உதிராத இலைகள்
குஷியான காலத்தையே ரிஷி மூலமாய் கொண்டவன் நான்....
பள்ளி காலத்தின் ஒவ்வொரு இளம் நிமிடமும் கரைவதை கவலையோடு கடந்தவன் நான்...
டைரியில் சேமிப்பதற்கென்றே சேட்டைகளை செவ்வனே சிலாகித்து செய்தவன் நான்...
சிறு டைரிக்குள் அடங்கும் சிறுத்தையா எனது சேட்டைகள் ....?
யானை கூண்டு யாசிக்கும் யாப்பிலக்கணம் அது... யப்பெ ....!
காதல் எனும் கத்தரிக்காய் ....அதை கால் கிலோ வாங்கி குழம்போ கூட்டோ வைத்து தின்று விட்டு ...
.யதார்த்தம் எனும் எட்டி காயை முகர்ந்து பார்க்க பழகியிருக்க வேண்டும் ....இல்லை தாய் தகப்பன் கற்று கொடுத்திருக்க வேண்டும்.
...இல்லையா ? பள்ளிக்கூடமாவது சொல்லி கொடுத்திருக்க வேண்டும்...
கருமம் ...
நாம் கற்றதெல்லாம் கல்வியா...?
காறித்தான் துப்ப வேண்டும்....
அறியாமை ...ஒரு தலைமுறையையே அறிவற்ற ஆமை யாக்கி ஆழ் கிணற்றில் போட்டு பாழடித்து விட்டது.
30 வயது வரை வாழ்வின் மகத்தான லட்சியம் 'பெண்' என்று ஆனது.....
இதற்கு பெயர் ஒழுக்கம் என்று ஓம்ப பட்டது ??
32 வயதில் ....ஆண்மை அதன் வீரியத்தை இழக்க தொடங்கும் வயதில்....
குமட்டில் குத்தி குமரி பக்கத்தில் என்னை குத்த வைத்தது கூறுகெட்ட சமூகம்....
பதர்த்து போன திரியை பத்த வைக்க பல முயற்சி செய்தது....
16 வயதில் பெண்ணை முழுதாக 'பார்த்து ' முடித்து 32 வயதில் வாழ்க்கையின் பெரும் பகுதியை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து விட்ட வெள்ளைக்காரன் எங்கே....?
32 வயதில் பெண் பார்க்க கூட்டி போய் ....'பேசுங்க தம்பி' எனும் பேத்தனமான என் சமூகம் எங்கே...?
வல்லரசு எப்புடியாடா ஆவும் இந்தியா ...?
மரம் முழுவதும் உதிராத இலைகள்....
மனம் முழுவதும் உதிராத நினைவுகள்....
கருத்துகள்
கருத்துரையிடுக