Introduction

செமஸ்டர் எக்ஸாம் வந்தால் போதும்....எங்களுக்கெல்லாம் ஒரே ஜாலி ....
combine study - ன்ற பேரு ல ஒரே லூட்டி தான்......

A short introduction...!!


கார்த்திக் @ கடியான் ( ஜோக் எனும் பெயரால் கொஞ்சம் kooda இறக்கம் இல்லாமல் கொடூரமாக கடிப்பான்.....அதுக்கு அந்த நாயே தேவலாம் போல தோனும்.
But good boy &
(Education boy- ஷேன் நல்லா படிக்கிற பசங்கள அப்புடித்தான் சொல்லுவான்...)

ரவி @ கிளி @ ஊமை குசும்பன் ( பார்க்க ரொம்ப அமைதி . ஆனால் திடீரென்று கமெண்ட் அடிச்சால்
எல்லாம் கதி கலங்கி ஒரு நிமிடம் அமைதி யாகி....பின் வயிறு வெடிக்க சிரிப்போம் . சைலென்ட் கில்லர் )

செந்தில் நாதன் @ சிங்கம்புலி .இவனை பற்றி ஒரு புக் எழுதினாலும் பத்தாது....!நம்ம ஹீரோ கள்ள 'முக்கி'யமானவர்....!!

குரு @ கும்மி @ தூங்கமூஞ்சியான்.....காலையிலே பத்தரைக்கு துயில் எழுவாறு ...சாப்பிடுவாரு....தூங்குவாரு...thirumba மதியம் மூணு மணிக்கு சாப்பிட எழுவாறு...தூங்குவாரு....!!நைட் .....appavum தூங்குவாரு..

கடி,கும்மி ,கிளி ,சிங்கம் இது நாளும் தான் ரூம் மேட்டு கள்.
மத்தது கல்லாம் ஒண்ட வந்த பிடாரிகள் .

பிடாரி 1: நான் @muscle man
( கொஞ்சம் கொலு கொலு-நு cute ஆ இருப்பேன் இந்த dogs களுக்கு அது பொறுக்காது .)

பிடாரி 2 : செல்வின் டேனியல் (மறக்க முடியாத என் மாமு....!!)
( திடீர்னு ஒரு நாள் நைட் 9 .30 மணிக்கு மாப்பு போர் அடிக்குது வா....போய் காபி சாப்டு வரலாம்-நு கூப்டுச்சி....(கூப்பிடும் போதே ஒரு நக்கலா தான் கூபபிடுச்சி.....என் நல்ல நேரம்...எப்பவுமே துள்ளி குதிச்சு கிளம்புறவன் அன்னிக்குன்னு 'இல்லடா மாமு....நீ போய்ட்டு வா...
இப்போ தான் கழுத்து வரைக்கும் புரோட்டாவ குமுறிட்டு வந்துருக்கேன்னு சொல்லிட்டு 'ஆவி.' ல மூழ்கிட்டேன் .( ஆனந்த விகடன்) .)
சிங்கம் புலி மாட்னான்....ரொம்ப அப்பு ராணி பயபுள்ள ....மாமு நான் வரட்டா..? ....(சின்ன சோகத்தோட அடித்தொண்டை குரலில் ) என்ன எல்லாம் கூப்பிட மாட்டியே" னான். பயங்கர குஷி ஆயிருச்சி மாமு....வாடி குட்டி ....நீ இல்லாமலா ? ன்னு கிளம்பிட்டாய்ங்க...!!.சிங்கத்துக்கு ஒரே பெருமை . என்ன அலட்சியமா ஒரு லுக் விட்டான் ...டேய் வீட்ட பாத்துக்க.....(நக்கலு) நான் போயிட்டு சீக்ரமா வந்துர்றேன்...ன்னு ....அன்னா கயித்துல pant -எ சுருட்டிகிட்டு (பெல்ட் இருப்புல நிக்காது பயபுள்ளைக்கு ) கிளம்பிடுச்சி......செல்வின் 85 kg ....
சிங்கம் 45 kg . தோள்ள கைய போட்டுக்கிட்டு கிளம்பிட்டிங்க.....அப்போதான் உள்ள வந்த கிளி பயபுள்ள சீரியஸ் face -a'என்ன...பிரசன்னா ...பசுவும் கண்ணு குட்டியும் எங்க போகுதுங்க ? ( என்ன நக்கலு பாரு) -ன்னு கேட்டுச்சு....சிங்கம் திரும்பி மேலே வந்து 'டேய் நாங்க காபி குடிக்க போறோம் ன்னு கத்திட்டு போனான் .....என்ன பிரசன்னா lover -ரோட cafe day -க்கு போறா மாறி போறான்னு ....சொல்லிட்டு ....அது பாட்டுக்கு போய் தானியம் கொத்த உட்காந்துரிச்சு கிளி ...(நிலகடலை கொரிப்பான்ra...)....நைட் 12 ஆச்சு ........1 ....1 .30 ...ம்ம்ஹூம்.....போன ரெண்டுபேரை-யும் இன்னும் காணோம்...எங்களுக்கு லேசா பயம் தொத்திகிச்சு...!!
என்ன ஆயிருக்கும் ன்னு சீரியஸ்-ஆ யோசிக்க - kitchen ..உள்ளே இருந்து ஒரு சத்தம் "ஒரு வேலை போலீஸ் புடிச்சுட்டு போயிருக்குமோ.....!!" வேற யாரு ...நம்ம silent killer தான். kitchen (அது தான் கிளி இன் favourite place )...!!...
நைட் 2 .30 மணிக்கு கதவு தட்டும் சத்தம்.....! யாரு-ன்னு திகிலா போய் கதவு திறந்தா.....நம்ம பசுவும் கன்னுக்குட்டியும்.....சிங்கம் கண்ணுல தண்ணி.....விட்டா கதறி அழுதுறுவான் போல.........மாமுவும் மர்ம புன்னகை பூக்குது....நடுங்கிக்கிட்டே.....!!டேய் என்னடா ஆச்சு ....காபி சாப்பிட போலியா..?.....ஆளாளுக்கு பதறி கேட்க...சிங்கம் அழுகையை அடக்கிட்டே பரிதாபமா....சொல்லுது...."அப்பிடின்னு சொல்லி தாண்டா கூட்டிட்டு போனான்..ன்னு சொல்ல....வெளிய புகை விட்டுட்டு இருந்த மாமு "டேய் காபி வாங்கிதரலன்னு சொல்லு ..."ன்னு ஒரு மிரட்டல் போட.....மிரண்ட சிங்கம் ...வாங்கி தந்தாண்டா ...எங்க தெரியுமா....கொடைக்கானல்-ல ன்னு சொல்ல எங்களுக்கெல்லாம் ஒரே ஷாக்....
எங்க அதிர்ச்சிய பார்த்ததும் penguin -வாயனுக்கு (மாமு வாய் அப்புடித்தான் கொஞ்சம் சப்பையா இருக்கும்)...ஒரு பெருமை....!!எல்லாதையும் ஒரு ஸ்டைல்-ஆ லுக்கு விட்டு ..சிகரட் புகை-யா ரஜினி ஸ்டைல்-ல ஊதினான்.....!! எங்களுக்கெல்லாம் புரிய கொஞ்சம் நேரம் ஆனது...!!
காபி-ன்னு சொல்லி கோடைக்கானல் மலை (பைக்-ல) க்கு கூட்டிட்டு போய் வந்திருக்கு.....85 km ..........இதுதான் செல்வின் டேனியல்...!!
பாவம் சிங்கம் .....2 நாள் fever ல படுத்துருச்சி....!!

பிடாரி 3 : சண்முகம் @ ஊதல் @ கருக்கி .
பேரு ஷேன். அப்புடி கூப்டா நன்றியோட பார்ப்பான்.தன்னையும் ஒருத்தன் தேசென்ட்- எ கூப்பிடுறானே...ன்னு ஒரு சின்ன பெருமை .....!!
ஊரு வத்தலகுண்டு . (உண்மையான ஊரு.....அது பக்கத்துல ஒரு குக்கிராமம். அந்த பெற கேட்டாலே....டென்ஷன் ஆயிடுவான்...அவன டென்ஷன் பண்ணனும்-னா அவன surrender ஆக வைக்கனும்-னா மட்டும் use பண்ணுவோம்...!!
பங்காளி @ வத்லகுண்டா @ 420 எல்லாம் இன்ன பிற நாம கரணங்கள்....!!
முதல் ஒரு வருடம்.....இவனை யாருக்கும் தெரியாது.....!! கரெக்ட்-எ கிளாஸ்-க்கு 10 மணிக்கு அரக்க பறக்க ஓடி வருவான்.last period
முடியும் முன்னே மறைந்து போய் விடும் ஜந்து....!! ரொம்ப நாளா attendance எடுக்கும் போது ஷண்முக வடிவு...என்றால் யாரும் எழுந்து
attendance சொல்வது கிடையாது....எங்களுக்கெல்லாம் ஒரே craze . யாருடா அந்த கிராமத்து குயில்......அதுவாவது கொஞ்சம் நல்லா இருக்குமா....என்று ஆவலோடு திரும்பி பாப்போம்......ஒரு response -ம் இருக்காதா....சரி இன்னும் join பண்ணல போல என்றே.....நினைத்திருந்தோம்....ஒரு நாள் ஒரு புது professor அறிமுகம் ஆனார்......சரி எல்லோரும்...introduce பண்ணிக்கங்க....என்று...சொல்ல...
நம்மாளுக்கு கொஞ்சம்....கிலி பிடித்து கொண்டது.....தன் பெயரை மென்று விழுங்கிய படியே...." I am சண்முகம் from vatlagundu என்று ஸ்டைலா சொல்ல ...அவருக்கு டவுட்....இந்த பேரு register -ல இல்லையே... ன்னு அவரு செக் பண்ண .....பையன் surrender ....சார் அந்த ஷண்முக வடிவு ....நான் தான்....என்று வெட்கத்துடன் கூற....எங்களுகெல்லாம் ஒரே ஷாக் + ஏமாற்றம் + சிரிப்பு !!!.....அன்னிக்கு canteen -ல வாடா வாங்கி குடுத்து....ஓட்டு ஓட்டு என்று ஓட்டியதில் பையன் அடுத்த 2 நாள் வரவே இல்லை....!!
ராக்கிங் session அப்போ தான் அவன் எங்களுக்கெல்லாம் சீனியர் என்று தெரிந்தது....நக்கல் பண்ணுவதிலும்...!!
ராக்கிங் ரொம்ப interesting ஆ இருக்கும் ....நைட் 12 வந்து எழுப்பி கொண்டு போய் அத பண்ணு இத பண்ணு-ன்னு ஒரே ரகளை யா இருக்கும்....நம்மாள் வீடு பக்கம் என்பதால் hostel ராக்கிங்- இல் இருந்து எஸ்கேப்....!! ஆனாலும் போட்டு கொடுத்து விட்டான் கும்மி .....நீங்க ஷண்முக வடிவ மட்டும் கண்டுக்கிறதே இல்லீங்கணா .....என்றான் சீனியர் களிடம்.....யாருடா அது...என்று விசாரித்து ..."oh இந்த finance கம்பெனி கம்பெனி-ல வசூலுக்கு போற மாறியே oru bag-ga தூக்கிட்டு திருட்டு முழி முழிச்சுட்டு வருவானே அவனா......நாளைக்கு கிளாஸ்-லே வந்து புடிக்குறோம்...ன்னு சொல்லிட்டு அதே மாதிரி வந்து தூக்கிட்டு போய்ட்டானுங்க......அது அப்புறமா....but இங்கே இவன பத்தி தெரிய வந்தது ஒருநாள் கிளாஸ் ரூம்ல வச்சு ராகிங் பண்ணிகிட்டு இருந்தானுங்க.....evening லாஸ்ட் period முடிஞ்சதும்.....கிளாஸ் உள்ளே வந்து கதவ பூட்டிகிட்டு ரவுண்டு கட்டுவானுக...நம்மால் மறையுற டைம்....அன்னிக்கு மாட்டிகிட்டான்.....கடுப்பில் ஒரு ஓரமா குத்தவச்சி உக்கார்ந்து இருந்தான்....( அப்புடித்தான் உக்காரனுமாம் seniors முன்னாடி ) .....ஒரு சீனியர் பார்க்க ரவுடி போல் காட்டி கொள்வான்...பெரிய வாய் ....மூக்கு என்று ...ஆள் பிரமாண்டமா இருப்பான்....."என்னங்கடா....ரொம்ப போர் அடிக்குதா....என்று கேட்டு கொண்டிருக்க....எங்கள் கூட்டத்தில் இருந்து ஒரு குரல்...."ஆமாடா போண்டா வாயா " என்று.....ஏய் யார்ரா...அது....என்று குரல் கொடுத்தால் .....silence ....!! பின் மீண்டும் சிறிது நேரம் கழித்து ஒரு குரல்..."சீக்கிரம் கிளம்புடா....அண்டா வாயா...." என்று....யாருக்குமே தெரியவில்லை யாரு அது என்று...ஆனால் ....சிரிப்பை மட்டும் control பண்ண முடியவில்லை....!! டேய் என்ன நக்கலா...இப்போ யாரு-ன்னு சொல்லல....யாரும் இங்கிருந்து போக முடியாது-ன்னு சொல்ல....ஒரே நிசப்தம்......!! பொறுமை இழந்து பின் கிளம்பி விட்டனர்.....திடீரென்று ஒரு குரல்.....
" அடி பிச்சிருவேன்....அடி...யார்கிட்டே....." என்று ஒரு குரல்.....நாங்கள் எல்லாம் கட கட வென்று சிரிக்க....ஒருத்தன் பார்த்து விட்டான்....aan
டேய் இந்த finance கம்பெனி காரன் தாண்டா என்று கத்த....பையன் "அண்ணே உங்கள இல்லண்ணே ....இந்த இவன தான்...என்று சொல்ல....இருடி...உன்ன நாளைக்கு கவனிச்சுகிறோம்...ன்னு கிளம்பிட்டானுக....!! இப்படிதான் எங்களுடன் ஐக்கிய மானான்....ஷேன்...!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்