இடுகைகள்

மே, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நானும் காற்றாடும் வீடும் ...!

வீடு  என்பது we too என்று தான் இருந்தது ..! இப்போ we do fight only என்றாகி போனது..! உனக்கும் வாய் ...உனக்கே என்றால் எனக்கு ? என்பதுவாய் ...எனக்கும் வாய் ... நீ பிடித்த முயலுக்கு மூணு கால் ... நான் பிடித்த மயிலுக்கும்  மூணு கால்... வாய்-கால் தகராறு !! மனைவி - ம-நைய்நைய்-வி  ....என்பது தான் சுருங்கியதா ? வினை-ம ? - எல்லாம் என் வினைமா .... திரும்பியதா ? மனைவி - மனை- விய் ?  ...மனையை வித்ரு - குறுகியதா ? மனை-வி-ட்டோடு - பிறழ்ந்ததா ? 'மண்ணை கவ்வி' - மருவியதா ? 'மனோவியாதி'  தான் - ஒரு வேலை காலப்போக்கில் .....? என்ன இழவோ ? வீடு மனைவி மக்கள் .....எவ்ளோ திட்டினாலும் இது மூன்றே நமது சரணாலயம்  ... இதுவே நமது சிக்கல் ..! சட்டென்று மாறுது வானிலை -  கெளதம் மேனன் ...மக்கள் மனநிலை-யும்  கூடத்தான் மேனன் ! இளமையின் interface முதுமையின் initial phase இந்த 40..! வீம்பு எல்லாம் தலைக்கு போட்ட ஷாம்பூ போல ... ஒரு சொம்பு  பாச தண்ணி....கரைந்து  விடுகிறது .. ! இந்த வயது மனமாற்றத்தை .....நமது கல...

பெங்களூரு எங்களூரு ஈழம் உங்களூரு

ஈழம் - இழவு  என்று தான் ஒலித்ததெனக்கு அன்று ...இப்பொழுதோ உலகிற்கே ஈழம் பற்றி ஈரம் பட  வாதிடும்போது  ...ஈனம் ஒன்று ஈன குரலில் ஈர்த்தது கேள்வியால் .... ' அடுத்த நாட்டுல எவன் செத்தா நமக்கென்ன  அவன் தமிழ்  பேசினா நம்மாளா ?' இரக்கப்படக்கூட சோம்பல் படும் இந்த இழிவை ,இரக்கமற்ற கழிவை  என்னென்பது ? 'தம்பி' யின் பூத உடல் பார்த்தவர்தம் பிறப்புறுப்பு சுருங்கியது ...சுணங்கியது . நித்தம் ஒரு தாய் கருவறுக்க படும் செய்தி கேட்டு நித்திரை கூட நிதானித்தே வந்தது . ஆனால் தாய்மொழி வேறொன்று என்ற ஒரே காரணத்தால் இரக்கம் முக்காடு போட்டு புறவாசல் வழியே புறப்பட்டது . மனிதாபிமானத்திற்கு மொழிக்கும் எந்த சம்மதமும் இல்லை என்பதை கல்லாமல் ...கல்லாய் நின்றது எல்லாம் அறிந்த ஆளுங்கட்சியோ நடுவண் மாமாவுக்கு நிதானமாய் கடிதம் அனுப்பியது . எல்லா கட்சியும் ஒரு சேர கத்தி கூப்பாடு போட்டபின் நடவடிக்கை எடுத்து மிக தீவிரமாய் .... 'இன்னொரு கடுதாசி போட்டது' .!!! புழுங்கிய தமிழ்மனம்  புளுங்கள் அரிசியின் விலையேற்றத்தால் புழுவாய் நெளிந்தது  . ஏறிய புளியால் பாரிய புலிகளை மற...