டீ குடிங்க ...யோசிங்க


டீ குடிங்க ...யோசிங்க 





" ...எல்லாம் இந்த காசு வாங்கிட்டு ஓட்டு போடுற @##$பசங்க-னாலதான்  " -  எந்த சோசியல் மீடியாக்கடை , டீக்கடை பாத்தாலும் இந்த ஆற்றாமை வாக்கியத்தை கேக்கலாம். 
  500 ரூவா காசு வாங்கிட்டு ஓட்டு  போடுற அவனுக்கு அந்த 500 ரூவா  அவ்வளவு பெருசு.
உங்களுக்கு கம்மி. ஏன்னா நீங்க கரைல சுகமா சாஞ்சு உக்காந்துட்டு ஜாலியா டீ  குடிச்சிட்டே கத்துறீங்க ….பாவம் அவன் ஆத்துல தம் கட்டி வெறும் வயித்தோட  நீந்துற பய
அவனை பாத்து "டேய் ஏண்டா...கத்துற ..நான் உன்ன மாறியா  கத்துறேன்...பாரு எவ்ளோ அமைதியா இருக்கேன் "-ன்னு சொன்னா கேக்கவா போறான். அவனை மொதல்ல வெளிய இழுத்து போடுங்க பாஸ் ….ஒரு டீ  வாங்கி குடுங்க .....ஆசுவாச படுத்துங்க அப்புறம் நீங்க சொல்றத காது  குடுத்து கேப்பான் .
நீங்க ..நான் மாதிரி facebook பாக்க தெரிஞ்ச  ஆளுங்க இலவசம் வாங்குறது ரொம்ப கம்மி .
காசு வாங்கிட்டு ஓட்டு போடுற கோஷ்டி இன்னமும் அப்புடியேதான் இருக்கு .அது யாருன்னா டிவி ல நியூஸ் அப்புடின்னு ஒன்னு பாக்காம , நியூஸ்பேப்பர்  அப்புடின்னு ஒன்னு படிக்காம தான் உண்டு தன் வேல உண்டு எலக்சன் வந்தா தன் ஓட்டு  காசு உண்டு-ன்னு ….
அதுங்க திருத்துனா ...நாடு திருந்திரும் . அதுல  90%  கூலி ஆட்கள் . வயல் வேல, 100 நாட்கள் வேல, எலெக்ட்ரிசின், கொத்தனார், சித்தாள்னு -ன்னு . (கவனிக்க … நான் எல்லா எலெக்ட்ரிசினையும் சொல்லல.)அப்புறம்  மாசம் 10000 டு 15000 சம்பளம் வாங்குறவங்க . No time for them to think..!

 ஒரே வழி இவுங்கள பேப்பர் படிக்க வைக்கணும் . நியூஸ் பாக்க வைக்கணும் .  பேப்பர் படிச்சா சரியாப்போயிருமா ….பேப்பர் படிக்காதது  ஒரு குத்தமாய்யா ? -ரெண்டுக்குமே ஒரே பதில் தான் .
ஆமா ..!

அப்புறம் இன்னொரு கொடூர கோஷ்டி. ஆயிரம் தப்பு செஞ்சாலும் அவன் என் சாதிக்காரன் .
உலகிலேயே கொடூரமான பாவம் இந்த ரெண்டு தான் . டிவி பாக்காம ஓட்டு  போடுறவன்….சாதி பாத்து ஓட்டு போடுறவன்.  இவனுங்க இருக்குறவரைக்கும்  கேவலமான தலைவன்கள் நம்மை ஆட்சி செய்துட்டே தான் இருப்பானுங்க. எப்போ இந்த ரெண்டு பேரோட பிள்ளைங்க ஆழ் துளை கிணத்துக்குள்ள விழுதோ (கடவுள் என்னை மன்னிப்பாராக ) அப்போ தான் இந்த பிறவிகளுக்கு புத்தி வரும்.  அதுவரை நம்ம நாயா கத்தினாலும் நமக்கு விமோச்சனம் கிடைக்காது. 
இதுங்களுக்கு  ஜூ .வி  நக்கீரன், ரிப்போர்ட்டர் மாதிரி புலனாய்வு பத்திரிக்கை யாவது இலவசமா படிக்க
குடுத்தா (at least) , கொஞ்சமாவது ஊருக்குள்ள என்ன நடக்குது….எத்தனை பேரு இவிங்க குத்துற   ஓட்டுனால இவிங்க தேர்ந்தெடுக்குற தலைவனால நடை பிணமா வாழ வேண்டி இருக்கு-னு தெரியவாவது செய்யும் .

தினமும் காலையில் டீ/காபி/ஜூஸ்   குடிக்கும்போது இதை பத்தி யோசிங்க ….தினமும். அது போதும். அதும் மட்டும் போதும். பெரிய மாற்றம் வரும்.
அமெரிக்கா , ஜப்பான் மாறி இருக்க வேண்டிய இந்தியாவ ….கேவலம் தன்னோட  அறிவுக்கு தெரியா அறியாமையாலும்(?) கண்ணுக்கு தெரியா சாதியினாலும் அறிவு மிகுந்த ஒரு இனத்த  இன்னைக்கு உள்ளுக்குள்ள பொருமி தள்ளிக்கிட்டு ஒண்ணுமே செய்ய முடியாம பாமர தனமா சுயநலமா  வாழ வச்சிட்டு இருக்கு .
நெறைய பேருக்கு சமூக சேவை செய்ய ஆசை. ஆனா இவனுங்களுக்கு செஞ்சு என்ன ஆவ போகுதுன்னு பேசாம போயிர்றானுங்க.   இந்த தல தளபதி ரசிகர்கள் முக்கியமா இதை யோசிங்க . ( யோசிச்சீங்கன்னா அப்புறம் படம் பாக்க தோணாது :-) ) உங்க வீட்டுல புஸ்தகம் வாங்கி போடுங்க, பேப்பர் வாங்கி போடுங்க , பஸ், ட்ரெயின் ல இருந்து இறங்கும் போது , வாங்குன பேப்பர் புத்தகத்தை அப்புடியே விட்டுட்டு வாங்க. யாருக்காவது துளி உபயோகம் ஆகும் . சிறு துளி பெருவெள்ளம் . நான்லாம் அப்புடிதான் விட்டுட்டு வரேன். முக்கியமா டீ  கடையிலே ஒரு புக், பேப்பர்-எ விட்டுட்டு வாங்க  . அப்புடியே நீங்க எதாவது புக்ஸ் பாத்தீங்கன்னா அத படிக்காத ஏழை பாழைங்களுக்கு கொண்டு போய் சேருங்க.
ஒரு நல்ல தலைவன் இல்லாத சமூகம் எப்புடி அழுகி  அழியும்ங்குறத ஒரு சிறு புரிதல் இல்லாதது-னால அதுக்கு தான் எப்புடி காரணமா இருக்கோம்னு - அந்த கூட்டத்துக்கு புரிய வைங்க . அரசியல் படிங்க ...படிக்க வைங்க…!

ஜெனரல் நாலெட்ஜ்-னா நம்மாளுங்களுக்கு கொரியாவோட தலைநகரம்  தெரிஞ்சா பேஷ் ..!செக்கோஸ்லோவாகியா தலைநகரம் தெரிஞ்சா பேஷ் பேஷ்…!

  நம்ம உடல் பத்தி ...அடுத்து நம்ம தலைவன தேர்ந்தெடுப்பது பத்தி சொல்லி குடுங்க ...அது எவ்வளவு முக்கியம்னு புரிய வைங்க …
தினமும் காலையில் டீ/காபி/ஜூஸ்   குடிக்கும்போது இதை பத்தி யோசிங்க ….தினமும். அது போதும். அதும் மட்டும் போதும். பெரிய மாற்றம் வரும்.

Kitchukutti ;-) 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்