நேனே ஷைலஜா - தெலுஙூ
உங்களுக்கு சுச்சா வருது.
ஆனா வெளிய சொல்லமாட்டீங்க ......
லவ் வருது .
ஆனா வெளிய சொல்லமாட்டீங்க ....
ஏன்னா உங்க சுபாவம் அப்புடி. இந்த ஒரு லைன் வச்சு ஒரு அழகான மூவி .
நேனே ஷைலஜா - தெலுஙூ ....தெலுங்கு-ன்னு சொன்னா தெலுங்கு friends க்கு கோவம் வரும். ஏன்னா without லு இட்ஸ் எ பேட் வேர்ட் .
படம் பூரா கீர்த்தி சுரேஷ-வே பாத்துகிட்டு .....எனக்கு நானே வெக்க பட்டுக்கிட்டுருந்தா ...? திடீர்னு ஸ்க்ரீன்-ல 'directed by 'ன்னு வந்த உடனே ...கொஞ்சம் ஷாக்-கா தானே இருக்கும்.
அது மொக்கையா இருந்தாலும் போர் அடிக்காதுல்ல.
'மனம் கொத்தி பறவை' - ஆத்மியா அக்கா மாறியே ....இருக்காங்க ..!
ஒரு படம் பார்த்துட்டு வெளியே வந்தா அந்த பாதிப்பு வெளியே வந்த பின்னும் இருக்கணும். பாக்குற பன்னாடைகள பொன்னாடை போத்தி உள்ளுக்குள்ள இழுத்து போட்றனும் . அது படம் .
பாத்துட்டு வெளிய வந்த பின்னாடியும் ...தின்ன புல்ல கக்கி அசை போடுமே பசுமாடு
....செட்டிநாட்டு ஆப்பம் ...சாப்ட்டு முடிச்சு 2 மணி நேரம் கழிச்சும் oesophagus-ல ஒரு taste குடுக்குமே ....அது மாறி.
ஒரு சில படங்கள் ரொம்ப பண்ணும்.' 7G ரெயின்போ ' மாதிரி....இந்தியன் தாத்தா மாதிரி...
ஹீரோ ராம் நம்ம சத்யராஜ் பையன்னாட்டம் but கொஞ்சம் cute -ஆ ...!
ஹீரோயின் ad movie maker .....ஆனா காதல வெளிய சொல்லாத சுபாவம் ...மேட்ச் ஆவல .
மத்த படி அடிச்ச தம்மே தான் ....மூக்குல புகைய ரிங் ரிங்கா விட்டு நம்மள கொஞ்சம் வேடிக்கை பாக்க வச்சிருக்காரு Kishore Tirumala
கருத்துகள்
கருத்துரையிடுக