jallikattu poralikalae

நாம்ம எவ்ளோ effort போட்டு தொண்டை கிழிய கத்தி போராடுனாலும் கடைசியில இந்த பாழா போன படிக்காத கூட்டம் ADMK க்கு தான் ஓட்டு போட்டுச்சு .
வருஷ கணக்குல புள்ளைய பொத்தி வச்சு வளத்து ஒரு மொக்கை சாமிக்கு கட்டி குடுத்தா மாறி ஆயிடுச்சி.
 கொஞ்சம் கொஞ்சமா வாய கட்டி வயித்த கட்டி  சேத்து வச்ச காச ஓடி போன பைனான்ஸ்-ல போட்ட மாறி.
ஜல்லிக்கட்டுக்கு போராடுறது நல்ல விஷயம் தான். ஆனா விவசாயி தற்கொலை,  சசிகலா ஆட்சி புடிப்பு எல்லாம் பின்னே தள்ள படுதே .?
யோசிச்சு பாருங்க....ஜல்லிக்கட்டு நடந்த பிறகு நம்ம மாநில அரசியல்
 தலைமைய கொஞ்சம் நெனச்சு பாருங்க . நெனச்சாலே நெஞ்சு நடுங்குது .
தமிழ்நாட்டை பிளாட் போட்ற  வேண்டியது தான்.
எது முக்கியமோ...அதை நோக்கி போராட்டத்தை திருப்புங்க.
அரசு ஹாஸ்பிடல் எல்லாம் ரொம்ப கேவலமா இருக்கு.
Govt Schools எல்லாம் அடிப்படை வசதியே இல்லாம இருக்கு.
முதல்ல இந்த போராட்ட குரூப்ப அப்புடியே maintain  பண்றதுக்கு என்ன வழி ன்னு யோசிங்க...whatsapp  256 members க்கு மேல allow பண்ணாது. யோசிங்க .
ஒரு core group , அதுக்கு சப்போர்ட் குரூப் , மக்கள் தொடர்பு குரூப் ன்னு create பண்ணுங்க.(கம்யூனிஸ்ட் பார்ட்டி யோட பொலிட் பீரோ மாறி )
DMK ,ADMK  இந்த 2 கட்சிகளோடு தொண்டர்களை கொஞ்சம் யோசிக்க வச்சாலே தமிழ்நாடு வல்லரசு லட்சியத்தை நோக்கி கம்பீரமா நடை போடும்.

அதுனால வாடிவாசல் திறந்த பின்னாடி இந்த போராட்ட கூட்டத்தை அம்போன்னு விட்டுட்டு வீட்டுக்கு கிளம்பிடாம இப்போவே யோசிக்க ஆரம்பிங்க.
after all ...அம்பதாயிரம் சம்பளம் வாங்குற நமக்கே வருஷத்துக்கொரு performance appraisal வைக்கும் போது ....நம்ம வாழ்கையவே  5 வருசத்துக்கு அடமானம் வச்சிட்டு  ஒரு appraisal  கூட வைக்காம கைய கட்டிக்கிட்டு வேடிக்கை பாக்குறோமே ...எவ்ளோ ஏமாளிங்க நாம.??
ஆட்சி  புடிக்கலன்னா 2 வருசத்துல ஒரு  Performance Appraisal voting வச்சு தூக்கணும் . அதை நோக்கி போராடனும் . சின்னமனூர் சின்னபையன்

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்