I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

'ஆலா'  பறக்குறீங்கலே ...100 செகண்ட்ஸ் எப்புடி பத்தும் ..இளமருதரே ..?

1. இந்த தொடருக்கான மூலம் ...எந்த எந்த புத்தகங்கள் ..?

2.   இதை படமா எடுத்தா ....நெனச்சாலே சிலிர்க்குது பாஸ்.
 VVV productions must try to take this in partnership with another 4 or 5 companies.

Endhiran , maruthanayam  ellaam idhoda budgetku munnaadi summa.....1000 கோடி பட்ஜெட் ல எடுத்தாலும் பத்தாது.

3.ஒவ்வொரு புதன் கிழமை நைட் 12, 1, 2, 3,4 மணி வரை எல்லாம் செக் பண்ணி கடுப்பாயிருக்கேன். ஏன்னா 12 மணிக்கு மேல அது வியாழ கிழமை ஆச்சே ....
ஆனா நீங்க நிதானமா 6 மணிக்கு மேல தான் upload  பண்றீங்க...எங்க அவசர த்தை  புருஞ்சுக்கோங்க பாஸ். இது டிஜிட்டல் வேர்ல்ட் . எதுக்காகவும் வெயிட் பண்ண தேவ இல்லாத உலகம்.

ரொம்ப நாலா எனக்கு இந்த மாதிரி ஒரு தொடர் யாராவது...எந்த language கிடைக்காதான்னு தேடி கிட்டு இருந்தேன் ....
எனக்கு காடு பிடிக்கும்...
போர்கள் பத்தி படிக்க பிடிக்கும்...
மரம் செடி கொடி  பிடிக்கும்....இந்த தொடர்...எல்லாத்தையும் மிக்ஸி ல போட்டு அரச்சு  குடுத்துருச்சு

வைரமுத்துவோட கருவாச்சி காவியதுக்கு அப்புறமா விடாம படிக்க தூண்டுடர் ற எனக்கு புடிச்ச ஒரு தொடர்.


கழுதைக்கு பேரு இருக்கும் ...காத்துக்கு  பேரு ...காற்றி , காற்று ...பொம்பள காத்து, ஆம்பள காத்து 
சரியான கோள்சொல்லி ன்னு சொல்ல கேட்ருக்கோம் . இப்போ தான் அதோட அர்த்தம் தெரியுது.

கதை மாந்தர்களின் பெயர்களே மனதை பெயர்த்து எடுக்கும் பெரும் கோடரிகள் .


காட்டெருமையை கண்ட்ரோல்  பண்ணும் காலம்பன் ...
உதிரத்தை ஊற்றெடுக்க வைக்கும் உதிரன் ...
போர்க்களத்தில் ரசவாதம் புரியும் இரவாதன் ...

காடறிந்த தேக்கன் , எருமையை அரட்டும்  அநங்கன்,
கர  கர  கருங்கைவாணன் , முரட்டு  முடியன் ,
நீண்டதொரு வாழ்க்கையை  வாரி கையில்
போட்டு நடக்கும்  வாரிக்கையன் .

walkie talkie கூவல் குடியினர்
கதை அழகு...அதனினும் அழகு
அதன் கதாபாத்திரங்களின் பெயர்கள் ....

பொற்சுவை...பேரை கேட்ட உடனே புர் னு ஆவுதில்ல ...

திசை வேலர் , மையூர் கிழார் ,வேட்டூர் பழையன் , கூழையன்,இகுளி  கிழவன் ,
உருமன் கொடி நகரிவீரனும் சூலக்கையனும் துடும்பனோ திரையர்கள் 
நீலன் - தட்டியக்காட்டு போருக்கு வேர் 
சூழ்கடல் முதுவன்,  திதியன் , குலநாகினி, அலவன்  , திரையர்கள் , கொற்றவை தூதுவை 

இடங்கள் பேர பாருங்க ...
தட்டியங்காடு , இறலிமேடு , நாக கரடு , குலவந்திட்டு ,காரமலை ,பச்சைமலை,சூலூர்  ,மூஞ்சல் ,எவ்வியூர் ,வைப்பூர்

ஸ்காட்ச் விஸ்கி தான்  யவன தேறல் ...கரெக்ட்டா?
 கொற்றவை கூத்து - பாடம்  படிக்கும்போது போர் .ஒன்னும் புரியாது ..
9ம் வகுப்புல முழு பாடலும் எனக்கு மனப்பாடம் . ஆனா என்ன எதுன்னு தெரியாது . 
தேவ வாக்கு விலங்கு - தேவாங்கு பெயர் காரணம் 
செம்மூக்கன்  எலி - Mining Rat .
பால்கொறண்டி கொடி ...
வெடத்தப்பூவு ...
நத்தைச்சூரி செடி ...கருங்காலி ...சந்தன வேங்கை ...
கிணைப்பறை ...இடுக்கை... உடுக்கை... அந்தரி... ஆகுளி.. உறுமியும் முழவுமாக 
வெற்றிலை ...ஆம்பள  பொம்பள - வெத்தல யில Male , Female
நாக்கறுத்தான் புல், சோமக்கிழவி...சோம பூண்டு....சோம  பானம் ....சோம்பிக்கிடக்கிறான்....சோம்பல்முறிக்க  ....ஆவ்சோம் -AWSOME

பாரி கபிலரோட நட்பு ...அடடா 
முருகன் வள்ளி காதல்  ...எவ்வி ..எவ்வியூர் ....அடடா 
பாணர்களோட மெசேஜ் broadcasting ...


சில தொடர்கள் நீளத்தை பார்த்தவுடன் கொட்டாவி வந்துவிடும்.
ஆனால் இந்த தொடரலிலோ முதலில் நீளத்தை அளந்து
'ஆஹா  பக்கங்கள் கொஞ்சம் அதிகம் தான் என்று குஷி யாகி படிக்க ஆரம்பித்தால் ....
முடியும் போது  அய்யயோ போச்சு...போச்சு...முடிய போகுது ...என்று
வ ரு த்தத்துடன்  முடித்து விட்டு .....இந்த வாரம் இவோலோ தானா ....பெரும்பசிக்கு அவல்  சாப்பிட்ட மாறி ஆயிடுச்சே னு ஆயிடுது ...

நா இருக்கது  பெங்களூர் ல -. ஒரு வாரம் வரும் ...அடுத்து 3 அல்லது  4 வாரம் கழுச்சுதான் விகடன் வரும். நானும் கம்பளைண்ட்  எல்லாம் பண்ணி பாத்துட்டேன் . நோ  யூஸ் .

எனக்கு அவோலோ பொறுமை இல்ல. online ல படிச்சுருவேன் .  புடிச்ச movi ..புடிச்ச song ...புடிச்ச ஸ்பீச் ....எதுனாலும் விறல் நுனியில கிடைக்கும் டிஜிட்டல் யுகம் இது .

இந்த தொடர்...என் தூக்கத்தை தொலைச்சிருச்சி....நானே பேணா வச்சி ...பெட் ல அனிமேல்ஸ் டோய்ஸ் வச்சு ...இதான் மூவேந்தர் படை ...இது தான் மலை மேல் இருக்கும் பாரியோட படைன்னு எம்பொண்ணுக்கு ஸ்டோரி சொல்ல ஆரம்பிச்சுட்டேன்.

போர் பற்றிய நுணுக்கங்கள் தான் ...பலே ...பேஷ் ...!!!

இந்த தொடர புதுசா படிக்குறவுங்க ....போர் அடிக்கிற சாப்டர்கள விட்டுட்டு அடுத்த சாப்டர் போயிடுங்க....ஏன்னா மறுபடியும் நீங்களே திரும்பி வந்து விட்ட இடத்தை திருப்பி படிப்பீங்க ..!!









கருத்துகள்

  1. என்னபா என் மனசுல இருக்கிறத அப்படியே சொல்லிப்புட்ட. நான் 90 அத்தியாயத்துக்கு அப்புறம் தான் படிக்க ஆரம்பிச்சேன். முன்னாடி வந்தத தேடி கண்டுபிடிக்கவே ரொம்ப நாள் ஆச்சு (2-3). நீ சொல்ற மாதிரி நானும் online ல தான் படிச்சேன் முழுசா. இரவு தூக்கம் 1 இல்ல 2 மணிக்கு தான். புத்தகமா வந்து ஒடனே வாங்கிட்டேன் எனக்கு இல்ல எங்க அம்மாக்கு(என் தங்கை, மாமாவும் படிச்சுட்டாங்க). கிட்டத்தட்ட 4 தடவ படிச்சுட்டேன். புத்தகம் முழுசா எடுத்துட்டு வந்துருச்சு (book binding சரியில்லை) . நா தனியா ஒரு தடவ பைன்டிங் போட்டேன். நா இளங்கலை தமிழ் படிக்கிறேன். இப்ப இந்த நாவலை வச்சு ஒரு ஆய்வு (final year project) பண்றேன். சில தலைப்ப படிக்கலாம் னு எடுத்தா புக் அ கீழே வைக்க முடில இதனால ஆய்வ முடிக்க நாளாவது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Natural Products for இயற்கை வாழ்வு

துப்பறிவாளன் - ஒரு துப்பு துலங்குதல் - Drill down analysis of Thupparivaalan