'வன்மயா கண்டிக்கிறோம் ' boss

மய்யமும் நாம் தமிழரும் தான் இன்றைய அவநம்பிக்கை கடலில் 
தத்தளிக்கும் இளைஞர்களின் life boat . 
ராமதாஸும்  ஸ்டாலினும் ஒன்னு . சும்மா 'வன்மயா கண்டிக்கிறோம்னு ' அறிக்கையை விட்டுட்டு தூங்க போயிற வேண்டியது . மக்கள் பூராம் கொதிச்சு போய் ரோட்டுக்கு வந்து போராடுறான் . எத்தனை பொதுநலன் வழக்கு போடலாம்? . ஒன்னும் போடுறது கிடையாது . வாய கேளு . நெடுவாசல் ,நியூட்ரான் , பஸ் கட்டண உயர்வு , தமிழ் மீனவர் ,செம்மரம் ....சும்மா அறிக்கையை விட்டா போதுமா ?....பொது நலவழக்கு போடுங்க பாஸ் . டிராபிக் ராமசாமி என்னும் தனி மனிதன் (கிழவன்) போட்ட அளவுக்கு கூட இந்த ராமதாஸ் ,வைகோ ,ஸ்டாலின் எல்லாம் போடுறதே கிடையாது . மக்கள் இதை உணரணும் . நாம் தமிழரும் மையமும் கூட இதை கவனிக்கணும் . மத்திய மாநில அரசாங்கம் போடும் ஒவ்வொரு உத்தரவும் நம்மள டார்கெட் பண்ணி தான் இருக்கு. கீழடி சதி, காவேரி தீர்ப்பு எல்லாத்துக்கும் சும்மா கண்டன அறிக்கையை விட்டுட்டு தூங்க போயிட்டா.. உங்களுக்கும் அப்பாவி பொது ஜனத்துக்கும் என்ன வித்யாசம் ? போராட்டம் பண்ணுங்க , பொது நல வழக்கு போடுங்க இதெல்லாம் இன்னிக்கு ஸ்டாலின் பண்ணாம சும்மா 'கண்டிக்கிறோம்' அறிக்கையை விட்டதனால் தான் மக்களின் மனசாட்சிகளா இன்னிக்கு சீமானும் கமலும் மேல வரவேண்டியது காலத்தின் கட்டாயம் ஆச்சு.

மய்யம்  பொதுநலன் வழக்கு தொடுப்பதற்கென்றே  ஒரு வழக்கறிஞர் குழு அமைத்து போராட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்