தப்பு-ன்னா தப்பு -ன்னு செப்பு


அறிவு கட்சி-ன்னு ஒன்னு ஆரம்பிங்கப்பா யாராவது...? இல்லியா ...சரி விடுங்க நானே அறிவு கட்சி ன்னு ஒன்னு ஆரம்பிக்குறேன்.
ஏன்னா பகுத்தறிவு மேல மக்கள் பயங்கர கோவமா இருக்காய்ங்க .
அப்ப மத்த கட்சிலாம் அறிவு இல்லாத கட்சியானு  கேட்டா  ?....
தெரியலையேப்பா !!

இப்புடித்தான் ஊருக்குள்ளே நெறைய லூசுங்க திரியுதுங்க.....
எனக்கு அவரு தான் தலைவரு...
     வச்சுக்கோ..!!
அவரு கும்புடுற சாமிய தான் நான் கும்புடுறேன்...
    கும்புட்டுக்கோ ..!!
நான் கும்புடுற சாமிய தான் அவரு கும்புடுறாரு....
   சரி கொண்டாடிக்கோ ..!!

அவரு அது பண்ணாரு...இது பண்ணாரு...அதுனால அவரு நல்லவரு...
நானும் ஒத்துக்குறேன் ...அந்த விசயத்துல அவரு நல்லது பண்ணிருக்காரு..!

அவரு அதுல நல்லது பண்ணிருக்காரு....அதுனால "இது"வும் நல்லதுதான் !
எது  ? இந்த கண்றாவியா ...? போடாங் ...

அவரும் நானும் ஒரு சாமிய கும்புடுறோம்....அதுனால இதுவும் நல்லதுதான் !
அடங்கொய்யா ...ஊரே தூத்துது ...சர்வே பண்ணாய்ங்க...   சயின்டிஸ்ட் -லாம் தப்பு -ன்னு சொல்லறாய்ங்க ...அறிவார்ந்த பெரியவர்களும் எதிர்க்குறாங்க ..!

பரால்ல யா....பரால்ல....அதுனால ..என்ன ..அவரு எங்க சாமிய கும்புடுறவரு...எங்க ஆளு ...! எதிர்க்குறவய்ங்கெல்லாம்  எதிர்க்கட்சி மாறி இருக்கு !

அப்போ அவரு உன் வீட்டுக்காரம்மா கைய புடிச்சு இழுத்தா ...இளிச்சிட்டு நிப்பியா?
உங்காளு ...உங்க சாமி கும்புடுறவருன்னு விட்டுட்டு போயிடுவியா..?
மாட்டேல்ல  ?

எதுல ஆதரிக்கணுமோ அதுல ஆதரிக்கணும் ...எதுல எதிர்க்கணுமோ அதுல எதிர்க்கனும் .

நாளைக்கு நடுரோட்ல  யாரையாவது ரேப் பண்ணாக்கூட நீ என்ன சொல்லுவ ....அவரு ஆம்பள பாஸு ...அப்புடி இப்புடிதான் இருப்பாரு....நடு ரோட்ல உனக்கு உச்சா வந்தா ஒரு ஓரமா ஒதுங்க மாட்டியா  ? 
உனக்கு உச்சா ...அவருக்கு 'அது '  ...அப்புடின்னு அதுக்கும் சேர்த்து விளக்கு புடிக்குங்க .
இதுங்க தான் "மக்கள் சொத்தை"-ங்க பல்லுக்கு சொத்தை வந்தா என்ன ஆகும் ...அது மாதிரி மக்களுக்கு சொத்தை வந்தா ....மொத்தமா அழிஞ்சுருவோம் .

எனக்கு கூட....அந்த 'சீ'றும்  சிங்கத்தோட பேச்சு பிடிக்கும். 
ஆனா இத்தன நாலா நான் கும்பிட்டு வந்த சாமிய அசிங்கமா பேசுறது... இத்தனை நாலா அண்ணனா தம்பியா பழகிட்டு வந்த பிற மொழி பேசுற தம்புடுகளை தூத்துற  மாதிரி பேசுறது ....இதெல்லாம் ஒவ்வாத விஷயங்கள் .

(அதுங்கள விலக்கி வைக்கவும் முடியாது. அவரு விலக்கி வைக்க சொல்லாட்டியும்  தம்புடுகள் அப்புடிதான் பீலிங்-ல இருக்குதுங்க .)

அதுபோல தான் நம்மாளு கொண்டு வர்ற திட்டங்கள் தோத்துப்போகுது மக்களை அலைக்கழிச்சு வெறுப்பேத்து-துன்னு தெரிஞ்சா...எதிர்க்கனும் .
அது லோக்கலா இருந்தாலும் சரி நடுவுல இருந்தாலும் சரி .

அத விட்டுபிட்டு அவரு எங்காளு ,அவரு செய்யுறது எல்லாம் ரைட்டு ...
அவரை திட்டுறவனுங்க எல்லாம் பேட் பாய்ஸ்....அவரும் நாங்களும் தான் குட் பாய்ஸ் ...னு சொல்லிட்டு திரிஞ்சா ...அப்புறம் நாமளும் பேட் பாய்ஸ் னு காட்ட வேண்டி வரும் .

வருமா இல்லியா  ?

தப்பு-ன்னா தப்பு -ன்னு செப்பு பாவா ..!
ரைட்டுன்னா ரைட்டுன்னு  Write  பாவா ..!





கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்