அதிகாலை அட்ரோசிட்டிஸ்
அதிகாலை மணி 3.45 . என்னை குஷியில் type பண்ண வைத்த அண்ணன் அனூப் க்கு சியர்ஸ் .
அதற்கு முந்திய நாள் மாலை 6 மணி.
'என்ன சரவணன் ...நாளைக்கு லீவு போல....' - நாம தான் போறதில்லியே...கேட்டு தான் வைப்போம் .
சரவணன் - 'ஓ ...அப்புடியா...எதுக்கு நாளைக்கு லீவு ..'? - எங்கள் அபார்ட்மெண்ட் மொட்டை மாடியில் அல்லது கார் பார்க்கிங் -ல் வாக்கிங் போவது வழக்கம்.
நானும் அவரும் , எங்களது மனைவிகள் , எங்களது பிள்ளைகள் . ஜோடி ஜோடியாக வாக்கிங் அண்ட் பிளேயிங் . கொரோனா-வின் கொடை .
இருவரும் ஒன்றாக எப்போதாவது அவரது வீட்டு ரூமில் 'பீரா ' அடிப்போம் .
இன்று அக்டோ -2 :
வழக்கம்போல மொட்டை மாடியில் வாக்கிங் வழக்கமான கக்கேபிக்கே சிரிப்போடு .
பக்கத்துக்கு பால்கனி அனூப் (கன்னடிகா )க்கும் நமக்கும் ஏற்கனவே வாய்க்கால் தகராறு. அக்கினி நட்சத்திரம் கார்த்திக் பிரபு போல் முறைத்து கொள்வோம் .
அவர் பையன் ஸ்விம்மிங் பூல்- ல் அரை லிட்டர் கருப்பு பெயிண்ட் டப்பாவை முக்கி விளையாடியதில் மொத்த ஸ்விம்மிங் பூளும் பகல் வானத்தில் இருந்து இரவு வானத்திற்கு மாறியது.
நீல நிற கண்ணன் கருமை நிற கண்ணனாக மாறியது போல.
(வடமொழியில் "நீல" என்ற சொல் கறுப்பு மற்றும் நீல நிறங்களையும் குறிக்கும். அதனால்தான் இந்தக் குழப்பம்.
கண்ணன், திரௌபதி ஆகியோர் கறுப்பு நிறத்தைக் கொண்டவர்கள்)
கருமை+இருட்டு(இருள்)+அணன்(உடையவன்,பாெருந்தியவன்)=கருட்டிணன்>கிருட்டிணன்(கிருஷ்ணன்)>கருமை+அணன்=கருண்ணன்>கர்ண்ணன்>கண்ணன்.ஆமா இப்போ நா என்ன சொல்ல வந்தேன் ....ங்கொய்யால ... தண்ணிய போட்டு type பண்ணாலே இந்த பிரச்சனை தான். நான் அடிக்குறதே மாசத்துக்கு 1 வாட்டி தான். சொன்னா இந்த குடிகார கபோதிங்க நம்புறதே இல்ல ...ம்ம்ம்ச் ...அதெப்புடி பாஸ் ...சும்மா காமெடி பண்ணாதீங்க பாஸ் ...அதெப்புடி நாம வாரத்துக்கு 2 அல்லது 3 வாட்டி அடிக்காம இருக்குறதில்ல...மாசத்துக்கு ஒரு வாட்டி மட்டும் இவன் எப்புடி ? என் ஹவுஸ் மேனேஜர் (வீட்டம்மா ) கிட்ட ஒரு வாட்டி திட்டு வாங்கி பாருங்கடா ...அப்போ தெரியும். அடிச்ச போதைய திட்டுற திட்டுலே இறக்கி விட்டுகுஷி ஆகிக்குவா ...அதுல அவளுக்கு ஒரு போதை...! எங்க பரம்பரையிலே எவனும் குடிச்சதில்லே. அதுனாலே எனக்கு ஒரு மூடி மோந்து பாத்தாலே போதை ஆயிடும். ரெண்டு லார்ஜ் அல்லது ஒரு பீர் (பிரா) ...err ...அது பீரா .அவ்வோளோதான் நம்ம கெப்பாகுட்டி .
சரி இப்போ என்ன நடந்ததுன்னா...? midnight 2.45 am - அதிகாலை . திடீரென்று ஒரு சத்தம் . ''மதர் சூத் ...ஐ ஆம் ரெக்கோர்டிங் ..." அவ்வோளோதான் . நானே இப்போ தான் லேப்டாப் -ப கவுத்தி மூடி கடைய சாத்திட்டு வந்து படுத்தேன் 2 மணிக்கு ....அது பொறுக்கல . கத்தி எழுப்பிட்டானுங்க .எல்லாம் நம்ம பக்கத்துக்கு பால்கனி பரமசிவம் தான் .அனூப் . அவனுக்கு நேர் கீழ் வீட்டில் ஒரு பெங்காலி பேமிலி - எல்லாம் நம்மள மாறி சின்ன வயசு ஜோடிங்க தான் .(சந்தடி சாக்குல யூத் ஆயிக்க வேண்டியதுதான் ) ரெண்டு ஜோடி -ங்க . பெங்காலி பொண்ணுங்கள பத்தி பேசும்போதே எனக்கு பத்திகிட்டு வரும். அதுங்க சேர்ந்து தண்ணி அடிக்குங்க ...மலையாள பெண்குட்டிகளை போலெ ....பெங்காலி மலையாளி ரெண்டு பேருக்கும் ..ஒரு ஒற்றுமை - ரெண்டு பேருக்குமே -அரசியல் கம்யூனிசம் - பொண்ணுங்க கும்மு-யுனிசம் ...பாத்தாலே நமக்கு காண்டாயிடும் .இன்னொரு பெங்காலி ஜோடி அந்த பெங்காலிக்கு எதிர்வீடு . அவனுங்க ரெண்டு ஜோடிகளும் திக் ஆயிட்டானுங்க . எதிர் எதிர் வீடு. ஃப்ரைடே நைட் ஆயிட்டா போதும் ...ஒரே பார்ட்டி தான். இதில் நம்ம அண்ணன் அனூப்புக்கு காண்டு . ஏற்கனவே இதே போல் ஒரு அதிகாலை அட்ரோஸிட்டி பண்ணி விட்டு பக்கத்துக்கு பிளாட் எதிர் பிளாட்...பக்கத்துக்கு ப்லோக் ...எல்லாரையும் அண்ணன் சவுண்ட் விட்டு எழுப்பி விட்டு ....நாங்கள் எல்லாம் என்னமோ ஏதோவென்று தலையெல்லாம் 'பே ' வென்று சீவாமல் கூட கூடியதும் ...அண்ணன் 'ஓகே..கைஸ் ...கோ அண்ட் ஸ்லீப்...goodnight ' என்று கூலாக சொல்லிவிட்டு தோலை ஒரு குலுக்கு குலுக்கி விட்டு ...IT HAPPENS YOU KNOW...என்று விட்டு போய் விட்டார் .இன்னிக்கும் அதே சவுண்ட் ....பக்கத்துக்கு building-ல் படுத்திருக்கும் நான் உலுக்கி விழுந்து பால்கனிக்கு ஓடினேன் என்றால் ....பார்த்துக்கொள்ளலாம்.wife ,குட்டீஸ் எல்லாம் எழுந்து பால்கனிக்கு ஓடி பார்த்தால் ...சிறிது நேரம் ஒரு சவுண்ட்-ம் காணோம். பின் நம்ம அண்ணன் திடீரென்று appear ஆகி ...'பிரசன்னா ...ஸீ தே ஆர் ...ஷவுட்டிங் ...ஸ்மோக்கிங் ...பிரசன்னா ...' என்று அன்பொழுக சொல்லவும் ....குளிர்ந்து போனது. பின்னே ...அக்கினி நட்சத்திரம் கார்த்திக் ..'பிரபு .ஸீ தே ஆர் ...ஷவுட்டிங் ...ஸ்மோக்கிங் ...பிரபு 'என்றால் ...?என் wife -க்கு ஒரே ஆச்சர்யம் ....இவன் நம்ம பரமவைரி ஆச்சே...? -என்று.எதோ பெரிய தகராறு ஆயிடுச்சு போல அதான் எதிரி என்னையே அண்ணன் ஹெல்ப் -க்கு கூப்பிடுறார் என்று அலாரம் அடிக்க 'Anoop ..do you want me to come there anoop ?' என்றேன் .எஸ் னு சொன்னா கவுரவம் கொறஞ்சிருமாம் . ஸீ ..பிரசன்னா ..என்று மறுபடியும் அதே பாட்டு. அது எவ்வோளோ பெரிய எதிரியா இருந்தாலும் பேர சொல்லி கூப்பிட்டு பாருங்க பாஸ் ...இன்னிக்கு நைட் நான் அதைத்தான் கத்துக்கிட்டேன்.உடனே மொபைல் மட்டும் எடுத்துக்கிட்டு கிளம்பிட்டேன்.எவன்டா அது என் friend அனூப் கிட்டே வால் ஆட்டுறது ...டாய்ய்ய் ....வேகமா போயி தலைய ரெண்டு 'வரு வரு ' வேற ....ஆமா அவன் சண்டை போட்டது பெங்காலி girls கிட்டே வேற....சும்மா ஒரு தொலைநோக்கு தான் .போனா ரெண்டு ஜோடியும் இவனும் ஒரே கையறா கையறா ....என்ன 'சொல்வது உண்மை' ஜட்ஜ்-ஆக்கி மாறி மாறி குற்றச்சாட்டு. நம்மாளு 2.30மணிக்கு கதவை தட்டி ' தம்பி தம் இருக்கா 'ன்னு கேட்ருக்கான் . ஆனா அவன் சொல்ற குற்றச்சாட்டு ...தம் வாசம் தாங்கல ...அதான் திட்டுனேன்.why are you partying at this time ? - anoopwhy are you asking me cigarette...knocking at my door ...at this time ? - bengali guys
இவனுங்களுக்கெல்லாம் எவன்டா கலியாணம் பண்ணி வச்சது . எல்லாம் ஸ்கூல் பசங்க டா. பச்ச மண்ணுங்க ...நைட் 2.45க்கு சண்டை போடுற காரணத்தை பாத்தீங்களா....அப்புறம் தான் தெரிஞ்சுது நம்ம அண்ணன் ஒரு குடிகார நாயி ன்னு . சொன்னதே சொல்லிக்கிட்டு . கீழ விழுந்து ஒடஞ்ச ரேடியோவ முழுங்கிட்டு திரு திரு ன்னு நிக்குது -ன்னு .இருந்தாலும் அந்த பெங்காலி லேடி பேசுனது எனக்கு அழகாவும் ...அப்புறமா ஞாயமாவும் பட்டதால....'அனூப் ...நீ போ ...போய் தூங்கு 'என்றேன் பேசாமல் மேல போனான். பின் யோசித்து விட்டு 'இவன் சொன்ன ஒடனே நாம எதுக்கு மேல போனோம் -ன்னு யோசிச்சிருப்பான் போல...குடிகார கபோதி . அவன் லூசு-ன்னு தெரியும். பட் குடிகார லூசுன்னு இப்போதான் தெரியும். அவனை ஆறுதல் படுத்தி வீட்டில் விட்டுட்டு கிளம்பும்போது கேட்டான் . 'you drink ?' NO i don't -என்றேன் . மறுபடியும் 'You drink ? -என்றான் . once in a month -என்றேன் .then come ..come...give me a company - மொபைலிலில்
கருத்துகள்
கருத்துரையிடுக