Dry Cough -வறட்டு இருமல்

வறட்டு இருமல்.

Do you have Continuous Cough either dry or mucus-laden....no worries...read the below 2 blogs. 
Useful info. I did and got cured for allergic cough.
 In Bangalore 50% people are infected with dry cough it seems. அந்த அழகான lungs Specialist  டாக்டர் சொன்னாங்க..Heart Specialist . So ....

 மூலிகையின்  பெயர்: ஆடாதொடை or  ஆடு தின்னாப்பாளை

(தாவரப் பெயர்கள்: Adatoda Vasica Nees, குடும்பம் - Acanthaceae )

  வளரும் தன்மை: 
ஆடாதோடை என்ற செடியைக் கிராமங்களில் அனைவரும் அறிந்திருப்பார்கள். நீண்ட முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும் வெள்ளை நிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி. வேலியில் வைத்து வளர்க்கப்படுகிறது. தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இது கசப்புச் சுவை, வெப்பத்தன்மை, காரப்பிரிவில் சேரும். இது விதை நாற்று, கரணை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படும்.

1) பயன்படும் உறுப்புகள்: இலை, பூ, பட்டை, வேர் ஆகியவ மருத்துவப் பயனுடையவை.

2) பயன்கள்: ஆடாதோடை இலையும் ஐந்து குறுமிளகும் சாப்பிட்டால் ஆடாத உடலும் ஆடும், பாடாத குரலும் பாடும் என்ற ஒரு பழமொழியுண்டு. இதனால் காயம், ஈளை இருமல், சுரம், காமாலை, இரத்தக் கொதிப்பு இவைகளை குணமாக்கும். கபத்தை அகற்றும், இசிவை அகற்றும். நுண்ணிய புழுக்களைக் கொல்லும். சிறுநீரைப் பெருக்கும் தன்மையுடையது.

இலையின் ரசத்தைப் பத்து முதல் இருபது துளிவரை எடுத்துத் தேனுடன் கலந்து சாப்பிட வாயு, கபக்குற்றுங்களின் பெருக்கைச் சமன்படுத்தியும், வாத தோசங்கள், பற்பல சுரங்கள், முப்பிணி நோய், வயிற்று நோய், ரத்தக் கொதிப்பு, ரத்த பித்தம், இருமல், மேல் இளைப்பு, வாந்தி, விக்கல், சூலை அண்ட வாயு இவைகளைப் போக்கும். பாடக்கூடிய நல்ல குரல் தரும். இலையை உலர்த்திச் சுருட்டாகச் சுருட்டி புகைபிடித்துவர இரைப்பு நோய் நீங்கும். ஆடாதோடை இலையுடன் இலைக்கள்ளி இலைச் சாற்றைக் கலந்து வெல்லம் சேர்த்து மணப்பாகு செய்து 10 முதல் 20 துளி அளவு 2-3 முறை கொடுத்தால் இரைப்பிருமல், வயிறு உப்புசம், கப நோய்கள் குணமடையும். இலைச்சாறு 2 தேக்கரண்டி எருமைப் பாலில் காலை மாலை கொடுத்து வரச் சீதபேதி, ரத்தபேதி குணமடையும்.

ஆடாதோடையின் பூவை வதக்கி இரு கண்களின் மீதும் வைத்துக் கட்ட கண்களில் உண்டாகும் நோய் தீரும்.

ஆடாதோடைப் பட்டையை நன்றாக இடித்துச் சலித்து குடிநீர் செய்து உட்கொண்டாலும், பட்டையை உலர்த்தி இடித்து சூரணம் செய்து வைத்துக் கொண்டு வெந்நீரில் 2 கிராம் சாப்பிட்டு வந்தாலும் சுரம், இருமல், இளைப்பு ஆகிய நோய்கள் நீங்கும்.

ஆடாதோடை வேருடன் கண்டங்கத்தரி வேர் சமனளவு சேர்த்து இடித்துச் சலித்து அரை முதல் ஒரு கிராம் வரை தேனில் சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு, சவாச காசம், சன்னி, ஈளை, இருமல், சளிசுரம், என்புருக்கி, குடைச்சல்வலி ஆகியவை குணமாகும். ஆடாதோடை வேரினால் இருமல், உஷ்ணம், மந்தம், வியர்வை நோய், கடின மூச்சு, கழுத்து வலி முதலியவை நீங்கும். கற்பிணி பெண்ணுக்குக் கடைசி மாதத்தில் வேர்கசாயத்தை காலை மாலை கொடுத்துவரை சுகப் பிரசவம் ஆகும்.

ஆகவே ஆடாதோடை என்பது இருதயம், இரைப்பை, நுரையீரல், இவைகளில் கபத்தினாலும், வாதத்தினாலும், பித்தத்தினாலும் ஏற்படும் கோளாறுகளைக் குணப்படுத்தும் ஓர் அற்புத மூலிகையாகும்.
http://mooligaivazam-kuppusamy.blogspot.in/2007/07/blog-post_19.html

ஆடாதொடை 
வெகுட்டலோடு கூடிய கசப்புச் சுவை உடையது. எதையும் கடித்துச் சாப்பிடும் ஆடுகள் இதன் இலைகளைத் தொட்டுக் கூடப் பார்க்காது. அதனாலேயே ஆடு தொடா இலை எனப் பெயர் வந்துள்ளது. இன்னும் சிலர் இந்த இலையின் கசப்புச் சுவை நம் உடலின் நரம்புகளை வலிமை ஆக்கி நம் கால்தொடைகளை ஆடாமல் வைத்திருக்கும் எனவும் அதனாலேயே இதற்கு “ஆடாதொடை” எனப் பெயர் வந்தது எனவும் கூறுவர்.


ஆடாதொடைப் பன்னம் ஐயமறுக்கும், வாதமுதல்
கோடா கோடிச் சுரத்தின் கோதொழிக்கும், – நாடின்
மிகுந்தெழுந்த சன்னிபதின் மூன்றும் விலக்கும்,
அகத்து நோய் போக்கும் அறி. 


இதன் பொருள் :  ஆடாதொடை இலை சளியை அறுக்கும். வாதம்

முதல் வரும் பல சுரங்களை ஒழிக்கும். பதின்மூன்று சன்னியையும், வயிற்று நோய்களையும் நீக்கும்.ஆடாதொடை இலையையும், சங்கிலையையும் 100 கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டுப் பாதியாக காய்ச்சிக் குடித்து வந்தால் வயிற்று வலி குறையும்.
இதன் கிளைகளை வெட்டி வைத்தாலே முளைத்துவிடும். பிழைக்கும் வரை தண்ணீர் ஊற்றினால் போதும்; நன்கு வளர்ந்து வடும். இது ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய முக்கிய பச்சிலையாகும்.
சில மருத்துவர்கள் இதனைப் பெரியா நங்கை எனக் கூறுகின்றனர். இன்று நாம் பெரியா நங்கை எனக் கூறுவதைச் சிறியா நங்கை என்கின்றனர். இது ஆராய வேண்டிய ஒன்று.
இதை வளர்ப்பவர்கள் அடர்த்தியாக இல்லாமல் வெட்டி வளர்க்க வேண்டும். இல்லை என்றால் பாம்பு போன்ற விஷ உயிரினங்கள் வளரும் இடமாகி விடும்.
நீண்ட முழுமையான ஈட்டிவடிவ இலைகளையும் வெள்ளை நிறப் பூக்களையும் உடைய
குறுஞ்செடி. சிற்றூர்களில் வேலியில் வைத்து வளர்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இலை, பூ, வேர் ஆகியவை
மருத்துவப் பயனுடையவை.

சளி நீக்கி இருமல் தணிப்பானாகவும், வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும், இசிவு நோய் நீக்கியாகவும் செயற்படும்.
  • இலைச் சாறும் தேனும் சமஅளவு கலந்து சர்க்கரை சேர்த்து தினம் 4 வேளை
  • கொடுக்க நுரையீரல் இரத்த வாந்தி, கோழை மிகுந்து மூச்சுத் திணறல், இருமல்,
  • இரத்தம் கலந்த கோழை வருதல் ஆகியவை குணமாகும்.
  • குழந்தைகளுக்கு 5 + 5 துளி
  • சிறுவர் 10 + 10 துளி
  • பெரியவர் 15 + 15 துளி
  • 2 இலைச் சாறு 2 தேக்கரண்டி எருமைப்பாலில் காலை, மாலை கொடுத்து வரச் சீதபேதி, இரத்தப்பேதி குணமாகும்.

  • 10 இலைகளை அரை லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சித் தேன்
  • கலந்து காலை, மாலை 40 நாள்கள் பருகி வர என்புருக்கிக் காசம், இரத்தக்
  • காசம், சளிச்சுரம், சீதளவலி, விலாவலி ஆகியவைத் தீரும்.
http://greatinformationrepository.blogspot.in/2012/12/blog-post_7457.html

IP MAN MOVIE-ய ரசிச்சு பார்த்த மக்களுக்காக ....

Wing chun for beginners lesson 1 – basic leg exercise

https://www.youtube.com/watch?v=8w9tKNWIqyM 
மொட்ட சூப்பர் ...
புருஸ்லீ  என்ன பெரிய fighter .....? வாட்ச் திஸ் மாமு.
https://www.youtube.com/watch?v=CN3FYAvK2zY - சுட்டி விங் சூன் .



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு