மாய தாத்தா
அவர் ...
அந்த தாத்தா ...ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்.....சிறிது எச்சில் வழிய....வாயை பிளந்த படி.... ...சுற்றிலும் குயில்கள் கூவ....!!
மகள்களை கட்டி கொடுத்து பேரன் பேத்தி எடுத்தாகிவிட்டது .
நாடி நரம்பெல்லாம் தளர்ந்து விட்டது...
இரவு பகலாக நன்றாக படித்து ஒரு கம்பெனி-யிலோ அரசாங்க உத்தியோகத்திலோ ...சேர்ந்திருந்தால் இந்நேரம் பென்ஷன் வந்திருந்திருக்கும்.....
மனம் எப்போதும் நிம்மதி நிறைந்து ....புன்னகை வழிந்தோடும் தோட்டமாக....இருந்திருக்க வேண்டும்...
தன் வயதொத்த தாத்தாக்களுடன் பூங்காவில் அரசியல் அரட்டை அடித்து கொண்டு ...சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு சாயா சாப்பிட்டு ...சிறிது சயனத்தில் ஆழ்தல் வேண்டும்...
திடீரென அவரருகில் எழும் ...தயக்கத்துடன் கூடிய கிசு கிசு குரல்கள் ....
அனுபவம் தந்த வழுக்கையை தடவிய படி ....
மெல்ல கண் திறந்து திரும்பி பார்க்க.....
தயக்கம் விலகிய ஒரு குரல்....சட்டென ....'சார் ..ஷாட் ரெடி...!..' என்க ....
அந்த குரலின் திடீர் அதிரலால் ...தாத்தா சட்டென உலுக்கி விழ .....
கூட வந்த இன்னொரு முதிர்ந்த குரல்...'மெல்லடா...' என்று கடிந்து விட்டு.....
'ஸா ரி சார் ....ஷாட் ரெடி ...' என்றது.....
20 வயதே ஆகும் ஒரு இளஞ்சிட்டு ஒன்றை நடுங்கும் கையில் பிடித்து கொடுத்து ....பிடி தளரும் தாத்தாவின் கைகளை இறுக்கி 'சார் ..இந்த பக்கம் ...இந்த பொண்ணுக்கு ...ஒரு கிஸ் ..குடுக்குறீங்க ....அந்த பக்கம் ....அவனுக்கு ஒரு பஞ்ச் கொடுக்குறீங்க....ஒரு கிஸ் ஒரு பஞ்ச் ....fight வித் romance பண்றீங்க...ம்ம்ஹும் ....பின்றீங்க....!! கட்டை விரலை தூக்கி காட்டி விட்டு ....அந்த டைரக்டர் தம்பி ஒதுங்கி கொள்ள .....'Actionnnn ...!' சத்தம் கேட்டவுடன்.....தாத்தா உம்மா....கும்மா...உம்மா ...கும்மா...மாறி...மாறி...பின்னி எடுக்கிறார்......கொடூர ஆயுதங்கள் வைத்திருக்கும் 20 க்கும் மேற்பட்ட பயங்கர ரௌடிகளை .....பின்னி எடுக்கிறார்...தாத்தா...!
சிறிது நேரத்திலே களைப்பு தட்டி விடுகிறது ......மூச்சு வாங்க ...ஒரு அசிஸ்டன்ட் தம்பி கை பிடித்து ....நாற்காலி தேடி உக்காருவதற்குள் ...போதும் போதும் என்றாகிவிடுகிறது .
தூரத்தில் பேரலை என குரல்கள் ......
'தலைவா....நீ கலக்கு....' 'அடி தூள் பண்ணு '...
' தமிழ் நாட்டின் வருங்கால முதல்வர்...'
'என்றும் எங்களின் ஒரே சூப்பர் ஸ்டார் ...'
மோவாயை தடவிய படி .....பரிதாபமாக அவர்களை பார்த்து....மெதுவாக கைகளை ஆட்டுகிறார் ...சூப்பர் ஸ்டார்....கூட்டம் இன்னும் இன்னும் ஆர்பரிக்கிறது .....!
என்ன ஒரு கொடூர சமூகமடா ...இது...???!!
ஒரு தாத்தா தன் முதுமையை ....இயல்பாக கொண்டாட அனுமதிக்காமல்.....
கடந்த 40 வருடங்களாக....ஆடி முடித்து...நாடி தளர்ந்து போய் கிடக்கும் ....ஒரு பெரியவரை......
"அடி கொல்லு ...." "ஆடு...ஆட்டு"....என்று வதைக்கும் ஒரு சமூகம் ....
மன நோயாளி சமூகம் தானே...??
கருத்துகள்
கருத்துரையிடுக