காற்றெங்கும் உன் வாசம் ....

-கிறுக்கிய ஆண்டு 2004 -
-தட்டச்சு செய்து 'மேல் ஏற்றிய ' ஆண்டு - 2019-

காற்றெங்கும் உன் வாசம் ....




காற்றெங்கும் சுகந்தம் ....
நேற்று உன்னுடன் பேசி விட்டு வந்தது முதல்....



அதுக்கு   இன்னும் 'அது ' வரவில்லை ...!




சிட்டு குருவியாய் பட படக்கிறது ஆணின் மனம்...
குட்டையில் ஊரும் எருமை மாடாய் அவளின் குணம் ...

ஒரு கிளையில் ஒரு மணித்துளி  உக்கார முடியவில்லை அதனால்....
அது ...'அது ' வயப்பட்டு விட்டதனால்  ..!

நான் பார்த்துக்கொண்டே இருக்க ...
ஒரு full மீல்ஸை நிதானமாக ஒரு கட்டு கட்டிவிட்டு ...
புறங்கையையும் ... நாவினால்....

'அது ' அதுக்கு  இன்னும் வரவில்லை ...! - பெருமூச்சு விட்டு கொண்டேன் 

"அப்படியென்ன சிரிப்பு பொம்பள புள்ளைக்கு நடுரோட்டில் ..கெக்கே பிக்கே -ன்னுட்டு ...வாய பொத்திட்டாவது சிரிக்குதா பாரு ...." - நண்பன் 

உனக்கேண்டா  காண்டு ...உன்னாளு இந்த மாறி சிரிச்சா பயத்துல ட்ராபிக் ஜாம் ஆயிடும் ...என் ஆளு சிரிக்குறது உனக்கு எரியுதா ...?

அடங் ...ஒன் சைடுக்கே இவ்வளவு ஸீனா ...அடங்குடா
அதையும் கொஞ்சம் அடங்க சொல்லுடா ... 

அது அடங்கிரும் சீக்கிரமே - அவனிடம் அதிரடியாய் சொன்னேன் !
அதுக்கு  'அது ' இன்னும் வரவில்லை ...! -  எனக்குள் வெட்கத்துடன் சொல்லி கொண்டேன்


ஹோட்டலாச்சே ...அடக்கமாக கொட்டாவி விடுவோம்...ம்ம்..ஹூம் ..
நீர் யானைக்கு.. நீர் ஒன்று விட்ட அக்காளோ   ? 
அதுக்கு   இன்னும் 'அது ' வரவில்லை ...!
இருந்தாலும் உன் கொட்டாவி அத்தனை அழகுதான் போ... கொட்டிவிட்டு தான் செல்கிறது என் ஆவியை ..

சரி ...'உடனத்தவளுக' எவ்ளோ டீக்கா டிரஸ் பண்ணி...போறது நாயர் காபி கடைக்கு  தான் என்றாலும் ...எதோ தெரு முக்கில் beauty pageant -க்கு செல்வது போல் போனாலும்....
நீ மட்டும் ...ரேப் சீன் முடிந்த ஹீரோயினாட்டம் ...

சரி ...அழகு திமிர் ....திமிரான அழகு  என்று சமாதானம் சொல்லி கொள்கிறேன்...
ஒரு வேளை மேக்கப் உன் இயல்பான மேக் -அப்-பை கெடுத்து விடக்கூட கூடுமோ ?

'மச்சி ...உன் ஆளு  கஃபே போறாளா ?
இல்ல 'விடிஞ்சதும் பணியாரம் வாங்க பல் விளக்காம போறாளா ' ?

இவனுங்க வேற ...ரசனை தெரியாதவனுங்க 
எனக்கு மட்டுமே தெரியும் ...

அதுக்கு   இன்னும் வரவில்லை  'அது ' ...!






துப்பறியும் காதல் ...



என்னிடம் எத்தனை சட்டைகள் பேண்ட்டுகள் ....
தெரியாது ....சுட்டு போட்டாலும் ஞாபகத்தில் ஒன்றாது .

ஆனால் உன் சிவப்பு ஆலிவ் பூ சுடிதாரும் பச்சை முல்லை டிஸைன் துப்பட்டாவும்

இள மஞ்சள் பூப்போட்ட டாப்ஸ் -ம் சாக்லேட் கலர் ஜீன்ஸ் -ம்
சின்ன பூவா பெரிய பூவா ....என்பதுவும்
கிளிக்கூண்டு ஜிமிக்கியா இல்லை மயிலிறகு தொங்கட்டானா ...
டாப்ஸ் -க்கு மேட்ச்சான நெய்ல் பாலிஸா ...
இல்லை துப்பட்டாவுக்கு pearl செட்டா ?


நாளை நீ பவனிக்கு தேர்ந்தெடுக்க போகும் சுடிதார் கலர் என்ன என்பது கூடவும்....





10 பொருத்தம்... 10மா ?







கெட்டி தயிர் சாதத்தில் மாதுளை மாம்பழம் கலந்து மொறு மொறு urulai வறுவலை உட்புகுத்தி சாப்பிடுதல் ...
கிளாஸ் நடுவே பசித்தால் ரகசியமாய் சாக்லேட் உரித்து உள்ளே அனுப்புவது ....
கலர் கலராக ஒரு 10 பேனா வாங்கி வைத்துக்கொள்ளுவது ...
செல் வைத்து கொள்ளாமல் " எனக்கு மொபைலே பிடிக்காது " என்று அலும்புவது

fickle minded ஆக இருப்பது ...ஒன்றை செய்துவிட்டு செஞ்சுருக்க கூடாதோ ..? -டாதோ ....தோ ...வென்று படுக்கையில் படுத்து குமுறுவது....

சண்டே ஆனால் ....சோம்பேறி சோனியாக குளிக்காமல் 3 மணி நேரத்தில் 3 காபி குடித்துவிட்டு பேப்பரே  கதி என்று ஹாஸ்டல் மரத்தடியில் நைட்டியை கைலி போல் தூக்கி கட்டி கொண்டு  குந்தி கிடப்பது .....


ஒரு வாய் இட்லி ஒரு வாய் காபி குடித்து என்று சாப்பிட்டு ...சுத்தி யாரு இருக்கா என்றெல்லாம் பார்க்காமல் ...'டப் ' என்று நாக்கை சுழற்றி தட்டி  சொட்டான் விடுவது


என் கருப்பு கலர் ரெய்னோல்டு பேனா மூடியை நீ திருடி வைத்து கொள்வதும் .....உன் வாடாமல்லி கலர் பேனா  மூடியை நான் திருடி வைத்து கொள்வதும் ....


ஓரக்கண்ணால் அதை கவனித்து ரசித்து விட்டு ...கண்டுகொள்ளாதது போல் நடிப்பதும் .....


வெட்டியாக படிக்கிறேன் பேர்வழி என்று மாதம்  ரூ .5000 வீட்டில் தண்டம் போடுவதும் ....


சார் நடத்தும்போது போர் அடித்தால் நான் உன் தொங்கட்டான் , அழகிய கிருதா , நெத்திசூடியாய்  உன் முன்நெற்றியில் புரளும் முடிக்கற்றைகள் ....என ரசித்து நோட்டில் வரைவதும் ...நீ என் அரும்பு மீசையை விரும்பி வரைவதும்....நான் எட்டி பார்க்கையில் பட்டென மூடி கொள்வதும்.....


உன் கழுத்து செயின்-ஐ விரலால் முறுக்கி பல்லால் மெல்ல மெள்ள முனைவதும்.... அந்த செயினை நான் ஏக்கமாக பார்த்து விட்டு ...மெல்ல 'குடுத்து வச்ச செயின்-டா ' என்று கமெண்ட் விட்டதும் நீ சட்டென அதை விட்டுவிட்டு ...குனிந்து நாணுவதும் ...


பார் உனக்கும் எனக்கும் 10 பொருத்தம் ....



எப்புற்ரா.. ?



------------------------------------------------------------------------------------------
இன்டெர் காலேஜ் செஸ் சாம்பியன் செர்டிபிகேட்டும் ....
பிசினஸ் மேத்ஸ் -ல் வாங்கிய சென்டம்-மும் சும்மா ....

உன்னின்  " எப்புடி @#$$ முடியுது ..உன்னால மட்டும் ?" முன்னால்

------------------------------------------------------------------------------------------



தேனல்ல ..தெலுங்கு மொழியாள் 


நீ கொட்டாவி விடுவதே தெலுங்கில் தானாமே....
- சொன்னார்கள்
அவனுக்கு /அவருக்கு ...எது யூஸ்  பண்ணினாலும் பிரச்சனை ....
எனவே பெயர் சொல்லி @#$%...க்கு தெலுங்கு தெரியுமா? ...தெலுங்கு புரியுமா....தெலுங்கு படம் பாப்பாப்பிலயா ? ...என்று பேச்சோடு பேச்சாக துருவினாயாமே ?
எல்லாம் போட்டு கொடுத்துவிட்டாள் ...உன்னின் "சிந்து பைரவி -ஜனகராஜ் "தோழி - 
அன்று என்னின்  'தெலுங்கு தெரியுமா ? ' என்ற ஒற்றை கேள்விக்கு ....
நீ புரிந்த வார்த்தை நடனம்....

'..அவ்வளவாக தெரியாது ...!!'
'பேச தெரியாது ...!'
'கொஞ்சம்... புரியும் ..!'
'கொஞ்சம் தெலுங்கு படம் பாப்பேன்! '....

சரியான பொய்க்காரி....

எனக்காக பொய் சொன்னாயா
என் மெய்க்காரி..??!!
--------------------------------------------------------------------

அவ திமிர் புடிச்சவ.. 'ல்லப்பா '




உனக்காக நான் ஆசையோடு வாங்கி கொடுத்தனுப்பிய  @#$% -யை
'இதெல்லாம் வேண்டாம்னு சொல்லு ' என்று கோபம் காட்டினாயாமே ?
'திமிர் பிடிச்சவ ' திட்டி கொண்டேன் - திட்ட மனமில்லாமல் ...

போனில் கோபம் மறைத்து , வலிய /வழிய சிரித்து
"அங்க என்ன கலாட்டா ..? திட்டினாயாமே ..?" பயம் மறைத்து எச்சில் முழுங்கி சூனா பானா-வாய் குரல் உயர்த்தி கேட்டேன்...

நீ பதில் யோசிக்க எடுத்து கொண்ட அந்த இரண்டு நொடிகள் ...எனக்கு இரண்டு மணித்துளிகளாய் ....

கோபமாக 'ஆமா ...திட்டினேன் ...இப்போ என்ன அதுக்கு....எதுக்கு தேவை இல்லாம இதெல்லாம் வாங்கி குடுத்து விடுறீங்க...எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது ' 
- மனம் 2  ஜிகா பைட் per sec -இல் கற்பனை தட்ட
நெற்றி  வியர்வை முட்ட ...

மறுமுனையில் கெஞ்சும் குரலில்  சொன்னாய்
 ' ல்ல-ப்பா  ..! நான் ஒண்ணுமே சொல்லல ...
தூக்கம் இல்லே ....அதுனால எப்டி இருக்குனு கேட்டப்ப  பேசாம இருந்தேன்
திட்டவெல்லாம் இல்ல ..." மெல்லிய பயம் கலந்து பொய் சொன்னாய் .

அந்த பயம் பிடித்தது....
அந்த பொய்யும் பிடித்தது ...

அந்த முதன்முதல்   'ப்பா-வும் ' பிடித்தது ...
----------------------------------------------------------------------------


மல்லி ப்ராமிஸ் 




நீ விரும்பி சூடி கொள்ளும் - எனை கொல்லும் -
இந்த மல்லிகையை பார் ....
நன்றி கெட்ட பூ ...
உதிர்ந்து விடுகிறது உன்னை விட்டு ...

என்னையும் தான் ஒருநாள் சூடி பாரேன்.....
உதிரவே மாட்டேன் ...
மம்மி பிராமிஸ் !!!

-----------------------------------------------------------------

தலை சீவா ஹாஸ்டல் நைட்டி கோழி 




"என்னடா இவன் ...மந்திரிச்சு விட்ட கோழியாட்டம்  திரியுறான் ?  
திங்காம தூங்காம "
- நண்பர் கூட்டம் ...கவலையுடன் குஷி கொண்டது....
குஷியுடன் கவலை கொண்டது 
எப்படி தெரியும் அவர்களுக்கு ...

எனக்கு மந்திரிச்சு விட்ட பூசாரியும் Girls ஹாஸ்டலில் இப்படித்தான் திரிகிறாள்  என்று....

----------------------------------------------------------------------------------


காதல் ஜோக்கர் 





டிசம்பரின் இளவெயில் ...
பில்டர் காபி சுவை நாவில்...
உடம்பெங்கும் பெர்ப்பியூம் ஸ்மெல் ....
குலெர்ஸ் கண்ணில் ....
உன்னை காண போகும் குஷி நெஞ்சில் ....

ஒரு மிதப்பில் பைக் சாவியை எடுத்து கொண்டேன்...
நடுரோட்டில் புன்னகை ததும்பி வழிகிறது ....
குலுக்கி விட்டு திறந்த சோடா போல ...
கட்டுப்படுத்த தோன்றவில்லை ...முடியவும் இல்லை ...

ஒரு வளைவில் ....
கை காட்டி திரும்ப முயலும்போதுதான் ....
குறும்பு சிறுவன் குரல் என் பின்னால் ..சத்தமாக ....
' அம்மா அங்க பாரேன் ...
 நடக்கும்போது கூட ஹாண்ட் சிக்னல் காட்டுது 'ஒண்ணு '...! '

வழிந்து சிரித்து ...திட்டி கொண்டேன்....
'போடி ...எல்லாம் உன்னால் தான்..!! '

-----------------------------------------------------------------------

கனவை துரத்தும் க'ன'ஞன் 




காலை 6 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து ....
ஏலக்காய் டீ  சப்பு கொட்டி குடித்து  ...
மீண்டும் போர்வைக்குள்  முயங்கி...
உனக்கும் எனக்கும் இடையில் நிகழ வேண்டிய
பல கொண்டாட்ட குதூகலங்களை ...
தலையணை இறுக்கி....
நெற்றி சுருக்கி ....
 மண்டைக்குள் ஓட விடும் சுகமே சுகம் ...

இன்றும்....


மாலை மயங்கும் ...வானம் மப்பும் மந்தாரமுமாய்

ஒரு குளிர் வேளையில்
நீயும் நானும் பைக்கில் ...
நகரத்தின் வெளியில்...
இருவர் காதிலும் 'உயிரின் உயிரே ' வை கத்த  விட்டு 100-ல் பறக்க
வேண்டும்...
காற்று உனக்கும் எனக்கும் இடையில் புக  முயன்று தோற்று கோபமாக வேண்டும்
உன் ஹார்மோன் வேகம் முன் காற்றின் வேகம் தோற்று ஓட வேண்டும்
செய்வாயா ? - (...செய்வாயா ...செய்வாயா ..ன்னு சத்தமா கத்திட்டேன் போல...வீடு கூட்ட வந்த ஆயா ... 
'ச்சீ ...மொதல்ல கால கீழ போடு...வெட்கங்கெட்டது  ' ன்னு  கத்தியது 
  கேட்டதும் துள்ளி எழுந்து குளிக்க போய் விட்டேன். 

இப்படித்தான்...இந்த ஆயாவை போல தான் .... ஒவ்வொரு  சமூகமும் ஒரு கவிஞனை (?)  'பிரிந்து ' கொள்ள தவறி விடுகிறது ...பிரியுதா பிரியலையா ?    )









ஒரு மழைநாளில் ...
பால் போல்  நீயும் - டிகாக்ஸனாய் நானும் 
ஒரு காபியால் கலந்திருக்கும்போது ...

எனக்கு மண் வாசனை பிடிக்குமென்றாய் ....


எனக்குமுன் வாசனை பிடிக்கும்  என்றேன்....வேகமாக- உனக்கு தெளிவாக கேட்டு விட கூடாதென்று .


என்ன??!! ...என்றாய் ...அரட்டலாய் 


பதட்டமாய்  '..எனக்கும் மண் வாசனை பிடிக்குமென்றேன்' - குனிந்து கொண்டே 



அதீத  சிரிப்பை நீ அடக்குவதை ரசித்து கொண்டே ....
























வெறுமைக்கும் ....
பெருமைக்கும்  இடையே நீளும் 
இச்சிறுமை நதியை 
பொறுமையாக நீந்தி கடக்கும் அனைவருக்கும்  .....

வானம் வசப்பட வாழ்த்துகள் . 
'?
New Year Wishes..!!

விஜய் பிரசன்னா 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்