நீ ,நான் மற்றும் ஒரு பாப்பா
மொட்டை மாடியில் ஒரு நாள் நீ காற்றுடன் மொக்கை போட்டு கொண்டிருந்தாயே ......பக்கத்து வீட்டு குட்டி பாப்பாவை தூக்கி கொண்டு மேலே வந்தேன் .....நீயும் அதை வாங்கி கொஞ்சுவாய் என்று ...
நீ கொஞ்சுவதை ரசிக்கலாம் என்று.....பின்னே ஒரு புஜ்ஜுகுட்டி இன்னொரு புஜ்ஜுகுட்டியை கொஞ்சுவதை பார்க்க யாருக்கு தான் ஆசை இருக்காது ........
ஆனால் நீ தலை தாழ்த்தி கொண்டாய் ........அதன் பின் நிமிர்ந்து கூட பார்க்க வில்லை .... வேண்டுமென்றே.........புரியாமல் திட்டி விட்டு கீழே போய் விட்டேன்......
இன்னொரு நாள் இன்னொரு முறை.....அதே குழந்தையை நீ கொஞ்சி கொண்டிருப்பதை பார்த்தவுடன் என்னுள் ஒரு 'வேதியல் மாற்றம்'......இனம் புரியாததொரு .....IMPULSE
அப்படியே உன்னை சேர்த்து இறுக்கி கொண்டு ஒரு போட்டோ எடுத்து கொள்ள தோன்றியது.....!!!
அடியே 'தலை தாழ்த்தி' ....இப்போது புரிகிறது ....உன்னை........!!!
கருத்துகள்
கருத்துரையிடுக