முகமூடி - The mask - ரொம்ப பிடிச்சது....!! கிளைமாக்ஸ் தவிர்த்து. 2 வாட்டி பார்த்தேன் for the fight scene build ups . பாட்சா-விற்கு அடுத்து சூப்பர் Build up சீன் இதுவாக தான் இருக்கும். But 'மிஷ்'டர் கின் எதோ ஒண்ணு 'மிஷ்' ஆனா மாறியே ஒரு பீலிங். பல விஷயங்கள் மனதை நெருடுகின்றது . 1 . Kungfu ஹீரோ தண்ணி அடிக்குறது . உண்மைய சொல்லனும்னா தண்ணி அடிக்கிறவன் கூட kungfu கத்துகிட்டா விட்டுடுவான். தவிர்த்திருக்கலாம் . உருப்படாத ஹீரோ-ன்னு காட்ட எத்தனையோ வழிகள்ல காமிச்சுருக்கலாம். 2 . அவரோட தாத்தா ரோபோ ஆராய்ச்சி பண்றா மாதிரி காண்பிச்சு பெரிய பில்ட்-up குடுத்துட்டு,அவன் தாத்தாவும் வெட்டி தான்னு சொல்லறா மாறி இருக்கு. 3 .கிளைமாக்ஸ் ஒரே நாள்ல முடிவு பண்ணி மறுநாள் ஷூட்டிங் முடிச்சுட்டீங்க போல.அவ்வளோ அவசரம் . கிளைமாக்ஸ் மொக்கையா வரவும் ,குட்டி பசங்களுக்கு எடுத்தேன்னு டகால்டி விட்டுட்டீங்க . இந்த கால குட்டி பசங்க-ன்னா என்ன அவ்வளோ இளக்காரமா போச்சா ? theatre -ல கிளைமாக்ஸ் சீன்-ல பின்னாடி ஒரு பொடிசு கேக்குது...."கைய கட்டிட்டா முகமூடி அவ்ளோதானா..ன்னு ?" அஞ்சாதே மிஸ்கின்...