும் என்னை நினைத்து கொள்கிறாய் ...நினைக்க வைக்கிறாய் ...

கேட்டால் ...

ஒன்றுமில்லை என்கிறாய் ..!

 

 

ஒன்றுமே  இல்லாமல் போவதற்கா இந்த விளையாட்டு...? 

பேசு ...என் பேச்சுக்காரியே ...பேசு ....பேசிக்கொண்டே இருந்தால் உன் மனமும் என் மனமும் 

 ஒரு நாள்...

ஒன்றோடு ஒன்றாய் 'ஒன்றும் '   இல்லையா ?

 

(Situation:  Heroine is dodging hero . Hero is in love but she is just out of break up . As she likes him, she is  neither refuting him nor accepting him. But long phone conversations going between them.  )

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்