சிப்பி -தலைப்பு

Written between 11 pm to 12 am - in 1 hr ..for Mysskin sir's Poem Contest - He gave us one oyster/ shell...and asked us to write something about it. 

Location: Chennai - Enjambakkam Resort 


ச்சீ....நீயெல்லாம் 

கன்னி ..உன் கன்னம் சிப்பி போல் 'சொர சொர ' ன்னு இருக்கு என்றேன்
கண்ணில் நீர் தளும்ப ' ச்சீ....நீயெல்லாம் ..!!'  -  கோபத்தில் சிலிர்த்து சென்றுவிட்டாள் .

ஒரு தம் போட்ட பின்னே ...

கண்ணே ..உன்  கன்ன பரு  முத்து போல் முகிழ்ந்திருக்கு  - என்றேன்
கண்ணில் நீர் தளும்ப 'ச்சீ ...நீ எல்லாம்....'  தாபத்தில்  சிலிர்த்து சாய்ந்து  கொண்டாள் .


நாளைய இயக்குனனே ...!

பிரன்காவா ? வாழையா ? விளங்கா ? மிஷ்கினா ? சுறாவா ? நீல திமிங்கிலமா ?
எல்லாம் ஒரு அதிர்வே ..! அதிர்வு மட்டுமே ..
நீ மட்டும் சிப்பியின் வைராக்கியத்துடன்  இருந்தால்.

நீ மட்டும் சிப்பியின் வைராக்கியத்துடன்  இருந்தால்....
முத்துக்கள்  ரிலீஸ் ஆவது  நிச்சயம் ...நானே சாட்சி !!
நானும் சாட்சி !!

சிப்பி - பெயர் காரணம் 
கடலுக்குள் கப்சிப்  என்று இருப்பதால் நீ  சிப்பியா ?

இல்லை 'சிப்பி ' எனும் வறண்ட  தலைப்பில் கவிதை  யோசித்தாலே
தலையை சிலுப்பி கொள்கிறோமே ...அதனால் நீ  மருவி சி(லு)ப்பியா ?

முத்தை  ஆண் சிப்பாய் போல் காக்கும்  பெண் சிப்பியோ நீ ...?

சிப்பியின் பெருந்தன்மை 

விதியின் சதியா ? உன்னின் பெருந்தன்மையா ?

உன் வயிற்று  பிள்ளை ...
வான் விமானத்தில் வஞ்சியின் வலம்புரி  கழுத்தில் ...
முத்து மாலையாக ..

நீயோ ..
முடை நாற்றமடிக்கும் மீனவ குடியின் வாயிலில் ...
கூறு 5 ரூபாய் விற்பனைக்கு ...

விதியின் சதியா ? உன்னின் பெருந்தன்மையா ?


ஆழ்கடல் த்யானி
ஆழ்கடல் த்யானி நீ  ...
அழுக்கு நகர் ஞானி நான் ...
        ஆனாலும் ஒரு ஒற்றுமை ...
அடைகாப்பதில் ...!
  உனக்கு மணி முத்து ..!
எனக்கு சினி பித்து ..!


முத்தழகி 
உனக்குள் ரகசியமாய் ஒரு முத்தழகி ...சில நேரங்களில் முத்தழகிகள் ...
கடந்த ஒரு வாரமாய் ...எனக்குள்ளும் !!!


ஓடு.. ஒரு ஒப்பீடு 

தினம் சிப்பியை கடந்து செல்லும் ஒரு நண்டின் நப்பாசை !

உனக்கும் ஓடு  உடல்
எனக்கும் ஓடு உடல் ...
'அஞ்சாதே...யுத்தம் செய்' ..கத்தி கொண்டே தன் ஓட்டை திறந்து முத்தை எடுக்க முயல்கிறது ஒரு நண்டு !

முகம்மூடி பிசாசு போல் ஆழ்நிலை த்யானத்தில் நக்கல் புன்னகையுடன்
சிப்பி ...முத்து செறிந்த சிப்பி !

சிப்பி இருக்குது...முத்து  இருக்குது 

சிப்பி   இருக்குது ...முத்து  இருக்குது ...
திறந்து பார்க்க நேரமும் இருக்குது ....
......
ராசாத்தியை தான் காணோம்.?!!




(c) N Prasanna kumar

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்