சுத்தமாய் சுட்ட காலை



அந்த ஓர் நாள் காலை ....அது காலை அல்ல 
என் வாழ்நாள்  வசந்தங்களின் சுடுகாட்டு சாலை ...

என்னை ஈர்த்தவளை முதல்நாள்  தாரை வார்த்து விட்டு ...
தாரை  தாரை யாய் கண்ணீர் காய்ந்த காலை ...

ஒவ்வொரு காலையும் 'வானம் எனக்கொரு போதி மரம் ..'என்று 
மனம் குதூகலிக்க ...குருவிகளின் குய்  குய்  ஓசையோடு விழித்த ...எனக்கு 

நரகத்தில் வந்து விழுந்து  விட்டோமோ என்று யோசிக்க வைத்த காலை.
மிதமான வெயில்...இதுவரை பூங்காற்றாய் காற்றில் காதலை மிதக்கவிட்ட மித வெயில்...அன்று அம்மணமாய் பாலைவனத்தில் படுத்திருப்பது போல உணர செய்த காலை ..

எனது மன இறப்பு ... தெரியாமல் அம்மாவும் அப்பாவும் மாறி மாறி ஏதோ  என்னிடம் கேட்க ...அவர்கள் பேசுவது காதில் விழுகிறது . ஆனால் மொழி உள்செல்ல வில்லை . ஒலி ஏற்கிறது காது ...மொழி ஏற்கவில்லை மனது . வெறித்து வெறித்து பார்க்கிறேன். அவ்வளவுதான். 

சிறிது காலத்தில் 7ஜி  ரிலீஸ் ஆன பின்னே தான் எனக்கு புரிந்தது..
எனக்கு மட்டுமல்ல ...மனம் 'தவறி 'போன ஆண்கள் எல்லோரும் இப்படி 
பிறழ் நிலை அடைகிறார்கள் என்று.

ஆணை பெற்றவர்கள் தன் மகன்களுக்கு முக்கியமான ஒன்றை சொல்லி கொடுங்கள் . 
பெண் என்பவள் ஒரு சாதாரண பிறவி , தேவதை அல்ல என்று புரியவையுங்கள் .
அவளுக்கு ஈர்ப்பு மாறிக்கொண்டே இருக்கும் என்ற நடப்பு உண்மையை 
தெளிவு படுத்துங்கள் .
அவள் மேல் கொண்ட ஈர்ப்பே அவளை வெகுளியாய் உன்னை எண்ண செய்யும் என்ற மன வியாதியை பற்றி விழிப்புணர்வு கொள்ள செய்யுங்கள் .

பெண்ணை பெற்றவர்கள் தன் மகள்களுக்கு அதி முக்கியமான இன்னொன்றை சொல்லி கொடுங்கள்.
ஆண் உன்னால் பலவீனப்படும் பந்து தான் என்றாலும் எட்டி உதைக்க கூடாது என்று சொல்லி கொடுங்கள் .
ஈர்ப்பு மாறினாலும் சுய ஆராய்ச்சீ  செய்ய கற்று கொடுங்கள்.
மட சட்டங்கள் அனைத்தும் தனக்கு சாதகம் என்ற எகதாளத்தை எட்டி உதைக்க சொல்லி கொடுங்கள் .
ஆண் ..யானை என்றும் ...உன் அன்பு எனும் அங்குசத்துக்கு அடிமை பட்டு கிடைக்கும் ஒரு மத மிருகம் என்பதை விளக்கி சொல்லுங்கள் .

பெற்றோர்களுக்கு ...
வன்புணர்வு எவ்வளவு கொடுமையானதோ  அதே அளவு கொடுமையானது கட்டாய திருமணம் ...
இதில் கொடூரமாக பாதிக்க படுபவன் ஆண் .

கட்டாய  கல்யாணம் முடிந்தவுடன் பொட்டியை  கட்டி விட வேண்டியது ....
அதன் பின்னர் விஸ்வரூபம் எடுக்கும் எந்த பிரச்சினைக்கும் உங்களிடம் இருக்கும் ஒரே தீர்வு...'ஐயோ  இப்புடி ஆயிப்போச்சே ...நான் என்ன செய்வேன்..' ஒரு மூக்கு சிந்தல் . அவ்வளவு தான் . 

அதன் பின் வாழ்க்கை முழுவதும் வாழாவெட்டி தான் அவன்.







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்