மச்சு போன பாவ் பாஜி ..!!

பாஜி ராவ் மஸ்தானி ...மச்சு போன பாவ் பாஜி ..!!

OmG ...இதுக்கா  இவ்வோளோ பில்ட் அப் ..!!
டிக்கெட் Rs 200/- ன்னு இருந்தது ...  PVR  சென்ட்ரல் மால் ( பெங்களுர் )
அப்போவே அலெர்ட் ஆயிருக்கனும் . அடிச்சு பிடிச்சு போய் ...மூச்சு திணற ...
'12 pm  ஷோ.... One பாஜி மஸ்தானி ராவ்' ன்னு சொன்னதும் ....சுத்தி நின்ன ...1/2 trouser   1/4 Trouser எல்லாம் கொல்லுனு சிரிச்சு .....
பாக்யராஜ் மாறி வழிஞ்சு ....ஒரு வழியா டிக்கெட் ...Rs .200 குடுத்தா ....டிக்கெட் குடுக்குற எரும ..'Sorry சார்....its Rs .290/- Saturday ஸ்பெஷல்'-ங்குது ...
...ஏண்டா saturday -ன்னா ஐஸ் கிரீம கடிச்சா சாப்பிடுவீங்க ? இல்லேல்ல?
பின்ன ஏண்டா online -ல Rs .200/-ன்னு போட்டீங்க.....
ஒரு பதிலும் இல்ல .....பின்னாடி ஒருத்தர்  ரெண்டு 1000 நோட்ட நீட்டி "6 பாவ் பாஜி ப்ளீஸ் ..."ன்னு சொல்லிட்டு தொப்பைய வச்சு JCP மாறி முட்டுராப்ல ..!
தம்பி நவுரு-ன்னு வயித்த வச்சு மிரட்டுறாரு ..!
போய் தொலை ....Rs 290/- வ பேதி டாக்டர் -க்கு குடுத்த பீஸ்-ன்னு வச்சிக்கோ ...உள்ள போனா ஒருத்தன் ஓங்கி ஒரு நமஸ்காரம் வச்சிட்டு உடம்பெல்லாம் தடவுறான் ....பாம் இல்லியாம் ....வீட்டுல இருந்து காராசேவு எடுத்துட்டு வந்து தின்றுவீங்களாம் ...அட ...வக்கத்த பசங்களா ...!!!
இதுல ஷாருக் வேற ...அவரோட 'குளிர் காய்ச்சல் வந்த கொக்கி குமாரு குரல்ல ' பாப் கார்ன் ..வாங்கி சாப்பிடுங்க ...' ன்னு ad வேற.....Rs 200/- பாப்கார்ன் க்கு எத்தன கோடி ad ?
அது சரி Re 1 போயலைக்கு 2 crore ad போடுற country இது..!
அது ஏண்டா அவன் அந்த தடவு தடவுறான். But நம்ம friend ரொம்ப நக்கல் பார்ட்டி ....அவர பாத்த  உடனே....அந்த பைய்யன் அவர மட்டும் தடவாமலே விட்ருவான் ....
first டைம் தடவும்போது நம்மாளு உதட்ட ஒரு மாதிரி கடிச்சு ...கண்ணடிச்சு .."ஹே ...இத பாரேன் ..குறும்ம்பு 'ன்னு சொல்லிகிட்டே ...அவன் நெஞ்சுல(@ point blank ) கிள்ளி வச்சுடாப்புல.....!! பாவம் அவன் ஓடியே போய்ட்டான் .
சரி விடுங்க ...நம்ம point-க்கு வருவோம்...
பெரிய பெரிய palace ....
நூற்றுகணக்குல uniform  போட்ட  துணை நடிகர்கள் ...! இத காமிச்சா பிரம்மாண்டம்-ன்னு நான் சொல்லல ...நம்ம சஞ்சய் லீலா பன்சாலி ....
எல்லா பேரும் 'காவிய தலைவன் ' படத்துல நடிக்கிற stage show acting மாறி தான்......
producer பைய்யன் ....நிறைய காசு ....எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாரு....எத்தன படம் produce  பண்ணி எவ்ளோ லாஸ் ....இன்னும் அடங்கல ...!

பின்னாடி ஒருத்தர் 'என்னடா இது கப்பி தனமா எடுத்து வச்சிருக்கான் ' ன்னு
சௌண்டே  விட்டாரு ....!
அதுவும் heroines அடாடா  என்னா அழகு ....எங்க ஊருல களை எடுக்குற பொண்ணுங்களோட களை -யான முகத்த பாக்கணும்டா நீங்கல்லாம்..!!

படுகோனே ....படு மோசம் போனே ...!
பிரியங்கா சோப்ரா - பொண்ணுங்க மேல இருந்த பிரியமே போச்சுரா ..!

ஹன்சிகா மொத்வாணி சுண்டு விரல மட்டும் கூட நடிக்க வச்சிருக்கலாம்.

மீடியாவோட ஓவர் buildup- நம்பி மறுபடியும் மோசம் போயிட்டேன்....!

இப்புடித்தான் 2012-ல Burfi -ன்னு ஒரு படம் ...Media பூராம் தலையிலே தூக்கி வச்சு கொண்டாடுது .போய் பாத்தா ....முடியல ....!!!
நிறைய ஹிந்தி movies இப்புடித்தான் !!
Chennai  எக்ஸ்பிரஸ் - இண்டர்வல்ல ஓடி வந்துட்டேன் ...பாத்தா அது சூப்பர் டூப்பர் ஹிட் .
ரா -one - படம் ஆரம்பிச்ச 25 நிமிஷத்துல தூங்கிட்டேன்.....எந்த படத்துக்கும் தூங்குற சிங்கம் நான் இல்ல ...but Raw -one இந்த சிங்கத்தவே தூங்க வச்சிருச்சி .
தெனாலி ராமன்  இண்டர்வல்-கு அப்புறம் தூங்கிட்டேன் ...தலைவன் படம்.
வடிவேலு is the best contemporary  noble artist .
ஆஸ்கார் deserves வடிவேலு ..! not  the  vice  versa .

மீடியா ad  ...repeated  media  ads ....psychology-க்கலா நம்ம கழுத்த அமுக்கி பாக்க சொல்லுது.....பாரு படு கோனே எம்புட்டு அழகு ....பாரு பிரியங்கா சோப்ரா என்னா தேஜசு-ன்னு....

மீடியா விளம்பரம் ஒரு மாயை . Mass  Hypnotism .
திரும்ப திரும்ப சொல்ற நீ....திரும்ப திரும்ப சொல்ற நீ....வடிவேலு காமெடி தான் media  marketing தாரக மந்திரம்.
பாஹுபலி ...பாக்குறவன் எல்லாம்  பலி ...!!
இன்வெஸ்ட்மென்ட் 220 கோடி ...Collection  500 கோடி ....!!
தன்மானசிங்கம் சத்யராஜ் கிட்டப்பா ஏன் கொன்னாரு....?
இது ஒரு சஸ்பென்சா ...?
 இன்னொரு மொழி நடிகர் காலை தலைமேல் வைப்பாராம் . ரஜினி கிட்ட அடிவாங்குற மாறி நடிக்க மாட்டாராம்.








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்