எங்க வேணாலும் ...எப்போ வேணாலும் புடிச்சிக்கோ
கொல்கத்தாவை தலைமை இடமாக கொண்ட இந்த 3 எழுத்து நிறுவனம் தான் நமது சிகரெட்டு களை தயாரிக்கிறது . இங்கு நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சிகரெட்டு புகைத்து கொள்ளலாம். எங்கு வேண்டுமானாலும் . எங்கள் அறை AC அறை வேறு . யாரையாவது கெஞ்சி வெளியே போய் பிடிக்க சொன்னாலும் ஒரு முறை முறைத்து விட்டு...உனக்கு புகை சேரலேனா நீ வெளிய போ...கம்பெனி ரூல்ஸ் அப்புடி " என்று திமிரான பதில் தான் வரும். இதனாலேயே இந்த கம்பெனியில் சேர்ந்த 6 மாதத்தில் எந்த பெண்ணும் தொடர்வதில்லை . ஒரு முறை ஒரு கர்ப்பிணி பெண் கேட்டுக்கொண்டும் பலன் இல்லை. நாங்களும் எத்தனையோ முறை கம்பளின்ட் கொடுத்து பார்த்தோம். CEO வரைக்கும் சென்றோம் ...பட் ஒரு ஆணியும் பிடிங்க முடியவில்லை . கேட்டால் "கம்பெனி பாலிசி" ....ஒரே வார்த்தை.
எங்க வேணாலும் ...எப்போ வேணாலும் புடிச்சிக்கோ . CEO மூஞ்சில கூட புகைய ஊத்தி தள்ளலாம். அவரு புன்னகையோடு ஏத்துக்குவாரு . கம்பெனி பாலிசி .
எல்லாரும் அண்ணாமலை ரஜினி மாதிரி ஸ்டைலா யாருக்கும் பயப்படாம சிகரெட்டை ஊதி தள்ளணுமா...? வாங்க ...வாங்க எங்க கம்பனிக்கு வாங்க ...!
IT கலாச்சாரம் ? உங்க பாஸ சொல்லி கூப்பிட முடியாது . முறைச்சு பார்ப்பார் . நானும் சேந்த புதுசுல " ஹாய் அபிஜித் " ன்னேன் . திடீர்னு ரூம் silent ஆயிடுச்சி ....எல்லாரும் என்ன மொறச்சு பாத்துட்டு இருக்கானுங்க. என்னடா இது ...KGF படத்துல வர்ற கேங்குல மாட்டிகிட்டோமா ? ன்னு டவுட் ஆயிடுச்சி. ஆனாலும் கடைசி வரைக்கும் - 2 வருஷம் - சார் னே கூப்பிட்டதில்ல. அதுல ஒரு வசதியும் ஆயி போச்சு.
அதுக்கு அப்புறமா எந்த ஒரு வேலைன்னாலும் , நம்மல கூப்பிட மாட்டாரு .
சார் ...சார்..னு பம்முன பயபுள்ளைக்கு தான் எல்லா வேலையும். யாருக்கு வேணும் உன் increment .
இந்த அபிஜித் -ன்ற பேரு கொல்கத்தாவில் ரொம்ப problem ...அப்பாடான்னு ஒரு டீக்கடை பெஞ்சுல உக்காந்தா அங்க ஒரு அஞ்சு அபிஜித் இருப்பானுங்க .
ஒரு ஷேர் ஆட்டோல போகும்போது அபிஜித்லாம் இருக்குங்க னா ...பாதி பேரு இறங்கிருவானுங்க ...!
நம்மூர்ல சுரேஷ் ,கார்த்திக்,ரமேஷ்,சரவணன் மாதிரி .
கர்நாடகாவுல சிவா , மஞ்சுநாத் ,சங்கர் மாதிரி. பெங்களூரு-ல வந்த புதுசுல எனக்கு ஒரே confusion .
யாரு-டா இங்க மஞ்சுநாத் ? security மஞ்சுநாத்தா ? இல்ல மேனேஜர் மஞ்சுநாத்தா ? இல்ல பக்கத்துக்கு சீட்டு மஞ்சுநாத்தா ? எதுக்குடா இத்தனை மஞ்சுநாத்...? பொம்பளைய இருந்தா மஞ்சு ...ஆம்பளையா இருந்தா மஞ்சு நாத் . அவ்வோளோதான் .
டீக்கடை-ல வடை சாப்டுட்டு ' உங்க நேம் ?' -ன்னா
மஞ்சுநாத்.
திடீர்னு எனக்கு எல்லாமே மஞ்சுநா மஞ்சுநா வா தெரிய ஆரம்பிச்சுடுச்சு ....சாரி மஞ்சள் மஞ்சளா ....!
சிவன் வெறியன்ஸ் .
புதுசா ஒரு ஆபீஸ் நண்பர் வந்து கை குடுத்தார். காதுல கடுக்கன் . பழுப்பு கண்கள் .பாத்தாலே தெரிஞ்சுது ...டிபிக்கல் கன்னடிகா . "ஹாய் ...மஞ்சுநாத் பண்ணி ....பண்ணி...! தம்பிக்கு பயங்கர ஆச்சரியம்...எப்புடி சார்..ன்னு ? விசயத்த சொன்ன உடனே மூஞ்சி தொங்கி போச்சு....அப்புறம் நம்ம கூட குப்பை கொட்டுன பிறகு எப்புடி நகைச்சுவை ஊட்டமா அனுப்புறது....அப்புறம் எது சொன்னாலும் ...'போடா புண்ணாக்கு ' ன்னு சொன்னாலும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சுட்டாரு ...!
ஒரு நாள் ஒரு தண்ணி கேன் போடுற பையன் வந்தான்...தம்பி மஞ்சுநாத் இங்க வான்னேன் ...."சார் எம்பேரு மஞ்சுநாத் இல்ல"-ன்னு அவன் சொல்ல ஆரம்பிக்குறதுக்குள்ள இங்க இவன் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சுட்டான்.
'சரி ...அப்ப சங்கரு...?"
இல்ல ..
அப்ப சிவா ?
ஈ-ன்னு சிரிச்சிட்டு சிவக்குமார் -ன்னான். WHAT A UNIQUE NAME? -ன்னேன்
இவன் மறுபடியும் சிரிக்க ...யப்பா சாமி ...மொதல்ல "உன் நட்ப பிட் பிட பேக்கு "ன்னேன் ....
விட்டுவிடு - பிட்டுபிடு
பாலு - ஹாலு
அவ்வ்ளோதான் !!
ஆந்திரா-ல பிரசாத் ....விஷ்ணு வெறியன்ஸ் . பிரசாத கூட்டத்துல "பிரசாத்துக்கெல்லாம் தயிர் பிரசாதம் போடாதீங்க" ன்னு சொன்னா ...பாதி பிரசாதம் மிஞ்சிரும். அப்புறம் தயிர் சாதம் கிடைக்காத சோகத்துல சூசைடு பண்ணிக்குவானுங்க . அவ்வோளோ தயிர் சாத வெறியனுங்க.
.

கருத்துகள்
கருத்துரையிடுக