ஹரியும் நானும்

என் நண்பன் ஹரி ஒரு விவகாரமான ஆள். தீவிர விஜய் ரசிகன் வேற.....
"ஜெயகாந்தன் மாதிரி ஆவணும் மாப்ள......" - அடிக்கடி உணர்ச்சி வசப்பட்டு கைய கடிச்சுகுவாபுல ......
ஒரு நாள் நானும் பொறுக்க முடியாம.....கேட்டேன்.
"மாப்ளே...ஜெயகாந்தன் கதை எல்லாம் படிச்சுருக்கியா ?"
ஒ...அவரு கதை எல்லாம் எழுதுவாரா மாப்ள ?
நான்- 'டேய் பின்ன ஏண்டா ஜெயகாந்தன் மாதிரி ஆக ஆசை பட்டே...?
ஹரி -அவரு மீசை முறுக்கி விட்டு திரிவார்ல்ல ........அதே மாறி.....மாப்ள..." சொல்லிட்டு வெக்கம் வேற .....!!

ஒரு நாள் ராத்திரி 2 மணிக்கு போன். நான் - " என்னடா மாப்ள இந்நேரத்துல ? "

அவன் 2 டைட்டில் செலக்ட் பண்ணி இருக்கானாம் ...... புக் எழுத......

போலீசில் சிக்காமல் கொலை செய்வது எப்படி...?
விஜய் படம் பார் ...!!
( தயவு செய்து முதல் கேள்வியின் பதிலாக இரண்டாவது வரியை எடுத்து கொள்ள வேண்டாம்.)

மாப்ள "அரிது அரிது...... ஹரியாய் பிறப்பது அரிது "- அப்பிடினேன்...........!!
பயபுள்ள-க்கு மண்ட முடியெல்லாம் நட்டு கிச்சு போல.......
தேங்க்ஸ்-டா........மாப்ள ...உன்ன மாதிரி encourage பண்ண ஆள் கிடைச்சிருந்தா நான் எப்போவோ பெரிய ஆளா ஆயிருபேண்டா....!!
(நல்ல வேல......கிடைக்கல....) சரிடா போய் தூங்கு.......சொன்ன எனக்கு டவுசர் லூசாகி போச்சு......
எங்க நம்மல போலீசுல மாட்டிவிடாம.....தூங்காதோ...இது...?
நான் தான் encourage பண்றேன்னு வேற சொல்லிக்கிட்டு திரியுறானே.........மாட சாமி காப்பாத்து.....!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்