வயதான கவிதை
நீ நெருப்பு ...நான் மெழுகு...
or
முரட்டு காளை ...நான் முயலாய் மாறிய அந்த காலை .....!
என் வீட்டு தென்னையிலிருந்து தேங்காயை இறக்குவது முதல் 'பரக் பரக் ' என்று காட்டுத்தனமாக மட்டையை உரித்து...
இரும்பு கிண்டியால் முரட்டு தனமாக 'டொம் ' 'டொம்' என்று அடித்து உடைத்து வெறித்தனமாக சில்லுகளாக கீறி பிரிஜ்ஜில் வைப்பது வரை .....அடியேன் தான் ...அது போன வாரம் ...முரட்டு சிங்கிளாய் திமிறி திரிந்தவரை ...!
நேற்று....
'உன்ன பிடிச்சிருக்கான்னு தெரில ....பட் உன் நெனப்பாவே இருக்கு ' என்று டீசென்ட் ப்ரோபோசல் செய்யுமுன் வரை ... என் டீசென்ட் ப்ரோபோசலை கேட்ட பின் ....
மறுநாள் பூராம் கண்ணெல்லாம் சிவந்து...பித்து பிடித்தாற் போல் யாரிடமும் நீ பேசாமல் இருந்ததை கண்டு ...புரியாமல் ...கலங்கி போய் ...
'என்ன ...எதாவது சொல்லு...திட்டணும்னா திட்டிரு ..'
- என்றேன் எச்சில் முழுங்கி .
நீ சொன்னாய் ....உன் அழகிய கண்களை மலங்க மலங்க விழித்த படி ....
'உன்ன பிடிச்சிருக்கான்னு தெரில ....பட் உன் நெனப்பாவே இருக்கு..நைட்லாம் தூங்கவே இல்ல ....'
-கேட்டவுடன் அப்போது ஏறிய போதை தான் ...
எப்போது பார்த்தாலும் ...ஒரே புன்னகை தான் ...24/7 நேரமும் ...சுப்ரமணிய புரம் ஜெய் போல ...
இன்று காலையும் தேங்காய் உரிக்கும் process ...
'ஐயோ ..அம்மாடி ....ஒரு தேங்காய் சில்லுக்கு எப்புடி முரட்டு தனமா வேலை செய்ய வேண்டி இருக்கு ' என்று நான் சிணுங்கி கொள்ள ....
'இதென்னடா கூத்து ...?' என்பது போல ...இடுப்பில் கை வைத்தவாறே என்னை ஒரு "முரட்டு காளை மாடு சுடிதார் போட்டு கொண்டு நிற்பதை " போல ...என் மம்மி விட்ட லுக் இருக்கே ....
சூழ்நிலை மறந்து மென்மை காட்டி விட்டேனோ ?? ...
இப்போதெல்லாம் நான் ....வெஜ் ஆக மாறி விட்டேன்.....
கருமம் ...எப்புடிதான் இந்த ஆடு , கோழி எல்லாம் துள்ள துடிக்க கொன்னு சாப்பிடுறானுங்களோ ?
முரட்டு ஜீன்ஸ் கூட பிடிப்பதில்லை ....ஒன்லி காட்டன் pants .
ஆண்மைக்கு மென்மை அழகா ? தெரியவில்லை
இப்போதெல்லாம் நான் ....வெஜ் ஆக மாறி விட்டேன்.....
கருமம் ...எப்புடிதான் இந்த ஆடு , கோழி எல்லாம் துள்ள துடிக்க கொன்னு சாப்பிடுறானுங்களோ ?
முரட்டு ஜீன்ஸ் கூட பிடிப்பதில்லை ....ஒன்லி காட்டன் pants .
ஆண்மைக்கு மென்மை அழகா ? தெரியவில்லை
ஆனால் உன் கண் மை-யால் அது மென்மை யாகிறது ...
----------------------------------------------------------------------------------------------------------------------------
முற்றிய 'கள் '
ஜ்ஜ்ஜ் -வென்று ...புது ரத்தம் பாய்கிறதே...
என் கவிதை என்பதாலா?
உன்னை பற்றியது என்பதாலா ?
இல்லை...
உனக்கும் எனக்கும் நடுவே இருக்கும் 'அதை ' பற்றியது என்பதாலா ?
--------------------------------------------------------------------------------------------------------------------------
காற்றெங்கும் உன் வாசம்...கால் நூற்றாண்டுக்கு பின்னும்
எனக்கும் காலம் கால் வாசி காட்டி விட்டது.
கண்ணில் சிறு கருவளையம்...
எட்டிப்பார்க்க முயன்று தோற்ற நரை...
இளமை-யில் கொதித்து இன்னும் அடங்காமல் பார்ட் -2 காட்டும் ரத்தம் ...
(BP ன்னு சொன்னா சிரிக்கப்படாது )
உன்னை சிறிது காலம் நினைத்து தொலைத்ததால் கொஞ்சம் ரத்தத்தில் சர்க்கரை ....
இருந்தும் ....
தனிமையில் ...பரண் மேல் ஏறி ...
பழைய சூட்கேசை திறந்து ...திருட்டு தம் போல ...பழைய டைரியை புரட்டி ....இந்த கவிதைகளை மொட்டைமாடி திண்டில் அமர்ந்து....திருட்டு தனமாக ரசித்து வாசித்து விட்டு ...
சுவாசித்து பார்த்தால் ....மீண்டும் காற்றெங்கும் உன் வாசம்..!!!
-----------------------------------------------------------------------------------------------------------------------------
தற்கொலை எண்ணம் தலைதூக்கும் போதெல்லாம் ....
இந்த கவிதைகள் மட்டுமே ...என் நம்பிக்கை விதைகள் ..!
இவ்வளவு பெரிய சாதனை (?) செய்ய முடிந்த என்னால் ....
"இவ்வளவு பெரிய ஆளா நீ ...? பாக்க பள்ளிக்கூட பாட்டி கடை மாங்கா மாறி
இருந்துகிட்டு...." என்று உன் வாயால் விருது வாங்கிய என்னால் ...
ஏன் format மட்டும் செய்ய முடியவில்லை என் ஹார்ட்டிஸ்க்கை ??
எல்லாம் சிஸ்டம் போல்டருக்குள் மறைந்து ஒளிந்திருக்கும் ....உன் போல்டர் படுத்தும் பாடு ...??!!
------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------
நீ க்ளுகோஸ் ...எப்போது உன்னை பார்த்தாலும் நான் க்ளோஸ்
or
கவுண்டவுன் டு கவுண்டப்
வயதான என் கவிதை-யை இப்போது ..இந்த வயதில் பார்த்தாலும்
இதே வார்த்தை குவியல் கொட்டுமா ?
பார்த்து விட வேண்டும் ....ஒரு முறை
ஆனாலும் மனம் தடுக்கிறது ....இப்போது வேண்டாம்... டாக்டர்களால் கை விடப்பட்டு ...கடைசி மணித்துளிகளை கவுண்ட் டவுன் ...செய்யும்போது வந்து என் தலைமாட்டில்
நீ நின்றால் போதும்... !
யார் கண்டது ...கவுண்ட் அப் ஆனாலும் ஆச்சரிய படுவதற்கில்லை ...!
கருத்துகள்
கருத்துரையிடுக