பெங்களூரு எங்களூரு ஈழம் உங்களூரு



ஈழம் - இழவு  என்று தான் ஒலித்ததெனக்கு அன்று ...இப்பொழுதோ உலகிற்கே
ஈழம் பற்றி ஈரம் பட  வாதிடும்போது  ...ஈனம் ஒன்று ஈன குரலில் ஈர்த்தது கேள்வியால் ....
' அடுத்த நாட்டுல எவன் செத்தா நமக்கென்ன  அவன் தமிழ்  பேசினா நம்மாளா ?'
இரக்கப்படக்கூட சோம்பல் படும் இந்த இழிவை ,இரக்கமற்ற கழிவை  என்னென்பது ?




'தம்பி' யின் பூத உடல் பார்த்தவர்தம் பிறப்புறுப்பு சுருங்கியது ...சுணங்கியது .
நித்தம் ஒரு தாய் கருவறுக்க படும் செய்தி கேட்டு நித்திரை கூட நிதானித்தே வந்தது .
ஆனால் தாய்மொழி வேறொன்று என்ற ஒரே காரணத்தால்
இரக்கம் முக்காடு போட்டு புறவாசல் வழியே புறப்பட்டது .
மனிதாபிமானத்திற்கு மொழிக்கும் எந்த சம்மதமும் இல்லை என்பதை
கல்லாமல் ...கல்லாய் நின்றது

எல்லாம் அறிந்த ஆளுங்கட்சியோ நடுவண் மாமாவுக்கு நிதானமாய் கடிதம் அனுப்பியது .
எல்லா கட்சியும் ஒரு சேர கத்தி கூப்பாடு போட்டபின் நடவடிக்கை எடுத்து மிக தீவிரமாய் ....
'இன்னொரு கடுதாசி போட்டது' .!!!

புழுங்கிய தமிழ்மனம்  புளுங்கள் அரிசியின் விலையேற்றத்தால் புழுவாய் நெளிந்தது  .
ஏறிய புளியால் பாரிய புலிகளை மறந்தான் .

மனிதனின் வரம் சாபக்கேடு - மறதி ..!



பெங்களூரு தமிழா ...
உங்களூரு உனக்கிப்போது நீர்குமிழா ?


மென்பொருள் வேலை கிடைப்பதற்கு முன் எப்படி இருந்தாய் நீ ?

எலும்பும் தோலுமாய் ...






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்