Vada chennai Review- வட சென்னை -வாடா வெண்ணை

அய்ய  வந்துச்சி ரெவியூ சொல்ல ...பாண்டா கரடி .தீவாளி பலகாரம் , பேக்கரி விளம்பரம்...வித்துக்கினே  போ. வேணுனா வெள்ளரி வெள்ளரி னு கூவி வித்துக்கொ....பட் இன்னாத்துக்கு வட சென்னை ...வட  சென்னை னு கூவிக்கினு ?

Behind woods/ OPEN PANNAA  - கொயந்த அதுக்கு மேல ....சினிமா சான்ஸ் கோசரம்  ரெவியூ  பண்ணிக்கினுருக்கு ...விட்டா வெற்றி மாறன் அமெரிக்கா ஜனாதிபதி , தனுஷ் வடகொரியா கிம் ஜாங் உன் -ன்னு கூவும் போல ...

ப்ளூ சட்டை தான் கொஞ்சம் உண்மை பேசுவப்புடி...பட் அவரு 'Midnight Masala' review மாறி மிட் நைட் ல வர்றதுனால நானே பேச வேண்டியதா போச்சு .

வட சென்னை ....வாடா வெண்ணை என்று நம்மை அழைத்து ... கட கட வென்று கதை சொல்லி ....ஓடி போ என்கிறது.  நோ டீசென்ட்  விருந்து .

அள்ளி  போட்டு சாப்பிட்டு போய்கினே இருன்றான் .

கொஞ்சம் ராவா தாய்யா எடுத்துருக்கான் மனுஷன்.


படத்துல பெருசா ஒன்னியும் இல்ல . நார்மல்  வெற்றிமாறன் தனுஷ் movie . வழக்கமா மாசா இருக்கும்...பட் இது மச  மச  ன்னு இருட்டா இருக்கு.

படம் பூரா இருட்டு...இருட்டு...ஒரே இருட்டு...பேசுறதும் புரில அங்கங்க .....படம் பூராம் பெண்டதகல் வாசனை ....ராமி ...அபிராமி
Naturalityன்ற பேர்ல நம்ம மணி சார், கமல் சார் (ஹே  ராம்)எல்லாம் எப்புடி நம்ம பொறுமைய சோதிச்சாங்களோ ...வெற்றியும் அப்புடிதான்.


தனுஷ் ஒரு கதை மாந்தர் . ஹீரோ அல்ல.
இப்புடியே தனுஷ் நடிச்சுக்கினுருந்தா ....இன்னாயா தனுசு ...நாஸ்தா தின்னுட்டு தான் படத்துல நடிக்கிறியா ...இல்ல டீ காபி மட்டும் தானா னு கேக்க தோணும் .
எப்போ பாரு ...சேரி பையன்  ரோல் தான் ...கொஞ்சம் மாத்துங்க பாஸ்....உங்க முன்னாள் theatre -ல தான் படம் பார்த்தேன் ( தேனி - கிருஷ்ணா )

மியூசிக் சில இடத்துல சொதப்பல். ரேடியோ பாடிகிட்ருக்கு ...நமக்கு டயலாக் கேக்கல .பல இடத்துல தூக்கல் . Songs அருமை .

ஆண்ட்ரியா ....நீ ஆண்களின் evergreen Tree யா ? அமீருக்கு பயங்கர மச்சம் .

ஐஸ்வர்யா ராஜேஷ் ...மாஸ் ....தனுஷ் ஒரே ரொமான்ஸ் தான்.

நாலு பேரு .....நாப்பது சண்டை ...அவோளோ  தான் ...லைட் போட்டு தொலைங்கடா ன்னு கத்தனும்  போல இருக்கு சில சீன்ல ...வெளிச்சத்துலே தனுஷ் பாதி தான் தெரிவாரு...இதுல இருட்டுல fighting வேற .

கூடவே இருந்து அமீரை கொல்றதுல வலுவான ஒரு  பகை ...வலுவான ஒரு  காரணம்... ஒன்னும் இல்ல . So  மனசுல ஒட்டல .

படம் புரியாத டூபாக்கூருங்கோ தான் ஆஹா ஓஹோ ணுதுங்க .

1 time watchable. That's it. I am really  disappointed.

படம் எப்புடி நான்-லீனியரா  ஜம்ப் ஆயி ஜம்ப் ஆயி போவுதோ....அதே மாறித்தான் இந்த ரெவியூ  வும்....!

டேய்  அமெரிக்கா மாப்பிள அபிஷேக் தம்பி...உனக்கு ஒத்த  ரோசாவாதான்  கட்டி வெக்கணும் .

வட சென்னை - இருட்டு அறையில் முரட்டு வடை.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்