Split movie review Yaman movie review

Split - Manoj Night syamalan - really got angry in using such a beautiful , scoring knot for under using it.

ஆத்திரங்கள் வருது மக்களே ..!!

23 identities - என்னமா புகுந்து விளையாடலாம்.???

மக்கு பையனுக்கு பிட் பேப்பர் கிடைச்சா மாறி ஆயி போச்சு......ஒரு பிரயோஜனம் இல்ல. Super script...sappa director. கேட்டா வில்லேஜ் ..சிஃஸ்த் சென்ஸ் எல்லாம் எடுத்து உடவேண்டியது . என்ன கையிலே வயறு சிக்குது...

எதுக்கு இவ்வோளோ மெதுவா...? நடிக்கிற எல்லாருக்கும். sugar  complaint a ?.. கேமராமேனுக்கெல்லாம்  சுகர் complainta  ? 
அவன் அவளை பாக்குறான்....அவள் டிவி பாக்குறா...இப்போ டிவி அவளை பார்க்குது...இவன் அவகிட்ட பேச போறான் ...வாய தொறக்குறான்....தொறக்க போறான்....தொறந்துட்டான். எழவு ...இதுக்கு 10 நிமிஷம் கேமரா அவனவே பிசுக்கோத்து கவ்வ ரெடியா இருக்க நாயாட்டம் பாக்குது...பாக்குது...பாத்துக்கிட்டே இருக்கு.  பிசுக்கோத்து தான் போட்ட பாடு இல்ல.

எருமை கூட ...'போங்கடாங்' -ன்னு  பொறுமை   இழந்துரும் .

கிழவியை பாக்குறான் ...குமரியை பாக்குறான்...மறுபடியும் கிழவியை பாக்க வர்றான். பேசுறான். போறான் .கடத்தி வச்சுருக்குற குமரிகளை பாக்குறான் but  ஒன்னும் பண்ண மாட்டேங்குறான்.....இந்த எழவுக்கு எதுக்கு பயங்கர நம்பியார் ரேஞ்சுக்கு அவளுங்களை கடத்துவானேன். அடைச்சு வைப்பானேன் .
சரி அந்த கிழவியவாவது போட்டு தள்ளுவான்னு ஆவலா  வெயிட் பண்ணா....
சனியன் அது  பேசுது ...பேசுது...பேசி கிட்டே இருக்கு ...இது கேட்டுகிட்டே இருக்கு.....நமக்கு ஆத்திரங்கள் வந்துகிட்டே இருக்கு மக்களே ...

பேய் வரப்போகுதுன்னா காமெராவை ஸ்லோவா காட்டலாம் தம்பி.. லாஜிக் இருக்கு.
உச்சா வர போகுதுன்னாலும் அதே மாறி மெதுவா காட்டறியே ....கொஞ்சமாச்சும் ஈவு இரக்கம் வேணாம்.
பேப்பயலே ...நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட ...180 ரூவா  டிக்கெட் காசு போச்சு . ஜாக்கி சேகர் அண்ணே -youtube reviewer- ...ஜக்கி வாசுதேவ் ரேஞ்சுக்கு பேசுறீங்க....ஆதியோகி சிலைகூட உங்கள மன்னிக்காதுண்ணே ...

இண்டெர்வெல்லுக்கு அப்புறம் ...
சரிடா...அப்புறம் என்ன-ன்ற ரேஞ்சுக்கு  எல்லாம் வெறிச்சு பாக்குறாய்ங்க.
ஒன்னும் வாங்கி சாப்புட முடியாது . PVRல பாப்கார்ன் வாங்கி சாப்புடுற அளவுக்கு நம்ம டாடி சொத்து சேத்து வெக்கல மக்கா.


இவரு படம் ஆரம்புச்சு 1.30  மணி நேரமா  ஓணான் ஒண்ணுக்கு போற ஸ்பீடுல ஓட்டிட்டு கடைசி 5 நிமிஷம் SRS KPN  ஸ்பீடுல காமிச்ச ஒடனே ...எல்லாம்  எந்திருச்சு நின்னு கைலியை  தூக்கி கட்டி ரெடி ஆயிடுவாங்கலாமா?


அதுக்கும் சில  ஜென்மங்கள் கை தட்டி குதூகலிச்ச கண்ராவியும் நடந்துச்சு....

அட எருமைகளா ...பிட்டு படம் பாக்குற கோஷ்டிகளா இருக்கும் போல....
படம் முடியுற நேரத்துல பிட்டு பாத்துட்டு பேண்டை கையில புடிச்சுகிட்டு  கிளம்பிர  வேண்டியது ....

பக்கத்துக்கு சீட்டுக் காரரு  திடுக்குனு என்கிட்ட திரும்ம்பி .....கேட்டாரு...தம்பி அதே படம் தான இது னு ?


யமன் - டபுள் ஓகே.


செல்லத்துக்கு சுக்கிர திசை தான். ஆல் மூவிஸ் ஹிட் .
நைஸ் புளொட் நைஸ் ஸ்கிரிப்ட்.
ஆனந்த விகடன் சொன்னாமாரி இன்டெர்வல்க்கு அப்புறம்  திரைக்கதை தள்ளாட்டம் ...slow எல்லாம் இல்ல . நல்லாத்தான் போச்சு. எதோ criticize  பண்ணணுமேன்னு அள்ளி  போட வேண்டியது . தயவு செய்து இந்த சினிமா விமர்சனம் பண்ற கோஷ்டியை மாத்துங்க விகடனாரே . 

நீ என் உயிரை காப்பாத்திட்டே ....உன்ன வெளிய கொண்டு வர்றேன்...என்கிட்டே சேரலாமா வேணாமான்னு அப்புறமா உன் முடிவை சொல்லு. - இப்புடி டயலாக் இருக்க வேண்டிய சீன்.

நீ என் உயிரை காப்பாத்திட்டே....நீ என்கிட்ட வேலைக்கு சேர்றதுன்னா சொல்லு உன்ன வெளிய கொண்டு வர்றேன்.....- ஈ டைலொகு தப்பு வாத்தியாரே.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்