Vel paari



கருங்கைய கறுக்கிட்டாப்புடி ..! சோலி முடிஞ்சு போயி ..!

இப்போதான் காலம்பன களத்துல இறக்கிருக்காப்புல ...

இன்னும் காக்காவிரிச்சி  use  பண்ணல .

 அரிமான்கள் use  பண்ணல . அரிமான்களோட  சிறப்பு என்னன்னு  சொல்லல .

காட்டெருமை கூட்டத்துல ஒரு set தான் use  பண்ணி இருக்காப்புடி .
இன்னொரு செட் அப்புடியே நிக்குது .

யானை படையில் வெறும் 4 யானையைத்தான்  கூட்டி வரச்சொல்லி இருக்காப்புல முடியன் . அத இன்னும் use  பண்ணல .

முடியன் ...முடியன்னு  பில்ட் அப் குடுக்குறாப்புடி ...அவரோட வீர தீர பராக்கிரமத்தை பத்தி ஒரு சேப்டர்  அள்ளி போடலாம் . சின்ன பயல் இராவதனுக்கே அவ்ளோ பீலிங் ஆயிடுச்சி . எனக்கெல்லாம் ரெண்டு நாளா   கஞ்சி  செல்லல .

பாய்சன்  அம்பு எல்லாம் இன்னும் பீல்டுக்குகே வரல . வருமா ?

யாளி எல்லாம் இறங்குமா ..? இறக்கி பாக்கலாமே தப்பில்லையே ..

மையூர் கிழார் மரணம் வடசென்னை தம்பி மார்டெராட்டமா கொடூரமாத்தான் இருக்கும்.

அப்புறம் உதிரன் பத்தி இன்னும் வார்த்தைய உதிர்க்கவே இல்ல . இரவாதனுக்கே அவ்வோளோ பில்ட் அப் னா ....உதிரன் ..மருமவன் உட்ருவாரா ...சும்மா பிரிச்சு மேய மாட்டாரு ?

நீலனோட ஊட்டம்மா மயிலா  பத்தி எழுத மறந்து போயிட்டாரு . இத்தனை  வாரத்துல ஒரு வார்த்த  அந்தம்மாவ பத்தி ...அவுங்க எவ்ளோ tension -ல இருப்பாங்க ...அத பத்தி இந்த மனுஷன் கொஞ்சமாச்சும் கவல பட்டாரா ?

அப்புறம் மை செல்லம் பொற்சுவைய  போட்டு தள்ளிட்டு , அவுங்க நண்பி-ய அங்க வச்சிக்கிட்டாங்களே ...அவுங்க ஸ்டேட்டஸ் என்ன ஆச்சுன்னு  இன்னும் அப்டேட் பண்ணவே இல்ல ?

தேக்கனால முடியலைன்னா அவரு என்ன பண்ணுவாப்டி...படுத்துகிடலாமே ....குடி ஆசான் முடியாம படுத்துக்கிட்டாலும் ..பாரி காலம் இறங்கித்தானே ஆவணும் ...

அப்புறம்...பாரி இறங்குன உடனே ரணகளமாகும்னு நெனச்சா ...நைட் எல்லாம் பின்னாடியே பாலோ பண்ணி மிஸ் பண்ணிட்டாப்புல ...அங்க ஒரு ஆறு இருக்குன்னு பாரிக்கே தெரியாதுன்னு ....அவரை டம்மி பண்ணிடீங்களே ஆசானே ....

ஹைதர் அலி சீரியல்ல திப்பு சுல்தான்  இன்ட்ரோ அப்புடி பட்டைய கிளப்பும்...பாட்சா-வோட இன்டெர்வல் ப்ளாக்-காட்டம் ..!

பாரி-ன்னா  மாஸ் ...!   தம்பீ ..இன்னும் அந்த மாஸ் வரல...!  I AM WAITINGGG..!!







கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Natural Products for இயற்கை வாழ்வு

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

துப்பறிவாளன் - ஒரு துப்பு துலங்குதல் - Drill down analysis of Thupparivaalan