நானும் காற்றாடும் வீடும் ...!

வீடு  என்பது we too என்று தான் இருந்தது ..!
இப்போ we do fight only என்றாகி போனது..!

உனக்கும் வாய் ...உனக்கே என்றால் எனக்கு ? என்பதுவாய் ...எனக்கும் வாய் ...

நீ பிடித்த முயலுக்கு மூணு கால் ...
நான் பிடித்த மயிலுக்கும்  மூணு கால்...
வாய்-கால் தகராறு !!



மனைவி - ம-நைய்நைய்-வி  ....என்பது தான் சுருங்கியதா ?

வினை-ம ? - எல்லாம் என் வினைமா .... திரும்பியதா ?

மனைவி - மனை- விய் ?  ...மனையை வித்ரு - குறுகியதா ?

மனை-வி-ட்டோடு - பிறழ்ந்ததா ?

'மண்ணை கவ்வி' - மருவியதா ?

'மனோவியாதி'  தான் - ஒரு வேலை காலப்போக்கில் .....?

என்ன இழவோ ?

வீடு மனைவி மக்கள் .....எவ்ளோ திட்டினாலும் இது மூன்றே நமது சரணாலயம்  ...
இதுவே நமது சிக்கல் ..!

சட்டென்று மாறுது வானிலை -  கெளதம் மேனன்
...மக்கள் மனநிலை-யும்  கூடத்தான் மேனன் !

இளமையின் interface முதுமையின் initial phase இந்த 40..!

வீம்பு எல்லாம் தலைக்கு போட்ட ஷாம்பூ போல ... ஒரு சொம்பு  பாச தண்ணி....கரைந்து  விடுகிறது .. !

இந்த வயது மனமாற்றத்தை .....நமது கல்வி சொல்லித்தருவதில்லை ..!
முட்டாப்பய பள்ளிக்கூடத்துல முட்ட திருடி ...வாத்தியாராம் !

'பிக்காளி பயலுக...என்ன நடக்குது இந்த நாட்டுல ..பெருமாளே ' ...
நியூஸ் பாத்தாலே ரத்தம் கொதிச்சு போயி கத்துறேன்...
வீட்டுக்காரம்மா (wife ) வந்து 'டொப்புனு ' ஆப் பண்ணிட்டு
'வந்துட்டாரு அந்நியன் அம்பி ' னுட்டு போயிடுது ...

நல்ல நாட்டுல பொறக்கல ...
அதான் நெஞ்சு பொறுக்கல ...sorry !!

சைட் அடிப்பது குறைந்து விட்டது...ஆனாலும் மனைவி அப்பப்போ 'பாத்து வாயி குள்ளாரே  குளவி கூடு கட்டீர போவுது ...என்ற பின்னே வாயை மூடி சுய நினைவு திரும்புவதை என்ன வென்று சொல்வது ?

குட்டீஸ்  எல்லாம் அறிவுரை சொல்லும்போது ...
'ஹைய்யோ ..ஏன் டாடி இப்புடி பண்றீங்க ...?'
Parent-ஆக  பெருமையாகவும்  சீனியராக சிறுமையாகவும் ஆகி போகிறது ...

ஆஃபீசிலும் ஒருத்தனும் மதிப்பதில்லை ...எங்கள் செட் சீனியர் செட் ..
திருவிழாவில் வில்லு பாட்டு பாடும் செட் போல ...வேலை முடிந்ததும் கழட்டி விட்ருறானுக !

மம்மி டாடி ...இப்போ நமக்கு எக்ஸ்ட்ரா குட்டீஸ்....கம்பளைண்ட் இல்லேன்னா கேள்வி மேல கேள்வி !

இருப்பதை வைத்து சந்தோஷ படும் வயது இது தானா ??

...to be continued














கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Natural Products for இயற்கை வாழ்வு

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

துப்பறிவாளன் - ஒரு துப்பு துலங்குதல் - Drill down analysis of Thupparivaalan