அரியும் ஹரியும்

ராமன் ஏன் காட்டுக்கு போனான் ? discussion ஓடிகிற்றுன்தது....!!

மாப்ளே ....கல்யாணமான புதுசு .... டீனேஜ் வேற...காட்லே போய் ஹனி மூன் கொண்டாட கிளம்பிருப்பாங்க .....நம்ம இலட்சு....இது புரியாம கரடியாட்டம் வில்ல தூக்கிகினு நானும் அண்ணாகூட போவேன்னு அடம் பிடிச்சு அப்பீட்டு ஆயிகிச்சு....அவனுக்கு பொண்டாட்டி தொல்ல...சரி .....அந்தம்மாவாவது நானும் என் வீட்டுக்காரரோட தான் இருப்பேன்னு பேக்-க தூக்கி கினு கிளம்பிருக்க வேணாம்...? ஒழிஞ்சா போதும்னு விட்ருக்கும்(பக்கத்துல சிவனே னு உக்காந்து , பேந்த பேந்த முழிச்சி கிட்டு நாங்க பேசுறத புரிஞ்சுக்க ட்ரை பண்ணிகிட்டிருந்த ஹரி ய காட்டி ) இவன் பொண்டாட்டியும் இப்படிதாண்டா... இருக்கும்....என்று வழக்கம் போல உசுபேத்தி விட்டான் சந்தானம் . கடுப்பான ஹரி ....உன் பொண்டாட்டி தாண்டா 'ராமரு கூட ஓடி போவா' என்று காட்ட .......ஒரே சிரிப்பு மழை.....!! ஹரி பேரு தான் ஹரியே தவிர ஹரி யை பற்றி ஒன்றும் அறியேன்...!!

பாத்ரூம் பழிவாங்கல்....!!

ஹரி எப்போ பாத்ரூம் போனாலும் புக்-கொடுத்தான்போவாரு....!

உள்ளே போய் என்ன பண்ணுவாருனு ஊருக்கே தெரியும்....! ஆனா ஊருக்கே தெரியும்னு அவருக்கு தெரியாது....! பழைய புக்எல்லாம் ஒரு மூலையிலே தான் கிடக்கும்.....நாய் குப்பை கிண்டுற ஸ்டைல்-லே அங்கே ஹரி கிண்டுராருன்னா அவரு பாத்ரூம் போக போறாருன்னு அர்த்தம். அவரு behaviour decode பண்றதுல நம்ம சந்தானம் எக்ஸ்பெர்ட். மாப்ளே பாரேன்....நொச்சு வாயன்(nick name) பாத்ரூம் போக போறான்....என்பான்...அதே போல.....அந்த கிழிஞ்ச அழுக்கு கைலி ய ராஜ் கிரண் ரேஞ்சுக்கு தூக்கி கட்டிக்கிட்டு போவான் பாரு.....ஹரி ரொம்ப க்யூட் ....நளினமா சிவப்பா இருப்பான்.....அதுனாலே அவன் தன்ன ஒரு கம்பீர காட்டான் மாதிரி காட்டி கொள்ள ஆசபடுவான்...பட் அது எதுவும் வொர்க் அவுட் ஆவாது.....அதுக்கு பதிலா....கவர்ச்சி (?)தூக்கலா தெரியும்.....!! பக்கத்துக்கு ரூம் பசங்க 'ஒரு மாதிரி' ரொமாண்டிக் லுக்கு விட .....பையன் 'டர்' ஆயிட்டான்......பொருக்கி பசங்க....என்று திட்டி கொண்டே.....கை லிய இறக்கி விட்டு போவான்.....

ஹரி உள்ளே போய்.....அஞ்சு நிமிஷம் தான்.......சந்தானம் ...வேகமா ஓடி வந்தான்....'டேய் தக்காளி வாயன பார்த்தீங்களாடா... ?'.......(தக்காளி வாயன் பெயர் காரணம்....பின்னால் )

தூங்கிகிட்டிருந்த தூங்க மூஞ்சியான்....போர்வை ய விளக்காமலே... சொன்னான்....ம்ம்ம்..லைப்ரரி போயிருக்கான்..."

புரிந்து கொண்ட சந்தானம் ....நேரா கீழே போனான் ....ஒரு கை பிடி மண் அள்ளிட்டு வந்து பாத்ரூம் கதவு மேல் இருந்த கேப் வழியா உள்ளே போட்டான்....அதுவரை உள்ளே உற்சாகம் கரை புரள வந்து கொண்டிருந்த " கட்டி புடி கட்டி புடிடா கண்டபடி கட்டி புடிடா ...சும்...சும் சா..... "சட்டென நின்று போனது.....சில வினாடி...அமைதி......திடீரென்று....ஒரு சத்தம்...." டேய் ....கோத்தா சந்தானம்.....இருடா வர்ரேன்......"சந்தானம் இனிமேலும் இருப்பானா என்ன ?....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்