கழுவி ஊத்தினது...!!

உங்களுக்கு கோவம் வந்து ....பாத்ரூம்ல அழுக்கு ஊற வச்ச தண்ணிய யாரு மேலயாவது தல வழியா கவுத்தி இருக்கீங்களா பாஸ் ?

தம்பி ஜூனியர் ஒருத்தர் நீட்டா formals போட்டுக்கிட்டு 8 am-கே ஆஜர் ஆயிட்டாப்ள .
அரசியல் சினிமா ன்னு கலந்து கட்டி அடிக்கிராப்புல .
30 நிமிஷம் ஓகே . 1 மணி நேரம் மொக்கை எல்லாம் நமக்கு ' ஞே ...ஞே...' தலைய சொரிஞ்சுட்டு யாரையாவது (முக்கியமா பேசுறவன) கடிக்கணும் போல ஆயிடும் .
45வது  நிமிசமே 'தம்பி போதும் .....நான் தூங்கணும் ...நிறுத்திக்கோ'ன்னேன் . ....கேக்கல .
நானே வேல கிடைக்காம ...2 மணி வரைக்கும் தூங்காம ....இவன் வேற.
காதுல பஞ்சு எடுத்து அடைச்சுகிட்டு படுக்குறேன்.
அத பாத்துட்டு பயபுள்ள சொல்லுது....அத பொன்னெழுத்துல பொரிக்கணும் ...இல்ல பாமாயில்லயாவது பொரிக்கணும் but பொரிக்கணும் ..!!
" .....சூரியன் மழை எல்லாம் தன் கடமையா ஒழுங்கா செஞ்சுரும் ..உனக்கு மழை  பிடிக்கல ...அதுனால நான் பெய்யல ...உனக்கு வெயில் பிடிக்கல ...அதுனால நான் அடிக்கல-ன்னா ...உலகம் என்ன பாஸ் ஆஹும் ....அது மாறி உங்களுக்கு பிடிக்கல-ங்குறதுக்காக நான் என் கடமைய செய்யாம இருக்க முடியுமா பாஸ் ...?"

படக்குன்னு எந்துருச்சு பாத்ரூம் கதவ கோவமா திறந்தேன்....அப்பவாவது நிப்பாட்டி இருக்கலாம்.அப்பவும் ஒண்ணு சொல்லுச்சு
".....நான் பேசுறது ...உங்களுக்கு digest ஆவுறது கொஞ்சம் கஷ்டம்தான்....ஏன்னா புரியனும்ல ..! அதுக்குதான் உங்கள நாலு நல்ல புக்ஸ.."
புலீஈர் ...!!!! - தல வழியா கவுத்திட்டேன் ...நாயே ஒழிஞ்சு போ ...!

அதிர்ச்சி . ரெண்டு நிமிஷம் ஒரே நிசப்தம் . பின்னே தொண்டைய செருமிகிட்டு மூஞ்சிய  வழிச்சுகிட்டே 'இந்த உலகம் இருக்கே...' - மறுபடியும்

'டேய்ய்..!! இன்னொரு வார்த்த .....வார்த்த  ....வார்த்த ..வார்த்த !! (ரகுவரனா மாறிட்டேன்) பேசுன...பெட்ரோல ஊத்திருவேன் ...!!'

அவ்ளோதான் கப் சிப் னு போய்ட்டான் ...!  அப்புறம் அவன நான் பாக்கல . கொஞ்சம் வருத்தமா இருந்துச்சி. தேடினேன் கண்ணுலே சிக்கல . நானும் offer  கிடைச்சு kolkatta போய்ட்டேன் .

பட்  லைப் எப்பவுமே ஒரு twist  வச்சிருக்கும்.

12 வருஷம் கழிச்சு .....சலூன்ல FM  கேட்டுகிட்டே ...முடி வெட்டும்போது ...அந்த FM  காம்பியர்  சொல்லறத கேட்டு ஷாக் ஆயி உக்காந்துட்டேன்.....
'நேயர்களே கழுவி ஊத்துறது -ன்னா ....என்ன-ங்கறதுக்கு உண்மையான அர்த்தம் தெரியுமா...?  எனக்கு தெரியும்.....எனக்கு மட்டும் தான் தெரியும்னு கூட சொல்வேன் ....இன்னிக்கு என் பேச்சு சென்னை முழுக்க ...ஏன்  இந்தியா முழுக்க  ...கேக்குது ...கேக்குறீங்க ...ஆனா 12 வருசத்துக்கு முன்னாடி ...இதே நாள் ...Dec 25...நான் ரொம்ப அறிவாளியா பேசுறதா நெனச்சு ...அதிகாலைல பெட்-ட  விட்டு எந்திரிக்காத என் சீனியர் கிட்டே போய் மொக்க போட...அவரு கோவம் வந்து ...பாத்ரூம்ல அழுக்கு துணி ஊறவச்ச தண்ணிய என் தலையில பொளேர்னு  கவுத்திட்டு ...சொன்னாரு...மறுபடியும் நீ மொக்க போட்ட மவனே பெட்ரோல கவுத்திருவேனு ......அன்னிக்கு முடிவு பண்ணேன்
....என் பேச்சோட  அர்த்தம் அடுத்தவங்கள தூங்கவிடாம பண்ணனுமே ஒழிய....
....என் பேச்சோட சத்தம்  அடுத்தவங்கள தூங்கவிடாம பண்ண கூடாதுன்னு .....
என்ன திருத்துன அந்த சீனியர்-க்கு  1000 நன்றிகள்.....அவரு அன்னிக்கு என்ன கழுவி ஊத்தாம இருந்திருந்தா .....இன்னிக்கு உங்க  RJ '@#$$$%' (அவரு பேரு ) இங்க இல்ல ....so  guys  அவமானத்த  சேத்து  வையுங்க ....அதுவே வெகுமானமா மாற investment-ஆ ஆஹும்னு சொல்லிக்கிட்டு இன்னிக்கி நம்ம ......'
அவன் (ரு) பாட்டுக்கு பேசிகிட்டே போக .....அந்த சம்பவம் மறுபடி மறுபடி ....மண்டைக்குள்ள  ஓட .....பேசாம எழுந்து வந்துட்டேன். அன்னிக்கு பூரா சாப்பிட புடிக்கல....எனக்குள்ள எதோ ஒன்னு உடைஞ்சுகிச்சு .....ஆபீஸ் ரெஸ்ட்ரூம் ல போய் ...மூஞ்சி கழுவுனா ....கண்ணுல இருந்து தாரை தாரையா கண்ணீரா வருது.....!
evening  சலூன் கடைக்காரர் பணிவான சிரிப்போட  'என்ன ஸார் ...காலைல ரொம்ப யோசனையா கிளம்பி போய்டீங்க ....அதான் கட்டிங் -க்கு காசு கேக்கலாம்னு ....'


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்