Awareness Vs Ignorance = why AMMA again ?

மே 20 2016....நேத்து தான் election ரிசல்ட் . பிரபாகரன் சுட்டு கொல்லபட்டார்-ன்னு நியூஸ் வந்தப்போ
அப்பாவி  தமிழன்   எவ்ளோ அதிர்ச்சி அடைந்தானோ.....அதே அதிர்ச்சி அம்மா மீண்டும் ஜெயிச்ச நியூஸ் கேட்டதும் ....
(அப்பாவி = மிடில் கிளாஸ் + கொஞ்சம் விஷயம் தெரிந்த + தான் நினைப்பதையே 5 கோடியே 75 லட்சம் வாக்காளர்களும் நினைப்பதாக நினைத்து நாசமாய் போன  தமிழன் )

பல வருஷங்களுக்கு முன்னாடி வந்த  ' அந்த ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது ...'  டயலாக் காது பூராம் எதிரொலிக்க ....காபி சாப்பிட கிளம்பிட்டேன்.....கசப்போட கசப்பா முழுங்கி தொலைக்க ....வானமே கண்ணீர் விட்டு கதறி கிட்டுருக்கு தமிழன நெனச்சு....

என்ன காரணம்...?

ஒரு குட்டி (kelvipatta) கதை ...

ஒரு திருவிழா கூட்டத்துக்கு ஒரு சின்ன பையன அவன் டாடி  கூட்டிட்டு சுத்தி காட்றாரு......

எல்லாமே ஜாலியான பொழுதுபோக்கு ....பட் அந்த குட்டி பையன் ..அழுதுகிட்டே இருக்கான் ......

அந்த மிடில் கிளாஸ் டாடிக்கு ...புரியல ..அவனுக்கு அந்த குட்டி பையன்மேல கடுப்பா வருது.

அப்போ அங்க வந்த ஒரு பெரியவர் .....அந்த குட்டி பையன தூக்கி அந்த அப்பாவி டாடி தோள்ள  உக்காரவசிட்டு  'ம்ம்ம்....இப்போ போங்க ...பையன்  அழ மாட்டான்'...ன்னாரு.

அதே மாதிரி பையன் பயங்கர குஷி ஆயிட்டான்....'ஆ...ஊஒ...' ன்னு சந்தோசமா கத்துறான்.

காரணம்.: கண்ணோட உயரம் . அதுக்கு முன்னாடி அவனுக்கு தெரிஞ்சதெல்லாம் ...வெறும் கால்கள் தான் ..!

இங்க ...அந்த மிடில் கிளாஸ் டாடி = படித்த மிடில் கிளாஸ் மக்கள்

அந்த சின்ன பையன்  = ADMK + DMK  க்கு காசுக்காக ஓட்டு  போட்ட படிக்காத மாக்கள்

கண்ணோட உயரம் = விழிப்புணர்ச்சியோட உயரம்.

இங்க படிச்ச நமக்கும் அறிவு கம்மிதான்.....ஜூனியர் விகடன் படிச்சுட்டு ...ஊழல் பாத்து ஒவ்வொரு முறையும் கொதிச்சு போய் யோசிக்க ஆரம்பிச்ச நாம ....ரொம்ப கம்மியான சதவீதம் தான்.

நாம ஜூவி  படிக்குற அந்த நேரத்துல ...ரேஷன் கடை கியூ வுல - அரிசிக்கும் பருப்புக்கும் மண்ணெண்ணெய்க்கும்  நின்ன பய தான்...பொம்பளக தான் ...இன்னிக்கு நம்ம தலவிதிய நிர்ணயிச்சு இருக்காங்க ...!

நாம 100 பேரு அறிவு ஜீவியா யோசிச்சு....குரூப் discussion பண்ணி....
வாட்ஸ் அப் ல சிந்தனைய தூண்டுற மீம்ஸ் எல்லாம் உருவாக்கி forward பண்ணிட்டு ...
நம்மள நாமே ஒரு ராஜா ராம் மோகன் ராய் ரேஞ்சுக்கு கற்பனை செஞ்சுட்டு ...தலையில உருமா கட்டி ஸ்டைலா
போஸ் குடுத்துட்டு...போய் இரட்டை மெழுகுவர்த்தி லேயோ .....நோட்டா-விலேயோ  ஓட்ட குத்திட்டு வந்து
இந்தியன் தாத்தா ரேஞ்சுக்கு ஈசி சேர்ல சாஞ்சு உக்காந்து 'செஞ்சுடோம்ல'-ன்னு  காலாட்டும் போதுதான் பக்கத்துக வீட்டு வேலைக்காரம்மா சொல்லுது ....
"300 ரூவா தே..குடுத்தாய்ங்க ...பக்கதூட்டுக்கு மட்டும் 400 ...அதான் வந்த கோவத்துக்கு ADMK க்கு  குத்திவுட்டேன்...."
"இல்லேன்னா  ? " - நான்
வெக்கத்தோட சொல்லுது வெக்கெங்கெட்டது  " இல்லேன்னா அய்யாவுக்கு இல்ல குத்திருப்பேன் '.....
கத்தி எடுத்து உன்ன குத்திருக்கணும் .

நம்ம வீட்டுக்கு வாச்சது இன்னும் பிரம்மாதம் போங்கோ...." எனக்கு கோவம் கோவமா வந்துச்சு தம்பி ....அவளுக்கு மட்டும் 350 எனக்கு 300.......!!! 50 ரூவா என்ன தெருவுலையா கெடக்குது .....அதான் வந்த கோவத்துக்கு ...4 பட்டன புடிச்சு அமுக்கி விட்டு வந்துட்டேன் ....!! - சொல்லிட்டு  பெருமையா ஒரு லுக்கு வேற ...

அட செல்லாகாசே ....செல்லா ஓட்டு போட்டதுல ஒரு பெரும வேற....

பெற்றோர்களே ...GK-ன்ற பேருல 'which city is the capital of  zambia..?' ன்னு கேட்டு பெருமையா லுக்கு விடுறது.....

எந்த மேட்ச்-ல டெண்டுல்கர் 100 அடிச்சாரு-ங்குறத மனப்பாடமா  சொல்றத பெருமையா  வச்சுருக்குற காலேஜ் படிக்குற எருமைகளும் ...மொதல்ல...." Politics படிங்கடா....!!! "

அப்புறம் இந்த படிக்காத காட்டுபய மக்களுக்கு நம்மால முடிஞ்ச விழிப்புணர்வ ஊட்டாத வரைக்கும் ......100% voting நமக்கு சாபக்கேடு .
 Its a self destructing weapon. So don't support  100% voting until we reach 100% literacy rate.
  ....(omg...wife!!! .....see u later)....bfn

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்