அன்பே சிவம் -சிவமே அன்பு
Unpay சிவம் படம் கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன?
#அன்பே சிவம்,
படத்தை பற்றி நிறைய எழுத இருப்பதால் முன்னுரை எதுவும் இல்லாமல் படத்தை பற்றி பார்ப்போம்.
அன்பே சிவம் படம் நிறைய தத்துவங்களை பேசும் படம்
- Communism
- Atheism
- Capitalism
- Globalization
கடவுள் னா என்ன? வாழ்க்கை னா என்ன?
என பல விடயங்களை விவாதிக்கும் படம் அன்பே சிவம்.
அன்புதான் கடவுள், அன்பை காட்டும் மக்கள் தான் என கமல் கதை, திரைக்கதை எழுதி விவரித்த படம் தான் அன்பே சிவம்.
-1-
டைட்டில் கார்டு போடும்போது உலகம் உருவாகும் அமைப்பையும், மூலக்கூறுகளையும் காட்டி பின்னர் சிவன் உருவத்தில் கடவுள் மற்றும் ஆண், பெண் குறியீடுகளை காட்டி டைட்டில் கார்டு அன்பே சிவம் என்று தோன்றும்.
அன்பே சிவம் என்ற எழுத்தின் பக்கத்தில் புள்ளிக்கு (.) பதிலாக கமா (,) போடப்பட்டிருக்கும். அன்பிற்கு எல்லை இல்லை என்பதனை டைட்டிலே சொல்லி விடுகிறார் கமல்.
கமலின் பெயர் நல்ல சிவம் மாதவனின் பெயர் அன்பு அரசு..
மாதவனின் முதல் பெயரையும் கமலின் இரண்டாவது பெயரையும் சேர்த்து படத்தின் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
-2-
நாத்திகம் மற்றும் கம்மியூனிஸத்தை குறிக்கும் விதமாக கமல் பெரும்பாலான காட்சியில் கருப்பு மற்றும் சிவப்பு உடை அணிந்து வருகிறார்.
தனக்கு அதிகம் பேசரவங்களை பிடிக்காது என கூறும் மாதவனின் எண்ணத்தை வெளிப்படுத்தும் விதமாக "allergic to morons " என்ற வாசகம் அவரது உடையில் உள்ளது.
-3-
வீட்டில் லெனின் போட்டோ
ஓவியத்தில் அறிவாள் சுத்தி மற்றும் கார்ல் மார்க்ஸ் படம் என தீவிரமாக கம்மியூனிஸ்ம் பேசுகிறார் கமல்.
இப்படி படம் முழுவதும் பின்புலத்தில் டீடேல் வொர்க் செய்து பிரம்மிக்க வைக்கிறார் கமல். கம்மியூனிஸ்ம் பேசும் கமல் கோக் மற்றும் பெப்சி போன்ற கம்பெனி நடத்தும் அரசியலை வசனங்களில் விளக்குகிறார்.
-4-
பிளாஷ்பேக் ல் வரும் கமல் கதாபாத்திரம் சப்தார் ஹாஷ்மி வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது. சப்தார் ஹாஷ்மி என்பவர் தெருக்கூத்து நாடக கலைஞர் மற்றும் கம்மியூனிஸ்ட் ஆவார். இவர் கம்மியூனிஸ்ஸ புரட்சி செய்யும்போது கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-5-
நாத்திகம் பேசும் கமல் கடவுளின் பிரதிபலிப்பாக தன்னை காட்டிக்கொள்கிறார். கமல் விபத்துக்கு முன்னர் நல்லா என்ற பெயரையும் விபத்துக்கு பின்னர் சிவம் என்ற பெயரையும் உபயோகிக்கிறார்.
தற்போதைய நவீன உலகின் வாழ்க்கை முறையில் வாழும் இளைஞனாக மாதவன், தனக்கு அன்பு பிடிக்காது என கூறி பெயரில் அரசு (அர்ஸ்) மட்டும் உபயோகிக்கிறார்.
கமலுடன் மாதவன் செய்யும் பயனத்தில் வாழ்க்கையை புரிந்து கமல் கொள்கைகளை உணர்ந்து மாறுவதுதான் படத்தின் கதை.
-6-
கமல் மற்றும் மாதவன் இருவரும் எதிரெதிர் சிந்தனை மற்றும் எண்ணங்களை கொண்டவர்கள். இதன் பிரதிபலிப்பை வசனங்களில் காணலாம்,
ஹோட்டல் அறையில் மாதவன் தன்னுடையது ஏபி நெகடிவ் என கூறுவார். அதற்கு கமல் தன்னுடைய பிளட் குரூப் ஓ பாசிடிவ் என கூறுவார்.
இது கமல் நேர்மறையான சிந்தனைகளை உடையவர், மாதவன் எதிர்மறையான சிந்தனைகளை உடையவர் என்பதனை மறைமுகமாக குறிக்கும்.
-7-
மாதவன் முதல் காட்சியில் கமலை தீவிரவாதி என சந்தேகப்பட்டு போலிஸிடம் மாட்டி விடுவார்.
கமலின் நண்பரையும் திருடன் என அடிக்க செல்வார். அதற்கு கமல் யாரையும் முகம் மற்றும் உடையை பார்த்து முடிவெடுக்க கூடாது என சொல்வார். மேலும் தற்போது கொள்ளை அடிப்பவர்கள் டிப் டாப் ஆக பார்க்க நன்றாக கூட இருப்பார்கள் என சொல்வார்.
அதற்கேற்போல் மாதவன் ரயிலில் பார்க்க நன்றாக உள்ள ஒருவரிடம் தன்னுடைய உடைமைகளை தவிப்பார். அவரின் பெயர் உத்தமன் என சொல்வார். இது இன்றைய மனிதர்களை மன நிலையை விளக்கும் அழகான காட்சி.
-8-
மாதவன் ஹோட்டலில் குளிக்க செல்லும்போது ஒரு கோமனம் அங்கு தொங்கும். அதனை பார்த்து ஏன் இப்படி போட்டு இருக்கிறீர்கள் என கேட்பார்.
அந்த கோமனம் கமலுடையது விபத்தில் காலில் ஏற்பட்ட பிரச்சனையால் தன்னுடைய காலை மடக்க இயலாது, இதன் காரணமாக அவர் நாம் அணியும் உள்ளாடைகளை அணிய இயலாது. அதனால் கமல் கோமனம் கட்டும் பழக்கம் உடையவர் எனபதனை கூறுகிறது அந்த காட்சி.
-9-
மற்றவர் போல சாதாரண காலணிகள் அணிய இயலாது எனவும் கமல் சொல்வார். அவருக்கு வலது கால் உயரம் குட்டையாக இருக்கும். இதனால் அதற்கென வடிவமைக்கப்பட்ட காலணி மட்டுமே பயன்படுத்த முடியும் என சொல்வார். இதனை ஹோட்டலில் கமல் படுத்திருக்கும் காட்சியில் பார்த்தால் தெரியும்.
அப்புறம் சுனாமி - சுனாமி அப்பவே சொல்லி இருப்பார் தீர்க்கதரிசி.
-10-
கமலும் மாதவனும் ஒன்றாகதான் பயணிக்கிறார்கள் இருப்பினும் கமலுக்கு தன்னுடைய காதலியை மாதவன் திருமணம் செய்ய போகிறார் என்பது முன்னாடி தெரியாமல் போகும் என்ற கேள்வி நம்முள் எழும்.
படத்தில் கிரண் பெயர் பால சரஸ்வதி, கமல் தன்னுடைய நல்ல சிவம் என்ற பெயரில் முதல் பெயரையே உபயோகிப்பார், அவர் நாத்திகர் என்பதனால் நல்லா என்றுதான் சொல்வார். இதனால் கிரணை அவர் பாலா என்று தான் அழைப்பார்.
மாதவன் தன்னுடைய அன்பு அரசு என்ற பெயரில் இரண்டாவது பெயர் மட்டுமே உபயோகிப்பார். அவருக்கு அன்பு பிடிக்காது என்பதால் இரண்டாவது பெயரையும் ஸ்டைலாக அர்ஸ் என்றுதான் சொல்வார். இதனால் கிரணை அவர் சர்ஸ் என சொல்வார் (சரஸ்வதியின் சுருக்கம்)
இதனால் கமலால் யூகிக்க முடியாமல் போகிறது.
-11-
படத்துல கெட்டது பண்ற கந்தசாமிப் படையாச்சி எந்த பிரச்சினை வராம சந்தோஷமாக வாழராறு.
படத்துல நல்லது மட்டுமே பண்ற நல்ல சிவத்துக்கு நிறைய கஷ்டம் வருது, அவருடைய வாழ்க்கை பாதிக்கப்பட்டது உடல் சிதைந்து நொண்டியா வாழுறாரு, அவருடைய காதலும் சேரவில்லை.
இந்த இடத்தில கடவுள்னு ஒன்னு இருக்கா இல்லையான்னு நமக்குள் கேள்வி எழுப்புகிறார் கமல்ஹாசன். கமல் செய்த புண்ணியத்தில் தான் அவர் விபத்தில் தப்பினார் என சொல்லலாம் இதனால் ஓடிசாவில் ஏற்படும் பெரிய வெள்ளத்துக்கு அவர் உதவி செய்கிறார்.
-12-
படத்தில் கமலின் நண்பனாக வரும் பவுன் ஒரு முக்கிய கதாபாத்திரம். இவர்கள் இருவரும் பஸ்ஸில் செல்லும்போது விபத்துக்குள்ளாகி கமல் பாதிக்கப்படுவர். இந்தக் காட்சியில் கமலுக்கு தப்பிக்கும் வாய்ப்பு இருக்கும் எனினும் அவர்களுக்கு உதவி செய்யப் போய் தன்னை பெரிய விபத்துக்குள்ளாகும். இதனால் அவர் திருமணம் நடைபெறாமல் போகும்.
மாதவன் ஒரு சிறுவனுக்கு ரத்தம் கொடுத்து காப்பாற்ற முயற்சிப்பார். அப்போது அந்த சிறுவன் இறந்து விடுவான். அந்த காட்சிக்கு முன்னர் கமல் அந்த சிறுவனிடம் உன்னுடைய பெயர் எனக்கு என்ன என்று கேட்பார் அதற்கு அவன் பவுன்ராஜ் என்ன சொல்லுவான், கமல் அதற்கு மறுபடியும் பவுனா என சொல்லுவார். அந்த இடத்தில் பவுன் என்று நபரினால் ஏற்கனவே பெரிய விபத்து ஏற்பட்டது மறுபடியும் நமக்கு பெரிய விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் அந்த வசனத்தை சொல்லுவார்.
-13-
ஒரு பாடலில் கமல் பட்டாசினை கொளுத்தும் போது அதில் G4 எழுதப்பட்டிருக்கும்.
மற்ற நாடுகளைவிட G4 நாடுகளில்தான் முதலாளித்துவம் அதிகமாக உள்ளது என அவற்றை விரட்ட வேண்டும் என்று மறைமுகமாக கூறுகிறார்.
-14-
படத்தில் வரும் நாய் ஒரு முக்கியமான கதாபாத்திரம்.
கமலின் கதாபத்திரத்திற்கு உவமையாக நாயை பயன்படுத்தி இருப்பார். கமலுக்கு விபத்து நடக்கவும் நாய்தான் காரணம் கமல் உயிரை காப்பாற்றியதும் அந்த நாய்தான்.
நாயை அடிக்க மக்கள் விரட்டும்போது தான் நாய் கமலிடம் சென்று தஞ்சமடையும் அதனால் தான் கமல் உயிர் பிழைப்பார்.
நாயின் பெயர் சங்கரன் - இந்த பெயரும் சிவனையே குறிக்கும். கமலுக்கு அடிபட்டது போலவே நாயுக்கும் வலது கால் மற்றும் தலையில் அடிபட்டிருக்கும்.
அன்பிற்கு உதாரணமாக சிறந்த விலங்காக உள்ளது நாய் அல்லவா, ஒரு காட்சியில் Dog என்ற வார்த்தையை திருப்பி போட்டால் God என வருகிறது என கமல் சொல்வார். அன்புதான் கடவுள் என்பதனை போதிக்கிறார். மேலும் மாதவன் பல வசனங்களில் நாயை பற்றி பழமொழி சொல்வார்.
இறுதியில் மாதவன் மாறிய பிறகு கமல், மாதவன் மற்றும் நாய் மூவரும் அன்புதான் கடவுள் ஒரே கோட்டில் பயனிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதனை மிர்ரர் ஷாட் மூலம் விளக்கி இருப்பார்.
-15-
ஒரு காட்சியில் கடையில் நாய்க்கு ஒரு பந்து வாங்குவார்கள். அப்போது காசு தேவை இல்லை கிரெடிட் கார்டு இருந்தால் போதும் எதையும் வாங்கி விடலாம் என மாதவன் சொல்வார். கிரெடிட் கார்டு இருந்தா உலகையே வாங்கி விடலாம் என கமல் சொல்வார்.
அதற்கேற்றார்போல் நாய்க்கு வாங்கிய பந்தில் உலக வரைபடம் இருக்கும். பிற்காலத்தில் கிரெடிட் கார்டு உலகில் பெரிய பங்கு வகிக்கும் என கமல் மறைமுகமாக அந்த காட்சியில் கூறுகிறார்.
-16-
சோவியத் யூனியன் அழிந்து போய்விட்டது கம்மியூனிஸ்ம் அழிந்து விட்டது என மாதவன் கூறுவார். அதற்கு தாஜ்மஹால் அழிந்து விட்டால் காதலிப்பதை நிறுத்தி விடுவீர்களா என கேட்டார்.
கம்மியூனிஸ்ம் என்பது கொள்கை மட்டுமல்ல உணர்வில் கலந்தது என கமல் கூறுவார்.
-17-
கிளைமாக்ஸ் காட்சியில் நாசர் இனி யாரும் சம்பள உயர்வு கேட்டு போராட போவிதில்லை இத்துடன் அழிந்து விடும் என சொல்வார்.
அதற்கு கமல் நான் ஒரு கருவி, ஆணை அடித்தவுடன் சுத்தியலை ஓரமாக வைத்துவிடனும், நெல்லை அறுத்தவுடன் அரிவாளை ஓரமாக வைத்துவிடனும் என சொல்வார்.
இது கம்மியூனிஸ்ம் symbol ஆன அறிவாள் சுத்தியை குறிக்கும். என்னை அழித்தால் கம்மியூனிஸ்ம் அழியாது என்பதனை கமல் இங்கு குறிப்பிடுகிறார்.
-18-
கிளைமாக்ஸ் முன்னர் கமல் மற்றும் மாதவன் இடையேயான உரையாடல் காட்சி பல பரிமானங்களை கொண்டது.
ஒரு
கோணத்தில் என்ன வாழ்க்கை இது என புலப்பும் மாதவன் இந்த சமயத்தில் தான்
கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற சந்தேகம் வருகிறது என கமலை பார்த்து
பின்னர் இல்லை எனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது என கூறுகிறார்.
இது கமல் நாத்திகர் மாதவன் ஆத்திகர் என்பதனால் கூறுவது போல் இருக்கும்.
ஆனால் மறு கோணத்தில் கமல் தான் கடவுள் என்பதனை மாதவன் ஒப்புகொண்டது போல் இருக்கும்.
-19-
படத்தில் காட்டப்படும் ஓவியம் கார்டூனிஸ்ட் மதணால் வரையப்பட்டது.
இது ஓவியர் சால்வேடார் டால்லி படத்தில் இன்ஸ்பைர் ஆனது. மேலும் இந்த படத்தில் வசனங்களை எழுதியவர் மதண் ஆவார்.
-20-
படத்தில் ஒவ்வொரு பாடல்களும் முக்கியமானது.
ஏலா மச்சி மச்சி பாடலில் உலக பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் பண மதிப்பை விளக்குகிறார்.
தெருக்கூத்து பாடலில் கம்மியூனிஸ்ம், கேபிடலிஸ்ம், கார்பரேட் மற்றும் MNC பிரச்சனைகளை விளக்குக்கிறார்.
பூவாசம் புறப்படும் பாடலில் காதல் மற்றும் ஓவியத்தின் சிறப்பை விளக்குகிறார்.
அன்பே சிவம் பாடலில் அன்புதான் கடவுள் என்பதனை கண்முன்னே நிறுத்துகிறார் கமல்.
அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா!
கருத்துகள்
கருத்துரையிடுக