Vaanam kottatum - Review- A look from another Angle-வானம் கொட்டட்டும் - கொட்டுனா வலிக்குமா ...வலிக்குமா ?

வானம் கொட்டட்டும்  - அருமையான  டைட்டில் . பொசிட்டிவ் எனர்ஜி உள்ள டைட்டில்.

ப்ளூ ஷர்ட் அப்புறம் இன்னும் சிலர் சொல்ற அளவுக்கு மட்டமான படம் இல்ல .

ப்ளூ ஷர்ட் வெறி கொண்டு பாத்துருக்கு படத்த . 

சைக்கோ-வோட compare பண்ண 10 டைம்ஸ் பெட்டெர். இந்த படத்துல இருந்த நேர்மை சைக்கோ ல இல்ல . 
ஒரு படம் நேர்மையா இருக்கா இல்லையானு எப்படி கண்டு பிடிக்குறது ?
2nd தடவை அந்த படத்தை பாருங்க . புரிஞ்சுரும் .
துப்பறிவாளன ரெண்டாவது தடவை பாத்தீங்கன்னா துப்பீருவீங்க .
சைக்கோ -ரெண்டாவது தடவ பாக்கவே தோணாது .
பட்... யுத்தம் செய் , அஞ்சாதே எல்லாம் வேற லெவல் . அத பாத்துதான் நான்லாம் மிஸ்கின் வெறியன் ஆனது .

வானம் கொட்டட்டும்.
முதல் பாதி வானம் மெய்யாலுமே கொட்டுச்சு . ரெண்டாவது பாதி தலையிலே கொட்டுச்சு- நிறைய பேருக்கு அப்புடிதான் பீல் ஆயிருக்கும் 
பட் அத சொல்ல தெரில . மொத்த படமும் மொக்கைன்னு முத்திரை குத்திர வேண்டியது.
நிறைய நல்ல படங்கள் fail  ஆனதுக்கு காரணம் 
செகண்ட் பார்ட் energy குறைவா இருக்குறது தான் . Why ? becoz ….

மக்கள் வெளிய வரும்போது போரடிச்சோ , satisfy ஆகமலோ, கடுப்பாகியோ 
வெளிய வந்து சொல்ற வார்த்தை ரொம்ப முக்கியம் . அந்த ஒரு சென்டென்ஸ் . தட் மொமெண்ட். அதுவும் டிவி கேமரா முன்னாடி சொல்றது ரொம்ப முக்கியம் . ஒரு review ….ஒன்னு நூறாகும் ….நூறு ஆயிரம் ...ஆயிரம் லட்சமாகும் ...டைரக்டருக்கு பெரிய லச்சையாகும் .


சில படங்கள் நல்லா இருக்கா இல்லியானே நமக்கு சொல்ல வராது . ஏதோ  போச்சு ன்னு இருக்கும் .
 ஏன்னா பாதி நல்லா இருந்து (energetic ) பாதி டல் லா இருந்தா அப்புடிதான் இருக்கும் . (அஞ்சல  - படம் ஒரு நல்ல உதாரணம் , first half ஆச்சர்ய படுத்தி இருப்பார்  தங்கம் சரவணன்)
படம் முடுஞ்சு மைக்க உங்க முன்னாடி நீட்டுனா என்ன சொல்றதுன்னு தெரியாதப்ப ….முன்னாடி ஒருத்தன் ' படம் மொக்க 'ன்னு சொன்னா நீயும் அதைத்தான் சொல்லுவ ...அவன் 'படம் அருமை'ன்னு சொன்னா நீயும் 'ஓகே ..சார் ...பாக்கலாம் ' ன்னு சொல்லிட்டு போயிடுவ .
இதுலயும் அப்புடிதான் . இன்டெர்வல் வரைக்கும் படம் அவ்வளவு நல்லா இருக்கும் .
 இன்டெர்வல் வரை குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா ….அவோலோ energetic கா ...positive -ஆ போச்சு .
இண்டெர்வலுக்கு அப்புறம் அப்புடியே ஆப்போசிட் .

தனா ..நீங்க எடுத்தது எதுவும் சோடை போகல .
பட் ..வாழைக்காய் business details சீன் மாதிரி மக்கள் புதுசு புதுசா எதிர்பாக்குறாய்ங்க .
வில்லன் ...அவரு நல்லா பண்ணி இருக்காரு ...பட் எல்லாமே ஏற்கனவே பலமுறை பாத்தது . இதைவிட கொடூரமான வில்லன்ஸ் that too in a single movie எல்லாம் பாத்தாச்சு . 
சோ , எல்லாருக்கும் அந்த வில்லனோட கொடூரம் பத்தல . அவளோ தான் .
எல்லாம் கொடூர கூத்தைங்களா மாறிட்டு இருக்கோம். 
The more the cruel, the more the attractive and Interesting.
அதுக்குதான் மிஸ்க்கின் அந்த பாடு படுறார். 
அதான் அந்த படம் மொக்கையா இருந்தாலும் ஓடிக்கிட்டு இருக்கு. 
அறிவா யோசிச்சா அந்த படம் ஓடாது .

இன்டெர்வல் வரைக்கும் விட்ருவோம் ...இப்போதைக்கு .

போஸ்ட் இன்டெர்வல் வர்ற ஒவ்வொரு சீன் -னும் just a list of events. 
UPs and Downs or Strange events are not there.
சரத் எல்லாம் bullet-ல போனா எதோ பெருசா பண்ண போறாருன்னு பாத்தா ….பொண்ண உளவு பாக்க சினிமா தியேட்டர்க்கு போறாரு . 
-Dull - 
இதுக்கு சரத் எதுக்கு ? Normal அப்பா போதுமே ..

அப்புடியே அவரு வாங்கிட்டு வந்த வாழைக்காய் ...ஊரு உலகத்துலயே கிடைக்காத ஞானப்பழம் ...அதுக்கு பயங்கர  Vaigra effect-u...or  அத சாப்பிட்ட உடனே பக்கவாதம்  சரியாப்போச்சு …உடனே 100 லோடு இறக்கி விக்ரம் பிரபு கோடீஸ்வரன் ஆகி அடுச்சு தூக்குறார் . இப்புடி சீன் வையுங்களேன் ..என்ன ஆயிர போவுது ? That's what people want. That's what people expects from a star like sarath. But not a bulb like Spoiler Banana .படத்தோட சுதி கொறஞ்சது அங்க தான் .
அவரு கோடீஸ்வரன் ஆன  பின்னே ...அப்புடியே Jailmates-சோட பெரிய பங்களால சாப்பிடும்போது ஹீரோ வேற காரணத்துக்காக திட்டி ...அதுனால சரத் வீட்டை விட்டு கிளம்பிடுறார்….உங்க கதைப்படியே ..அப்புடியே கூட வச்சுக்கோங்களேன் .  
இது Cliché வாதான் இருக்கும் . பட் நம்ம treatment  should make it forget it as a cliché . that's it. All movies are same . Only Treatment matters. 
நம்ம மக்கள் அத தான் விரும்புறாங்க .

வில்லனோட கொடூரம் ...ஒரு டைரக்டர் எவ்ளோ கொடூரமோ ....அது தான் படத்துலயும் reflect ஆகும். தனா  நீங்க ரொம்ப soft  ன்னு ..இதுலே தெரியுது .

Heroine - மடோனா , ஐஸ்வர்யா மாறி ரெண்டு செக்ஸி heroine-ன  வச்சு நீங்க என்ன பண்ணுனீங்க …? இந்த கதைக்கு அவுங்க எதுக்கு  ?
மடோனா -வ போஸ்டர்-ல பாத்துட்டு ...இன்னிக்கு கொட்ட போவுதுடா ன்னு டிக்கெட் கவுண்டர் -ல நின்ன மடோனா வெறியன்ஸ் ல நானும் ஒருத்தன்.

அஞ்சல  மூவி பாத்தீங்கன்னா தெரியும் . ஹீரோவும் ஹீரோயினும் T.ராஜேந்தர் மூவி ஹீரோ ஹீரோயின் மாறி தொட்டுக்கவே  மாட்டாய்ங்க .
உங்க மூவிலையும் அப்புடிதான் .  ரொமான்ஸ் சீனுக்கெல்லாம் டீசென்ட் டைரக்டர் வேலைக்காக மாட்டீங்க . ஊருல படம் பாக்குற அப்பத்தா ஒன்னு விட்ட மச்சான்-லாம் தப்பா நெனச்சிட்டா …??!!!

அப்படி கூச்ச படுற பட்சத்தில் ….உங்க கூடவே ரொமான்டிக் வெறியன்ஸ் நெறைய பெரு ...நெத்தில பட்டையோட கழுத்துல உத்திராட்ச கொட்டையோட ஸ்பாட் ல ….shooting  Crew-ல..... heroine-ன வெறிச்சுட்டே திரிவானுங்க  ;-)  படம் ஷூட்  முடியுறவரைக்கும்  ஹீரோயின  லவ் பண்ணிட்டு இருப்பானுங்க …..அவனுங்கள கேட்டா கொட்டுவானுங்க . 

திரும்ப திரும்ப ராதிகா @ பிரின்டிங் பிரஸ் ...Dull 
அப்புறம் சாந்தனு ...பாவம் ...நான் KB யா இருந்தா உங்கள மன்னிக்கவே மாட்டேன். ஒரு வளர்ற ஹீரோ-வ இப்புடி உப்புக்கு சப்பானியா மாத்தி வச்சுடீங்களே ….
அப்புடியே ஒரு சீன் ல அவுங்க ரெண்டு பேரும் நைட் ...ஊருக்கு அவுட்டெர்ல பைக் -ல போகும்போது … ஐஸ்வர்யா வாய் கொழுப்புனால சும்மா போற 4 காம கொடூரன்கள் திரும்பி வந்து ...கெஞ்சி மன்னிப்பு கேக்குற சாந்தனுவை ரெண்டு தட்டு தட்டி மூலைல போட்டுட்டு ...வித்தியாசமா (?) கொடூரமா ...கெடுக்க ட்ரை பண்ண (இங்க வித்தியாசம்  முக்கியம் ...இல்லேன்னா நார்மல்  cliché ஆயிடும் ) இப்போ இவ்வோளோ நேரமா அம்பி-யாட்டமா இருந்த சாந்தணு ...அந்நியனா மாறி அவனுங்கள அடிச்சு விரட்டிடுறார். 

இந்த இடத்துல நார்மல்  fight வச்சா எடுபடாது ..ஏன்னா சாந்தனு ஒரு சாந்த சொரூபி . அவரு terror-ஆ மாறி பண்ற technique differentaa  இருந்து ...வில்லன்ஸ் மரண பயத்தோட ஓடி இருந்தா ...அந்த ட்விஸ்ட்டே வேற. மக்கள் கைதட்டி ரசிச்சிருப்பானுங்க . சாந்தனு ஐஸ்வர்யா -லவ் க்கு ஒரு high justification  கெடச்சிருக்கும் . 

( ….ஐஸ்வர்யா வ மூணு பேரு  அழுத்தி பிடிக்க ...நாலாவது ஆள் ...ஐஸ் மேல படுக்க ...அவன் முதுகு தொபதொபன்னு  நனைய ...திடீர்னு அவன் முதுகு தீப்பிடிக்க ...ஒவ்வொருத்தன் முதுகும் நனைய ...என்னடான்னு பாத்தா நம்ம அம்பி சாந்தனு அந்த பைக் ல இருந்து பெட்ரோலை பாட்டில்-ல புடுச்சு ...அவன் முதுகிலே ஊத்தி ...ஒரு லைட்டர் யூஸ்  பண்ணி பத்த  வச்சிட்டார் . Simple பட் powerful .  அவருதான் ஒழுக்க மாச்சே அவருகிட்ட லைட்டர் எப்புடி ன்னு கேக்குற ...கே.கூ ..அறிவு ஜீவிகளுக்காக ….இந்த சீனுக்கு ரெண்டு சீன் முன்னாடி ...சாந்தனு திருட்டு தம் அடிக்கிறா  மாறி (அந்த கடலை கொறிக்கிற சீனுக்கு பதிலா )சீன் வச்சுட்டா நம்ம அறிவு ஜீவிகளுக்கு கட்டை வெந்துடும் . தட்ஸ் இட் . இது சும்மா ஒரு உதாரணம் . உக்காந்து யோசிச்சா ...இன்னும் நல்ல எபக்ட்டிவான fighting techniques யோசிக்கலாம் . (நம்மவர் பிளேடு fight மாதிரி )
சாந்தனு- கேரக்டர்-க்கும் justification கெடச்சிருக்கும்.
கல்யாண் ரெட்டி மேல மக்களுக்கு கடுப்பு ஏத்திவிட்டு கழட்டி விட வசதியா இருந்திருக்கும் .  கடுப்பேத்தாம கழட்டி விடுறதுனால ....சரியா எடுபடல . 

சரத் ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆகி வீடு திரும்பும் சீன் .  அருமையான சீன் .
அவரு பேசாமலே இருந்திருந்தா இன்னும் அருமையா வந்திருக்கலாம்.
(அப்பா நான் வந்துட்டேன் ….அம்மாவ  நல்லபடியா கவனிச்சுக்கிட்டியா ….எக்ஸ்ட்ரா டயலாக்ஸ் )

அப்புறம் கல்யாண் ரெட்டி காலேஜ் அட்மிஷன் ப்ராசெஸ் . அந்த சாங் முடிஞ்சப்புறம் தான் புரிஞ்சது . ஏன் ...எதுக்குன்னு …?

1.ஐஸ் பஸ் ல இருந்து விக்ரம் கண்ணுல படாம தப்பித்தல் 
2. மடோனா குடித்துவிட்டு சலம்புதல் 
3. மடோனா 2 cr லோன் கேட்டல்  
4. மடோன்னா  இன்ட்ரோ சீன்  ...அந்த அதிகாலை பொழுது… 
ஆல் கிளாஸ் அண்ட் மாஸ் . மக்கள் சிரிச்சு ரசிச்சாங்க .

5. Sister brother closeness was so cute than any other films. No cliché too. 


Interval-க்கு  அப்புறம் அடிச்சு தூக்கு ...அடிச்சு தூக்கு ன்னு சொல்றா மாறி சீன் இல்ல .அவ்வளவுதான் . வில்லன் கொடூரம் பத்தலை . வேற ஒன்னும் பெருசா
'குறையொன்றும் இல்லை ...மணி மூர்த்தி கண்ணா ….'
Small பட்ஜெட் ...சோ சிம்பிள் movie .




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்