அன்பே தவம்..!
1. மனம் முழுவதும் வெறுப்பு வந்தவர் எப்படி இருப்பார் ?
சிடு சிடு வென்று .....
2. ஏன் (இவ்வளவு வெறுப்பு ) ?
கனவு , ஆசை நிறைவேறவில்லை .
3. ஏன் ( நிறைவேற வில்லை) ?
போதிய முயற்சி எடுக்க வில்லை . 90% இதுதான் காரணம் . ஆனால் நாம் நம்ப மாட்டோம். நம்ப பிடிக்காது .
விரும்பிய வாழ்க்கை கிடைக்க வில்லை - காதல் கைகூடவில்லை, கல்வி கைகூடவில்லை , ஆரோக்கியம் கைகூடவில்லை (இயற்கை ).
4. ஏன் ( முயற்சி எடுக்க வில்லை ) ?
நமது/எனது கட்டுபாட்டில் இல்லை . அதனால். உதாரணம் உங்க லவ்வர் உங்கள கழட்டி விட்டுட்டாங்க . இத எப்புடி எனது முயற்சி இல்லேன்னு சொல்ல முடியும்.
Correct . ஆனா 100% அவங்கள அடைய நீங்க முயற்சி பண்ணீங்களா ? இல்ல அந்த கழுதைய மனசுல இருந்து கழுத்த புடிச்சி வெளிய தள்ளிட்டு இன்னொரு லவ் முயற்சி பண்ணுணீங்களா? ச்சீ ..ச்சீ ...நான் கற்பு கரப்பான் பூச்சியாக்கும் அப்புடின்னு வீர வசனம் பேசுற ஆளா ? அப்போ இத குறிச்சி வச்சிக்குங்க .
உங்க அம்மா அப்பா கல்யாணம் பண்ணி வச்ச புள்ள கூட சண்டையா போட்டு ....டிவோர்ஸ் வாங்கிட்டு ....தலைமுடி கொட்டி போன வயசுல ...காதல் ஹார்மோன் குறைஞ்சு போய் ....ஆமாங்க 38 வயசுல காதல் பண்ண வருமாங்க..?
ஏன் வராது....?ன்னு வெறப்பா கேக்றீங்களா ? நான் காதல் மன்னனாக்கும். இப்பவும் எவ்ளோ பொண்ணுங்கள வெறித்தனமா வெறிக்குரேன்னு தெரியுமா? -இது உங்க mind voice .
Sorry Mr Pepper Salt தல .அதுக்கு பேரு ஜொள்ளு .
1. உங்களுக்கு புடிச்ச பொண்ணு வரும்போது உங்க மனசு அவள அசத்துறதுக்கு என்ன வேணா பண்ண ரெடியா இருக்கா?
அவ பஸ் ல போனா நீங்களும் அதே பஸுல போவீங்களா ......அவுங்க ஆட்டோ-ல போனா நீங்களும் ஒரு ஆட்டோ எடுத்துட்டு follow பண்ணுவீங்களா?
2. அவ வர்றதுக்காக 1 hour ,2 hour wait பண்ண முடியுமா ? ( 18 வயசுல இந்த கேள்விக்கு உங்க பதில் .....'ஹாஹ்ஹா .....ஜுஜுபி 2 மணி என்ன ...? ரெண்டு நாள் கூட அசையாம நடுரோட்டு எரும மாறி நிப்போம் பாஸு -ன்னு சொல்வீங்க )
இப்போ உங்க வயசு 38. உங்க பதில் ....' அந்த அளவுக்கு கூமுட்டையா ஒரு காலத்துல இருந்தேங்க.....ம்ம்ம்ம் ....அது ஒரு 'கூமுட்ட காலம்'. இவளுங்கள பத்தி தெரியாத வயசு அவளுங்க வஹுசி (character ) அறியாத மனசு .
அதுனால அவ்வொளோ மடச்சாம்புரானியா புகைஞ்சுகிட்டு கெடந்தோம் ஜி..'
அதாக பட்டது 40 வயசு நெருங்கும்போது டிவோர்ஸ் வாங்குற கோஷ்டிங்க ....சாகுறவரைக்கும் பேயா அலைய வேண்டியது தான். பொண்ணு கிடைக்குமா ? 40 வயசுல சூடா 'பன்'னே கிடைக்க மாட்டேங்குது இந்தியால ....'
என் friend ஒருத்தன் MICROSOFT -ல வொர்க் பண்ணினான் . 30 வயசுல ஜாயின் பண்ணினான் .மாசம் 7 லட்சம் சம்பளம். 36 வயசு வரைக்கும் பொண்ணு தேடுனான்.
30 வயசுல பொண்ணு தேட ஆரம்பிக்கும் போது ....சிவாஜி படத்துல ரஜினி இந்தியா வந்து இறங்குபோது அட்ரோசிட்டி பண்ணுவாரே......அவரெல்லாம் பிச்சை வாங்கணும் இவன் பண்ண அட்ரோசிட்டி -கிட்ட.
ஹாய் ...பேப்ஸ் ...என்ன இவ்வோளோ முடி வச்சிருக்க.....கொஞ்சம் கொறச்சு curly வச்சுக்க ....
ஹேய் .....பூப்ஸ் ....சாரி ...பேப்ஸ் ...(நக்கலு....) உனக்கு மட்டும் இந்த உதட்டுக்கு கீழ ஒரு மச்சம் இருந்துசின்னு வச்சிக்கோ ....உன்ன தான் டிக் அடிச்சிருப்பேன் ....பட் சாரி ஒரு சின்ன ப்ளாக் டாட் .....நம்மள சேரவிடாம பண்ணிருச்சி.
ஹேய்....ஹேய்.....bloody convention ....இட் sucks man ....கொழம்பு மாறி கொதிச்சுகிட்டே இருப்பான்.
அடிக்கடி தோள குலுக்க ....கண்ணடிக்க ....தலைய ஒரு நிமிஷம் கலஞ்சாலும் ....பொண்ணுங்க மாராப்பு சரி பண்றா மாறி ......விடமாட்டான்.
அதே பைய்யன் : வயசு 36.
'விடுதலையா....இந்த வாழ்க்கை ...' ரஜினி கெட்டப்-ல பரிதாபமா....இவளாவது நம்மள ஓகே சொல்ல மாட்டாளா ...எச்சி முழுங்கி நின்னத பாக்கும் போதுதான் .....உசிலம்பட்டி மேல முதல் முறையா கோவம் வந்துச்சி.
பின்னே பொட்ட குழந்தைகள எல்லாம் கள்ளிப்பால் குடுத்து ...SEX Ratio வ குறைச்சா ?? ( பத்திரிகைகள் சொல்லுச்சே .) அன்னிக்கு அதுங்க கள்ளிப்பால் முழுங்குனதுக்கு ...இன்னிக்கு இவன் எச்சிய முழுங்க வேண்டி வர்றது Chaos தியரி தானோ...?
கருத்துகள்
கருத்துரையிடுக