99 - Kannada Vs 96 -Tamil -ஙப்பி மிஸ் பண்ணிய ஹைகூ -க்கள்
ஙப்பி மிஸ் பண்ணிய ஹைகூ -க்கள்
Haikoos missed by Director Guppi
வெறும் கதையை மட்டும் translate பண்ணிட்டீங்க ... எமோஷன்ஸ் எங்க Mr.Guppi ?
விஜய் சேதுபதிய பாருங்க ….கணேஷ பாருங்க...துள்ளி குதிச்சு திரியக்கூடாது ...சந்தோசத்தை தொலைச்சிட்டு ...அதை தேடி அலையுற ஒரு ஆத்மா வா ..விஜய் வாழ்ந்து காட்டி இருப்பாரு… 99 ன பாக்குறவைக்கும் எனக்கும் இந்த உண்மை புரியல...
ஜானு -தெலுங்கு கூட கொஞ்சம் பரவாயில்ல .
இதுல நெறைய மிஸ் பண்றீங்க பாஸ்.
அந்த பையன் ஆளு சும்மா தல தல ன்னு இருக்கான் . வில்லன் ரோல் பண்ணலாம்.
தான் நினைச்சதை சொல்ல முடியாத ஒரு வாயில்லா ஜீவன் தான் படத்தோட ஹீரோ. A very sensitive boy .
Music ரொம்ப அடிவாங்கிருக்கு . இந்த மாதிரி movies க்கு மியூசிக்-க்கு தனி பட்ஜெட் இருக்கனும் . தமிழ் extraordinary . I am not expecting that level. But செலவே இருக்கக்கூடாதுன்னு பண்ணி வச்சிருங்காங்க .
ஒவ்வொரு ஸீனா வருவோம்.
1. First song . கேமரா சூப்பர் லொகேஷன்ஸ் கூட . தமிழ்ல இவோலோ அழகா இல்ல . first time - புது டைரக்டர் இல்லியா - பட்ஜெட் constraint .
தெலுங்கு -ல இந்த பாட்டுக்கு செம பட்ஜெட் . first ரேங்க் இந்த பாட்டோட தெலுங்கு version கு தான் .
Note : தமிழ் & தெலுங்கு -same director.
பட் இனி எந்த மொழிக்காரனும் எழுத முடியாத பாட்டு தமிழ் version பாட்டு மட்டும் தான் . அப்புடியே உங்கள படத்தோட மூடுக்கு செட் பண்ணி , ஹீரோவோட மைண்ட் செட்ட சொல்ற ஒரே சாங் ...தமிழ் பட வரலாற்றில் இந்த பாட்டு ஒரு முக்கிய மைல் கல். வேற லெவல் ..வேற லெவல் -ன்னு சொல்றதுக்கு சரியான எடுத்துக்காட்டு . கஞ்சா அடிக்காம ...கவிப்பேரரசு ன்னால கூட இப்டி எழுத முடியாது .
பாட்டு முடியும்போது ...ராமு ..ஜானு ..ன்னு மணல்ல எழுதுறது….
-அந்த கவிதையை மிஸ் பண்ணிட்டீங்களே கப்பி .
2. பாட்டு முடிஞ்ச உடனே அந்த கோயில் குளத்தில் ஓதுவார் ஒருத்தர் பாடுற வாய்ப்பாட்டு தமிழ்ல எக்கோ effect-டோட அவ்வொலோ சூப்பரா இருக்கும்
நம்ம கப்பி மிஸ் பண்ணிட்டாப்ல .
3.கார்-ல போகும்போது புதுசா மால்குடி டேய்ஸ் வீடு ...ஷூட்டிங் வீடு எல்லாம் சொல்றாப்ல ...Sounds nice.
இந்த மாதிரி தமிழ்-லயும் புதுசா வச்சிருந்திருக்கலாம் . தமிழ்ல அவ்வளோ impressive-ஆ இருக்காது .
4. வாட்ச்மேன் டீ கேட்டும் ...வேணாம்னு சொல்றதுல என்ன பாலிடிக்ஸோ ...காபி -ன்னு கூட சொல்லிட்டு போய் குடிச்சிட்டு வந்துருக்கலாம். இந்த மாதிரி டீ காபி சீன்லாம் மிஸ் பண்ணவே கூடாது. கப்பி -கண்டிப்பா டீ (கு)புடிக்காத டைரக்டராதான் இருக்கணும்.
5. -"..யாரு அந்த 4வது ...ஆளு ? " -sister
ராம் ..ஜானுவும் வர்ரா ….
இந்த சீன்ல ---சவுண்ட் ரெகார்டிங் தமிழ்ல பாருங்க . மியூசிக் டைரக்டர் ...பிச்சிருப்பார். Capturing the silence on such occasions is an intellectual art. 96 பாருங்க தெரியும். ஜானு ராம் பேர கேட்ட உடனே - again Same silence. Mr. Music director ...and director...you missed a pearl.
6. School scene- Both the boy and the girl are personality-wise Ok ...than tamil . But what we needed here is EXPRESSIONS....the whole movie depends on expressions guru. This movie lacks it from the beginning and especially this school part missed it.
7. Ramachandra is day dreaming 2 times here in kannada. It should be like that...in Tamil it was only the 2nd time. Here Kannada doing just.
8. நைட் பூராம் தூங்காம போர்வைக்குள்ள காஞ்சு போவான். விடிகாலையில் அவன் அம்மா போர்வைய விளக்கி பாத்து ஷாக் ஆவாங்க . இந்த கவிதையான சீன காப்பி பண்ணக்கூட அவருக்கு தோணல . அவருக்கு புரில .வேற என்னத்த சொல்ல .
9. ஜானு திரும்பி பாக்கும்போது அவன் பைய்யனா இருந்தாலும் வெக்கோத்தோட அடுத்தவன் முதுகுல ஒளிவான் . அது... கவிதை . இதையும் எழுதணுமா ? கண்மணி போட்ட பொன்மணி போட்ட ...இது கவிமணி இல்லியா ...போட்ருக்கணுமா இல்லியா ?
ஆம்பள எப்டி ஒளிவான்னு யோசிச்சிட்டாரு நம்ம கன்னட சிங்கம் .
நம்ம ஆம்பள ஒளியனும் . அதான் ராம். An important character defining scene.
missed it.
10. அப்புறம் ரெண்டு பேருமே கண்ணீர் சிந்துர மாதிரி (ஸ்கூல் age ) சீனே தமிழ்ல .இருக்காது .இதுல கொஞ்சம் பரவாயில்லை ..ஹீரோயின் does once .
11. 'உன்ன எங்க இறக்கி விட்டேனோ அங்கே தான் ஜானு இருக்கேன் '
ஜானு வந்த உடனே - காலில் விழுவது போன்ற பாவனை . இங்கே இல்லை.
சரி அதுகூட ஓகே. பட்….
அவள் அழுதுகொண்டே தன் ஹோட்டல் ரூமிற்குள் ஓடியவுடன் ...ராம் பதறி பின் தொடர்ந்து அவளின் ரூமை தேடி வருவான்….
( எனக்கு தெலுங்கு version மிகவும் பிடித்தது. ராம் அவள் ரூமை தேடி கொண்டு reception நோக்கி வரும்போதே ஒரு குரல் அவளின் ரூம் நம்பரை சொல்லி விடும் . அட்டகாசமான ஸீன் .
தமிழில் ஓகே -தான் . )
அப்போது அவளின் செருப்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடக்கும் . அது அவளின் அழுகையின் ஆற்றாமையின் தீவிரத்தை ...2 சிதறிய செருப்புகளின் மூலம் சொல்லிய டைரக்டர்-ரின் மாஸ்டர் பீஸ்.
அது புரியவில்லை நம்ம கன்னட கப்பிக்கு .
பொம்பளை செருப்பை ஆண் பொறுக்குவதா என்று விட்டுவிட்டார் போலும் . தப்பில்லை. பொறுக்குவது போல ...காட்டா விட்டாலும் சிதறிய செருப்பை காட்டியிருக்கலாம்.
ராமின் ஒவ்வொரு movement ளிலும் காதல் வழிந்தோடும் . செருப்பை எடுத்து கொண்டு செல்வதும் அதில் ஒன்று.
12. தமிழ் -ல ....ரெண்டு பேரும் ஹோட்டல் ரூம் ல தரையில தான் உக்காந்திருப்பாங்க ...அது நம்ம மனசுக்கு ஒரு டச் குடுக்கும் .
இங்கயும் அப்புடிதான் உக்காந்துருக்காங்க பட் செயற்கையா இருக்கு . கவனிச்சீங்களா கப்பி .
"மயக்கம் என்ன "படத்தில் வரும் யானை புகைப்படத்தின் சிறப்பு என்ன ?
(குமுதம் அட்டைப்படம்). தெரிந்தவர்கள் கூறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக