Mugamoodi movie review
முகமூடி - The mask - ரொம்ப பிடிச்சது....!! கிளைமாக்ஸ் தவிர்த்து.
2 வாட்டி பார்த்தேன் for the fight scene build ups .
பாட்சா-விற்கு அடுத்து சூப்பர் Build up சீன் இதுவாக தான் இருக்கும்.
பாட்சா-விற்கு அடுத்து சூப்பர் Build up சீன் இதுவாக தான் இருக்கும்.
But 'மிஷ்'டர் கின் எதோ ஒண்ணு 'மிஷ்' ஆனா மாறியே ஒரு பீலிங். பல விஷயங்கள் மனதை நெருடுகின்றது .
1 . Kungfu ஹீரோ தண்ணி அடிக்குறது . உண்மைய சொல்லனும்னா
தண்ணி அடிக்கிறவன் கூட kungfu கத்துகிட்டா விட்டுடுவான். தவிர்த்திருக்கலாம் .
உருப்படாத ஹீரோ-ன்னு காட்ட எத்தனையோ வழிகள்ல காமிச்சுருக்கலாம்.
2 . அவரோட தாத்தா ரோபோ ஆராய்ச்சி பண்றா மாதிரி காண்பிச்சு பெரிய பில்ட்-up குடுத்துட்டு,அவன் தாத்தாவும் வெட்டி தான்னு சொல்லறா மாறி இருக்கு.
3 .கிளைமாக்ஸ் ஒரே நாள்ல முடிவு பண்ணி மறுநாள் ஷூட்டிங் முடிச்சுட்டீங்க போல.அவ்வளோ அவசரம் .
கிளைமாக்ஸ் மொக்கையா வரவும் ,குட்டி பசங்களுக்கு எடுத்தேன்னு டகால்டி விட்டுட்டீங்க . இந்த கால குட்டி பசங்க-ன்னா
என்ன அவ்வளோ இளக்காரமா போச்சா ? theatre -ல கிளைமாக்ஸ் சீன்-ல பின்னாடி ஒரு பொடிசு கேக்குது...."கைய கட்டிட்டா முகமூடி
அவ்ளோதானா..ன்னு ?" அஞ்சாதே மிஸ்கின்-னா இது...?
மிஸ்கின் Formula : in 'அ..ஆ ' வரிசை.
'அடுக்கடுக்கா கொலைகள் .
ஆபாசம் இல்லாம பார்ல ஒரு டான்ஸ் .
இடுப்புக்கு கீழயே கேமரா வக்கிறது .
ஈவு இரக்கமில்லா ஒரு வில்லன் .
உயிர் குடுக்குற friend .
ஊறுகாயா ஒரு heroine .
எதுக்கெடுத்தாலும் கத்தி கத்தி பேசுற ஒரு ஊனமுற்ற கேரக்டர்.
ஏராளமான CBCID Mufty dress போலீஸ் .
ஐந்து மணி இருட்டு - படம் முழுவதும்.
ஒடுங்கி நடுங்கி வெளிப்படும் பின்னணி இசை. Nice one .
ஓடிகொண்டே இருக்கும் வில்லன் ,போலீஸ் for detection of Chain of crimes .
கருத்துகள்
கருத்துரையிடுக