கந்தசாமி - கத்திரி தேவை சாமி
கந்தசாமி - இன்னொரு அந்நியன் + ஜென்டில் மேன் ஆக வந்திருக்க வேண்டிய படம். சுசி எதற்காக மூன்றரை மணி நேரம் படத்தை கொடுத்தார் என்று புரியவில்லை. பொறுமை கந்தசாமி-இனும் பெரிது என்று தெரிய வேண்டாமோ .?
ஒரு படம் எவ்வளவு வேகம் காட்ட வேண்டும். மீறினால் என்ன ஆகும் என்பதற்கு எடுத்து காட்டு இந்த படம் , 'ஆறு' , 'காக்க காக்க ' எல்லாம் தோத்து போச்சு வேகத்துல.
சில நேரம் கண்ணு வலிக்குது பாசு. ஸ்ரேயா ரொம்ப புடிச்சு போச்சோ ? ரொம்ப காட்டிட்டாரு காட்டு காட்டு-னு .
எதுக்கு இவ்ளோ வேகம். டைரக்டர் -க்கு வயிறு சரி இல்ல போல ....சீக்கிரம் படத்த முடிச்சிட்டு பாத்ரூம் போகணும் போல-னு தோணுதா இல்லையா.......??
மனசு படத்தோட ஓட்டனும் அதுக்கு சில இடத்துல மெதுவா ஓடனும் .
அவ என்ன சொன்னா-னு பக்கத்துல இருக்குற-ஆள்ட்ட கேட்டுட்டு திரும்பினா.... ஒரு பைட் சீன்-முடிஞ்சு பாட்டு ஓடி கிட்டுருக்கு......
பக்கத்துல ஒரு ஆள் என்னடானா....எப்போ விக்ரம்-எ காட்னாலும் சேவல் மாதிரி கூவ ஆரம்பிசுர்றான். நான் இவன பாப்பேனா.....இல்ல ஸ்ரேயா-வா பாப்பேனா....?
சுசி எப்பவுமே லாஜிக்கான ஆளு. விரும்புகிறேன் , பைவ் ஸ்டார் , திருட்டு பயலே ,எல்லாம் சில பஞ்ச் டயலாக் கோமாளிகள் பார்த்து தோப்பு காரணம்
போட்டுக்குற வேண்டிய படங்கள் .
விக்ரம் தேவை இல்லாம மூஞ்சிய சீரியஸ்-ஆ வச்சி கிறாரு. வெடி வேலு காமெடி - வேறு யாரு பண்ணி இருந்தாலும் - சிரிக்க முடியாது.....ஆனா நம்ம ஆளு - அவரு பேக் ரவுண்டு யூஸ் பண்ணி சிரிக்க வச்சிருக்காரு.....
லாஸ்ட் சாங் ...மீனா குமாரி நல்ல பாட்டு .........ஆனா அது சுசி-க்கு புடிக்கல கத்திரி போட்டிருச்சி....அது ஒரு டூயட் கட் பண்ணிருக்கலாம்.....எத்தன டூயட்.....முடியல....
எப்புடி கமல் ஆளவந்தான், ஹே ராம் , தசாவதாரம் போன்ற சூப்பர் ஹிட் ஆக வேண்டிய படஙகள - அவரோட பாண்டித்யம் காட்ட -கத்திரி போடாம - நம்மள கத்த விட்டாரோ ......அதே மாறி.....!!!
சுசி சார் .....ரசிச்சு எடுங்க ....அது தான் ரசிகர் 'கல்' எதிர் பாக்குறாங்க.....ஆனா.... எடுத்தது வேஸ்ட் ஆயிடுமேன்னு கத்திரி போடாம அனுப்புறது.....எங்க வீட்டுகாரம்மா மீந்தது வேஸ்ட் ஆயிட குடாது னு ஊட்டி விடுரேனு திணிச்சு விடும்பாருங்க...........திட்டவும் முடியாது.....துப்பவும் முடியாது........அது மாறி ஆயிடுது......!!
படம் நீலமா எடுத்தாலும் தப்பு .......நீளமா எடுத்தாலும் தப்பு.
படம் நல்லாத்தாண்டா இருக்கு வென்ன
பதிலளிநீக்கு